Friday, April 17, 2015

பித்தனின் கிறுக்கல்கள் - 49

அனைவருக்கும் மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சமீபத்துல தமிழ் புத்தாண்டு அன்று என்னோட ரிச்மண்ட் நண்பர்களிடம் (நாகு மற்றும் சிலர்) அளவளாவினேன்.  அப்போது சொந்த குசல விசாரிப்புக்கு பிறகு எங்கள் பேச்சு தமிழ் சங்கத்து வளைப்பூ பக்கம் திரும்பியது.  அப்போது என்னை அவர்கள் மீண்டும் தமிழ் சங்க வளைப்பூவில் எழுத சொல்ல, அதற்கு என்ன சொல்லாம் என்று யோசிப்பதற்குள், ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு ஜகஜ்ஜால சாமியாருக்கு 27 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனை என்ற செய்தி வர அதை சாக்காக வைத்து எழுதுங்கள் என்று என் மற்றுமொரு ஆத்ம நண்பன் சொல்ல சரி என்று சொல்லி எச்சரிக்கை ஒன்றை வளைப்பூவில் பதிந்து விட்டேன்.  எச்சரிக்கை எதற்கென்றால், எமது கிறுக்கல்கள் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் யாருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் ஒன்று உடனடியாக சொல்லி விடலாம், இல்லை படிக்காமல் அடுத்தவருடைய பதிவிற்கு தாவி விடலாம்.  நாகு சொல்வது போல், என் கிறுக்கல்களை, நாகு, முரளி, மு.கோபாலகிருஷ்ணன், நான் என  நான்கு பேர்தான் படிப்போம் என்றால் ஒன்றும் ப்ரச்சனை இல்லை.  அதையும் மீறி யாரேனும் படித்து விட்டு திட்ட ஆரம்பித்தால், “அதான் அப்பவே எச்சரிக்கை போட்டு விட்டேனே” என்று ஜல்லியடித்து விடலாம் என்பதற்குத்தான் அந்த எச்சரிக்கை.

சொத்து குவிப்பு வழக்கு

2016-ல் தமிழக் சட்டசபைத் தேர்தல்

திக வீரமணி – தந்தி டி.வி. பேட்டி

ஜார்ஜியா மாகாணத்தின் ஜகஜ்ஜால சாமியார்

2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்

சினிமா
பேபி (ஹிந்தி)
லிங்கா
மீகாமன்
காக்கிசட்டை
என்னை அறிந்தால்
பூஜை /ஆம்பள



..................
முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம் ....
piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Wednesday, April 15, 2015

எச்சரிக்கை: பித்தனின் கிறுக்கல்கள் கூடிய விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.

எச்சரிக்கை:  பித்தனின் கிறுக்கல்கள் கூடிய விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. 

விரைவில் சந்திப்போம்.

பித்தன் பெருமான்

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.