Tuesday, May 01, 2007

யாரிடம் கற்றோம் ?

ஆடு தழைகளைத் தின்றதாலே
நாம் கீரைகளை உண்கிறோமா ?

புலி மானைத் தின்றதாலே
நாம் ஆட்டை உண்கிறோமா ?

எல்லைச்சண்டை அவை போட்டதாலே
நாம் சண்டை இடுகிறோமா ?

கூட்டமாய் அவை திரிந்ததாலே
நாம் நட்பாய் இருக்கிறோமா ?

மீனைக் கண்டு படகையும்
மானைக் கண்டு ஊர்தியும்
பறவையைக் கண்டு விமானமும்
பல்செயலும் படைப்பும் அவைபோலே !

இயற்கையாய்ப் பலவற்றில் மிருகமே
நமது முன்னோராய் இருந்திருக்க

சத்தமிடும் பேசா மிருகத்திடம்
கற்றிருக்க நமக்கு வாய்ப்பில்லை

மார்தட்டிச் சிரிக்கும் குரங்கிடமும்
நம்மூத்தோர் கற்றுக் கொண்டதில்லை

எவரிடம் எப்படிக் கற்றுக்கொண்டோம்
பேச்செனும் மாயக் கலைதனை ?

பின்பு வந்தது குகைச்சித்திரம்
அதன்பின்னே வந்தது எழுத்துருவம்
மனதில் எழுகிற திவ்வெண்ணம்
விடை காணத்துடிக்குது எனதுள்ளம் !

27 comments:

 1. 'வந்த நாள் முதல்' மாதிரி போகுதேன்னு பாத்தேன். கடைசில எங்கயோ போயிட்டிங்க. நிஜமாலுமே 'எங்கயோ போயிட்டிங்க'. நல்லாயிருக்கு.

  என்ன உங்க மகளோ, மகனோ, துணையோ ரொம்ப 'பேசினாங்களா', நேத்து? :-)

  ReplyDelete
 2. கண்ணதாசன் கண்ணீர் வடிப்பாரா தெரியல்ல. ஆனா நான் ஆனந்தக் கண்ணீர் வடிச்சேன். இது கவிதையா அல்லது காவியமா புரியல்ல‌

  புள்ளிராஜா.

  ReplyDelete
 3. நன்றி நாகு.

  நல்லா கேட்டீங்க ...

  "என்னாதுதுதுது"னு சமையலரையிலிருந்து சத்தம் வந்தது உங்களுக்கு எப்படிக் கேக்கும் !

  எழுதவிடாம செஞ்சிரப்போராங்க ;-)

  ReplyDelete
 4. சமீபத்தில 'மொழி' படம் பார்த்த effect-ல தோன்றியது.

  ReplyDelete
 5. என்ன கதைய மாத்தறீங்க. மொழி பார்த்ததாலயா? இல்ல துணையின் 'மொழி'யை கேட்டதாலா?

  அப்படி என்ன பேசினாங்க. மனுஷனுக்கு எப்படி பேச்சு வந்ததுங்கற வரைக்கும் ஆராய்ச்சிக்கு போய்ட்டீங்க?

  ReplyDelete
 6. சதங்கா,

  (இந்த முறை உங்க பெயரை சரியா எழுதிட்டேன் நல்லா பாத்துக்கங்க, அடுத்த முறை சரியா எழுதுவேன்னு உத்திரவாதம் தர முடியாது)

  எழுதுவது யார் என்று கொஞ்சம் மண்டையைக் குடைய வைத்து விட்டீர்கள். மிக நல்ல முயற்சி.

  அன்புடன்,

  முரளி

  ReplyDelete
 7. நாகு,

  இன்னிக்கி, நேத்தா பேசறாங்க ... அது நடக்குது பல வருசமா ;-)

  உங்க கணிப்புப் படி அது கரெக்டா இருந்தா இக்கவிதையை என்னிக்கோ எழுதிருப்பேனே !

  ReplyDelete
 8. முரளி,

  வாசித்துப் பின்னூட்டமைக்கு நன்றி

  பேரைத் திருத்திக் கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி

  //அடுத்த முறை சரியா எழுதுவேன்னு உத்திரவாதம் தர முடியாது)//

  அப்புறம் உங்கள மூராளீ னு அழைக்க வச்சிடாதிங்க :))

  சொல்லியதைச் சொல்லி அது தொடர்பா சொல்லாத ஒன்னையும் சொல்லனும்னு நெனைக்கற ஆள் அடியேன். அதை இப் பதிவிலும் சொல்லிருக்கேன்னு நெனைக்கறேன் ?!

  ReplyDelete
 9. கவிதை நல்லா இருக்கு, சதங்கா.

  மண்டையைக் குடைந்து கொண்டதுக்கு பலன் இருந்ததான்னு சொல்லலயே, முரளி??

  ReplyDelete
 10. சதங்கா,

  என் பெயரை முறாளீ என்று தான் இங்கு அழைக்கிறார்கள். அதுக்கெல்லாம் அசர்ர ஆளு நாங்க இல்லைன்னு அவங்களுக்குத் தெரியலை.

  சதங்கா ஒரு ஆண் என்ற அளவிற்கு நாகு கோடிட்டு காட்டிவிட்டார். என்ன அண்டை அசல்ல பாக்ரப்ப கண்டுபிடிச்சிடுவோமில்ல.

  அன்புடன்,

  முரளி.

  ReplyDelete
 11. 'துப்பறியும் சாம்பு' முரளி,

  //சதங்கா ஒரு ஆண் என்ற அளவிற்கு நாகு கோடிட்டு காட்டிவிட்டார்//

  நாகு எங்கே கோடிட்டு காட்டினார் ? உங்க பின்னூட்டம் பார்த்த பிறகு, நாகுவோட பின்னூட்டங்களை மறுமுறை வாசித்துப் பார்த்தேன். அப்படி ஒன்றும் தெரியவில்லையே.

  ஒரு அனுமானம். எனது பதிலை வைத்து நீங்க அந்த எண்ணத்திற்கு வந்திருந்தால் மன்னிக்கவும். இந்தக் காலத்துல யாரு சமையலரையில் ரொம்ப நேரம் இருக்கானு யோசிச்சுப் பாருங்க ! வேற எதுவும் எனக்குத் தோன்றவில்லை.

  //என்ன அண்டை அசல்ல பாக்ரப்ப கண்டுபிடிச்சிடுவோமில்ல.//

  ஆஹா கெளம்பிட்டாகப்பா ... கெளம்பிட்டாக

  நாகு >> சொன்ன சொல் காப்பாத்துவிங்கள்ல ?

  ReplyDelete
 12. என்ன முரளி - சும்மா போட்டுப் பாக்கறீங்களா - யார்னு தெரியரதுக்கு?

  நான் துணைன்னுதான் எழுதினேன். வியா, வன்னான்னு சொல்லலியே.

  நம்ப படத்துல வர்ர மாதிரி இந்த யாரிடம் கற்றோம் பாட்ட தெருவுல பாடிட்டே போங்க. எந்த வீட்டு ஜன்னல் திறந்து உங்க மேல தண்ணி ஊத்தராங்களோ - அந்த வீடுதான் சதங்காவோடது. எந்த தெருவுன்னு கேக்கவேணாம்.

  சரி உங்க கூட என்ன அரட்ட - அடுப்புல தோசை தீயுது....

  ReplyDelete
 13. சதங்கா,

  //துணையின் 'மொழி'யை கேட்டதாலா? // -ன்னு நாகு எழுதியிருந்ததைப் பார்த்து அப்படி நினைச்சேன். அப்படியே, என் மூக்கு ரொம்ப நீளம்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டீங்க. இருக்கட்டும் அப்பரம் கவனிக்கறேன்.

  அன்புடன்

  முரளி

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா ... நாகு,

  உங்களுக்கு நையாண்டி நன்றாக வருகிறது.

  வாசித்து ரசித்து சிரித்தேன் (துணையோடு தான்).

  கலக்கிட்டிங்க.

  ReplyDelete
 15. முரளி,

  கவனிச்சிக்கறேன் ஒரு செக் வைக்கறிங்க. நான் சாம்புவை உதாரணத்துக்குத் தான் சொன்னேனே தவிர வேறு எண்ணத்தில் அல்ல. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் வேதனையோடு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ;-(

  அது சரி, கவிதைக்கான விடை யாராவுது சொல்லுவிங்கனு நானும் எதிர் பார்த்துக்கிட்டே இருக்கேன், நீங்க துப்பறியறதுலே இருக்கீங்க ... அத தூர வச்சிட்டு கொஞ்சம் யோசிங்க.

  உங்களையும், நாகுவையும் பின்னூட்டங்களின் வாயிலாகத் தான் படிக்க முடிகிறது. உங்க பதிவுகளையும் படிக்க என் போன்றோர் ஆவலாய் இருக்கிறோம்.

  (அப்பாடா, முரளி கொஞ்சம் busy ஆகிட்டாரு)

  ReplyDelete
 16. சதங்கா,

  அட சும்மா உங்கள வம்புக்கு இழுத்தா, இப்படி வருத்தப்படரீங்களே.

  கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கவிதைன்னு ஒன்னு ரெண்டு எழுதிட்டு இருந்தேன், அப்பரம் ஒரு சில நண்பர்கள் உனக்கு நல்லா வசனம் எழுத வருது அதனால அதை அப்படியே நாடகமா எழுதினா நாங்க நடிக்க ரெடின்னு சொன்னதினால கவிதை போனாப் போகுதுன்னு மன்னிச்சு விட்டுட்டேன். இந்தப் பதிவரின் கவிதைப் பற்றிய இந்த பதிவைப் பாருங்கள், இதுக்கு அப்பரம் எனக்கு கவிதை எழுதரதல இருந்த கொஞ்சூண்டு ஆசையும் அழிஞ்சு போச்சு.
  http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_19.html

  நம்ம ப்ளாக்ல அப்பப்ப கொஞ்சம் எழுதுவேன். நான் எழுதரதப் பாத்த உடனே அட இவனே எழுதரான் நாம ஏன் எழுதக்கூடாதுன்னு சிலபேர் வருவாங்கன்னு நினைச்சு நாகுவும் என்னை எழுத விட்டுடுவார்.

  ஒரு துப்பறியும் கதை (சாம்பு மாதிரி காமெடி இல்லை, கொஞ்சம் சீரியஸ் கதை) எழுத ஆரம்பிச்சு 4 அத்தியாயத்தோட நிக்குது. அதை 10 அத்தியாயத்தில முடிச்சுடலாம்ன்னு இருந்தேன், அது கொஞ்சம் மெகாத் தொடர் மாதிரி போயிடுச்சு, இப்ப எடிட்டிங் நடக்குது சீக்கிரம் வெளியிட்டு படுத்தரேன்.

  உங்க கவிதையை விமர்சிக்காமல் அதற்கு விடை தருவது கடினம், ஆனால் விமர்சிக்காமல் என் கருத்தைச் சொல்கிறேன்.

  தேடல் என்பது மனிதர்களிடம் இருக்கிறது.(அது மிருகங்களிடம் இல்லை என்று அறுதியிட்டு சொல்லும் தகுதி எனக்கு இல்லை). ஒரு வேளை அந்த தேடல் இருப்பதால்தான் ஒலியைக் கொண்டு மொழியைப் உருவாக்கினானோ?

  இதைப் பற்றிய என் மற்ற கருத்துக்களை என்றேனும் நாம் சந்திக்கும் போது விவாதிப்போம்.

  அன்புடன்,

  முரளி

  ReplyDelete
 17. //அட இவனே எழுதரான் நாம ஏன் எழுதக்கூடாதுன்னு சிலபேர் வருவாங்கன்னு//

  :-) அதான் இவ்ள பேர் எழுத ஆரம்பிச்சிட்டாங்களா? நான் ஏதோ நம்ப ரிக்கொஷ்ட்டுதேன் இம்புட்டு மருவாதன்னு நெனச்சிகினேன். கொஞ்ச நாளா சிலபேர் நான் எழுது, எழுதுன்னு பிராணன எடுக்கறேன்னு பாத்தாலே ஓடறாங்க, இல்லாட்டி போன எடுக்க மாட்டேன்றாங்க. இப்படி சுளுவா ஒரு வழி இருக்குல்ல.

  //இதைப் பற்றிய என் மற்ற கருத்துக்களை என்றேனும் நாம் சந்திக்கும் போது விவாதிப்போம்.//

  தன் முயற்சியில் சற்றும் தளராத முரளி மறுபடியும் சதங்கா-அடையாளம்-காணும் மரத்திலறினான்! ஆதி மனிதன் தேடலுக்குப் பின் அடுத்த தேடல் இதுதான்! வாழ்த்துக்கள்.

  ஜோக்ஸ் அசைட். முரளி - கொலைக்கேஸை கொஞ்சம் சீக்கிரம் கவனிக்கவும். முருங்கை மரம் எங்கேயும் போகாது.

  ReplyDelete
 18. ஆஹா - முரளி கவனிச்சீரா - நம்மளை பின்னூட்டப் புலவர்கள்னு வெண்பா பாடிட்டாரு சதங்கா. இருக்கட்டும். ஏதோ உங்களுக்கு பிளாக்கில் முதல் இடம் கிடைக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம். (இப்பல்லாம் விழுந்தா , புல்தரையா பாத்துதான் விழறது. மண் இருந்தாதானே ஒட்றதுக்கு)

  ReplyDelete
 19. முரளி,

  //இதுக்கு அப்பரம் எனக்கு கவிதை எழுதரதல இருந்த கொஞ்சூண்டு ஆசையும் அழிஞ்சு போச்சு.//

  வெட்டியே அதை 'நகைச்சுவை'யின் கீழ் வகைப்படுத்தி எழுதியிருக்காரே, கவனிக்கலையா ? கவிஞர்கள் தப்பா எடுத்துக்காதீங்கனு முன்னெச்சரிக்கையா முடிச்சிருக்காரே !!!

  இதெல்லாம் பாத்து நான் எழுதறத நிறுத்திட்டேன்னு சொல்றது நிறுத்திட்டு ...

  பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
  கொடுங் கூற்றுக்கிரை யெனப்பின் மாயும்
  பல வேடிக்கை மனிதரை

  நினையாமல் ...

  //ஒலியைக் கொண்டு மொழியைப் உருவாக்கினானோ?//

  இதுவும் கவிதை தான்.

  நாகு சொல்றத வழி மொழிகிறேன். கொலைக் கேசை முடிச்சி ...

  சீக்கிரம் பதிவப் போடுங்க.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 20. நாகு,

  நமக்கும் இந்த பஸ்ட்டுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லத்தான் இந்தப் பின்னூட்டம்.

  நாங்கள்லாம் பள்ளிக்கூடத்தில இருந்து வேலைக்கூடம் வரை கடசி பெஞ்சு ஆளுக :))

  //ஆதி மனிதன் தேடலுக்குப் பின் அடுத்த தேடல் இதுதான்!//

  P.B.S. வாய்ஸ் கேக்குது ?!!! இனிமை. நல்ல பதில்.

  ரெண்டு பேரும் 'தேடல்'னு சொல்லியது அற்புதம். அதையே விடையா ஏத்துக்குவோம். !!!

  தப்பிருந்தா சொல்லுங்க ...

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 21. சதங்கா
  எளிமை,அருமை, உங்கள் கவிதை.
  கவிதை என்றாலே காத தூரம் ஓடும் என்னையும் படிக்கவைத்துவிட்டது.

  ReplyDelete
 22. பேசுவதற்கு தகுந்த முறையில் பரிணாம விருத்தியடைந்திருந்த எமது தொண்டைக்குழியும் நாவும் இயற்கயான உந்துதலால் சில ஒலிகளை உண்டாக்கியிருக்கும். அவை எமது வாழ்வியலோடு தொடர்புடைய உணர்வுகளால் செழுமையடைந்து சொற்களாகப் பரிணமித்து மொழிகள் தோன்றியிருக்கும். ஆகவே விடை மிருகங்களை விட ஒரு படி அதிகமான பகுத்தறிவும் ஞாபகத்திறனும் என்று கூறலாமா?

  ReplyDelete
 23. வடுவூர் குமார், நவன், அனானி

  வாசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 24. நவன்,

  ஆழ்ந்த கருத்துக்களை உங்கள் பின்னூட்டத்தில் எழுதிருக்கீங்க. எனக்கு ஒரு விந்தையான கற்பனை தோனியது இப்படி:

  ஒரு ரகசியத்தை மற்றவரிடமிருந்து மறைக்க என்ன பண்ணலாம்னு 'தேடி' மொழி உருவாகி இருக்குமோ என்று.

  சைகை மூலம் சொன்னா மற்றவர்கள் பார்க்க முடியும். இல்ல எதுலயாவது கிறுக்கி வச்சாலும் பார்க்க முடியும். காதோடு காதா 'மொழி' கொண்டு சொல்லிட்டா அடுத்தவருக்குத் தெரியாது பாருங்க. அவரு போய் இன்னோருத்தர் கிட்ட சொல்றாரா இல்லையான்றது வேறு விசயம். ;-)

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 25. உங்களுடைய பதிலான 'தேடல்' தான் மிகப் பொருத்தம். அதுவே இனிமேலும் மனித சமுதாயத்துக்குப் பல புதிய பாதைகளைத் திறந்து செல்லும் என்பதுவே எனது ஆழமான நம்பிக்கை.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!