சென்னை விஜயத்தின்போது எடுத்த படங்களில் இரண்டு...
கூகுள் மட்டும்தான் அவர்களுடைய விஷயங்களை பீடா டெஸ்ட் என்ற பெயரில் வெள்ளோட்டம் விடமுடியுமா என்ன? நாங்கள் செய்ய முடியாதா என்கிறார் இவர்.
இவர் கடன் கொடுக்க மாட்டாராம். ஆனால் நம்மை எப்படியாவது கடனாளியாக்க மட்டும் தயார்!
Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts
Monday, September 01, 2008
Friday, March 28, 2008
காரு பாரு...
மேலே இருக்கும் படம் எந்த கார் கம்பெனி எந்த கார்களையெல்லாம் தயாரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த கார்சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்காகத்தான் அந்தப் படத்தை இங்கே போட்டிருக்கிறது. அது என்ன?
படத்தைக் கிளிக்கினால், பெரிதாகப் பார்க்கலாம்.
Monday, March 03, 2008
டென்னிஸோ டென்னிஸ்
எல்லாம் இந்த ஸானியா மிர்ஸாவினால வந்த வினை - புடவையோடு தான் டென்னிஸ் ஆடணும்னு ரூல் போட்டுவிட்டாங்க. என்ன பண்றது?
Sunday, November 18, 2007
படம் பாரு கடி கேளு - 20
டேய் எந்த எருமைடா என் மேலே தண்ணிய தெளிக்கிறது? ஒரு Head and Shoulders
shampoo கிடையாது, Yardley சோப்பு கிடையாது, Old Spice deodorant spray கிடையாது - தண்ணி தெளிக்கிறானாம் தண்ணி.
Friday, November 16, 2007
படம் பாரு கடி கேளு - 19
சே! 99% தள்ளுபடின்னு சொன்னதை நம்பி online ல குடும்பத்துக்கே ஆர்டர் பண்ணினேன். வந்த பாக்கெட்டை பிரித்துப்பார்த்தா இப்படியிருக்கு.
சுண்டி விரல் கூட கொள்ளாது போலிருக்கே!
Thursday, November 15, 2007
படம் பாரு கடி கேளு - 18
போராட்டத்திற்கு "பூசணிக்காய் மாலைக்கு பதில் வெங்காய மாலை தான் அணிவோம்" என்ற கோரிக்கைக்கு செவிசாய்த்த நம் தலைவருக்கு ஜே!
Monday, November 12, 2007
படம் பாரு கடி கேளு - 17
மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?
இங்கே தான் இருக்கா சிக்னல்?
"சிக்னல் ல வண்டியை நிறுத்தாம ஏன் போனே?" அப்படீன்னு தினமும் அந்த போலீஸ் என்னை பிடிச்சு டிக்கட் கொடுத்தாரு. சிக்னல் எங்கேன்னு கேட்டா இன்னி வரைக்கும் சொல்லாம அடம் பிடிச்சுட்டாரு.
Wednesday, September 19, 2007
ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)
சமீபத்தில் இருவர் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு பாடல் அப்படியே அற்புதமாய் M.G.R.ஐ இமிடேட் செய்திருப்பார் மோகன்லால். அதைப் பற்றி எனது பதிவை இங்கே காணலாம்.
http://vazhakkampol.blogspot.com/2007/09/flashback.html
http://vazhakkampol.blogspot.com/2007/09/flashback.html
Sunday, September 02, 2007
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
பார்க்கும் இடமெல்லாம் பட்டாம்பூச்சி
படம் பிடிக்க விடாமல்
பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி!
பார்க்கும் இடமெல்லாம் பட்டாம்பூச்சி
படம் பிடிக்க விடாமல்
பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி!
படம் பாரு கடி கேளு - 16
அமெரிக்காவுக்கு மாம்பழம் export பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க Qality Control ஆளுங்க ரொம்ப தான் படுத்தறாங்க. அந்த ஒரு அழுகல் மாம்பழத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன். கை தவறி எங்கேயோ விழுந்திடுச்சு. மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்போறேனோ!
படம் பாரு கடி கேளு - 15
அந்த ஓட்டு மெஷினை தொடாதே!
உனக்கு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன் ஓட்டு மெஷினுக்கு மேட்சிங்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரணும்னு! இப்போ என்னை பாரு!
படம் பாரு கடி கேளு - 14
ஜிப்பா காரர்: யோவ், சீக்கிரம் போட்டோ எடுய்யா. நானே இந்த உண்ணாவிரதம் எப்போ முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இந்த ஆளு வேற போஸ் குடுக்கிறாரு. சட்டு புட்டுன்னு போட்டோ எடு. எங்க வூட்டுல இன்னிக்கு மீன் கொழம்பு போலிருக்கு. வாசனை இங்கே வரைக்கும் வந்து மூக்க தொளைக்குது.
Thursday, August 30, 2007
Sunday, July 22, 2007
கோடை பிக்னிக் 2007
ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் கோடை பிக்னிக் ஹென்ரைகோ கௌண்டியிலுள்ள டோரி பார்க்கில் நடைபெற்றது. பெரியவர்கள், சிறுவர்கள் அனைவரும் கிரிக்கெட், உறியடி, கயிற்றிழு(அதாங்க டக் ஆஃப் வார்) போட்டிகளில் கலந்து கொண்டு களித்தார்கள்.
இவற்றில் சில படங்களை இங்கே காணலாம். இதில் சில வீடியோக்களும் இருக்கின்றன.
இவற்றில் சில படங்களை இங்கே காணலாம். இதில் சில வீடியோக்களும் இருக்கின்றன.
Friday, June 29, 2007
காய் காயா காய்த்திருக்கு
உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.
பாடல் :
படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்
படங்கள் :
பாடல் :
படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்
படங்கள் :
Thursday, June 21, 2007
படம் பாரு கடி கேளு - 11
அப்பா! என்ன கனம்! கடைசி வரை இந்த பளு தூக்கிற போட்டியிலே எதை தூக்கணும்னு சொல்லாம ஏமாத்திட்டாங்களே! என் முதுகு வேறு நமநமன்னு அரிக்குது. யாராவது சொரிஞ்சு விடுங்க ப்ளீஸ்!
Sunday, June 03, 2007
படம் பாரு கடி கேளு - 10
அப்பா அப்பா அந்த போலீஸ் மாமாவை கூப்பிட்டு அந்த துப்பாக்கி எங்கே வாங்கினார்னு கேட்டு எனக்கும் அது மாதிரி ஒரு துப்பாக்கி வாங்கி குடுப்பா!
டேய் கம்னு இருடா. ஹெல்மெட்டுக்கு பதிலா குல்லா போட்டுக்கிட்டு வந்திருக்கோம். அவருக்கு தெரியாம நைஸா நழுவிடலாம்னு பார்த்தா அவரை வேறு கூப்பிடு அப்படீங்கிறியே!
Subscribe to:
Posts (Atom)