டேய் எந்த எருமைடா என் மேலே தண்ணிய தெளிக்கிறது? ஒரு Head and Shoulders shampoo கிடையாது, Yardley சோப்பு கிடையாது, Old Spice deodorant spray கிடையாது - தண்ணி தெளிக்கிறானாம் தண்ணி.
இங்கே தான் இருக்கா சிக்னல்? "சிக்னல் ல வண்டியை நிறுத்தாம ஏன் போனே?" அப்படீன்னு தினமும் அந்த போலீஸ் என்னை பிடிச்சு டிக்கட் கொடுத்தாரு. சிக்னல் எங்கேன்னு கேட்டா இன்னி வரைக்கும் சொல்லாம அடம் பிடிச்சுட்டாரு.
அமெரிக்காவுக்கு மாம்பழம் export பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க Qality Control ஆளுங்க ரொம்ப தான் படுத்தறாங்க. அந்த ஒரு அழுகல் மாம்பழத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன். கை தவறி எங்கேயோ விழுந்திடுச்சு. மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்போறேனோ!
அப்பா! என்ன கனம்! கடைசி வரை இந்த பளு தூக்கிற போட்டியிலே எதை தூக்கணும்னு சொல்லாம ஏமாத்திட்டாங்களே! என் முதுகு வேறு நமநமன்னு அரிக்குது. யாராவது சொரிஞ்சு விடுங்க ப்ளீஸ்!
சிவப்பு முட்டாக்கு: என்னடீ இது சைதாப்பேட்டை மாதிரியே இல்லையே! கடை பேரெல்லாம் தெலுங்கில் எழுதியிருக்கே.
ரோஸ் முட்டாக்கு: நான் அப்போவே நினைச்சேன். ரொம்ப நேரம் ஓட்டுறாளேன்னு. இவ தான் "சைதாப்பேட்டை எனக்கு தண்ணி பட்ட பாடு கண்ணை மூடிக்கிட்டே ஓட்டுவேன்" னு சரடு விட்டா.
யோவ்! என் மேலிருந்து எறங்குய்யா. உன்னை நாய் துரத்துச்சுன்னா நான் என்னய்யா பண்றது? நானே இந்த ஊர்வலம் எப்போ முடியும் ஆணி படுக்கையிலிருந்து எப்போ எந்திரிக்கலாம்னு இருக்கேன். நாய் துரத்துதாம் நாயி.