Friday, February 27, 2009

யாரந்த சதங்கா?

மனுஷன் விகடனில் அவர் கவிதைக்கு லிங்க் கொடுத்ததையே மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அடக்கம் ஜாஸ்தியாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.

 விகடனில் கதை வெளியாயிருப்பதை சொல்லவே இல்லை. அடுத்த முறை கூப்பிடட்டும், பேசிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள், சதங்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். பாலு மகேந்திரா ரகுமானை சொன்ன பாணியில், ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

Thursday, February 26, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா.  ---      ---   ---எழுதியது யாரென்று தெரியவில்லை. நெஞ்சை பிசையும் பாடல். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு நீர்வை மகள் அனுப்பினார்.... 

ஒரு ஈழத்து நண்பர் சொன்னார்: " எனக்கு இந்த பிரச்சினை எப்படி முடியும் என்று கூட கவலையில்லை. சீக்கிரம் முடிந்தால் நிம்மதி"... 

எனக்கு மீண்டும் மீண்டும் கானா ப்ரபாவின் பதிவின் முகப்பில் அவருடைய சிரித்த முகத்திற்கு கீழே இருக்கும் வரிகள்தாம் மனதில் ஓடுகின்றன...  

ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்....

என்று தணியும் இந்தத் துயரம்?

Sunday, February 22, 2009

ரகுமானுக்கு வாழ்த்துக்கள்!
ஆஸ்கர் பரிசு பெற்ற முதல் தமிழர் ஏ. ஆர். ரகுமானுக்கு எங்கள் வாழ்த்துக்கள். பரிசு வாங்கும்போது தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றதற்கு எங்கள் நன்றி! மேலும், மேலும் உயர வாழ்த்துக்கள்!

Saturday, February 21, 2009

பஞ்சமில்லை பஞ்சமில்லை

பஞ்சமில்லை பஞ்சமில்லை

எங்கே என்ன பஞ்சம் என்று கேட்கிறீர்களா?
அந்த கால படங்களின் பெயர்களுக்கும் சர், இந்த கால படங்களின் பெயர்களுக்கும் சரி. பஞ்சமே இல்லை.

தமிழ் படங்களின் பெயர்கள் ஒரு பெரிய சுற்று (cycle) முடிந்து அடுத்த சுற்று ஆரம்பித்து விட்டாற்போல் இருக்கிறது.
அந்த கால படங்களில் சிலவற்றில் விநோதமானவை சில:

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
மணாளனே மங்கையின் பாக்கியம் (
அசட்டுப்பிள்ளை (1943)
மடசாம்பிராணி (1939)
குமாஸ்தாவின் பெண் (1941)
காலேஜ் குமாரி (1942)
டம்பாச்சாரி (1935)
டேஞ்சர் சிக்னல் (1937)
திகம்பர சாமியார் (1950)
கலிகால மைனர் (1945)
குட்டி (1937)
சகடயோகம் (1946)
சாந்த சக்குபாய் (1939)
சிரிக்காதே (1939)
பக்கா ரௌடி (1937)
பஞ்ஜாப் கேசரி (1938)
பிழைக்கும் வழி (1948)
பைத்தியக்காரன் (1947)
மாயா மச்சீந்திரா (1939)
மூன்று முட்டாள்கள் (1936)

இந்த கால தமிழ் படங்களின் சில அபத்தமானவைகளும், சில விநோதமானவைகளும் இதோ:

பொய் சொல்ல போறோம்
ஓடி போலாமா
வெண்ணிலா கபடி குழு
சற்று முன் கிடைத்த தகவல்
கதைன்னா சும்மா இல்லை
கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி
அதே நேரம் அதே இடம்
பேட்டை முதல் கோட்டை வரை
துபாய் ராணி
குளிர் 100 டிகிரி
மாயாண்டி குடும்பத்தார்
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு
குண்டக்க மண்டக்க
தெனாவட்டு திமிரு
திருட்டு பயலே
தொட்டி ஜயா
எம்டன் மகன்
நீ வேணும்டா செல்லம்
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
சிவா மனசுல சக்தி

இது போதாதென்று ஆனா ஆவன்னாவிலிருந்து ஒன்று இரண்டு என்று ஒன்றையும் விடு வைக்கவில்லை நம் தமிழ் திரையுலகம்:

உதாரணம்:

அ ஆ இ ஈ
ABCD
ஆதி
123
ரெண்டு
Plus 2
நியூட்டனின் 3ம் விதி
4 students
ஐந்தாம் படை
ஆறு
7G Rainbow colony
அந்த ஏழு நாட்கள்
சென்னை 28
வருஷம் 16
16 நாட்கள்
16 வயதினிலே
1977
February 14th
June R
டிசம்பர் பூக்கள்

பொருட்களின் பெயர்களிலும் சில படங்கள்:

விசில்
வில்லு
வேல்
கோவில்
கொக்கி
கிரீடம்
தொலைபேசி
தாஜ் மகால்
சூரியன்
ஜீன்ஸ்
பாறை
நிழல்கள்
ஆல்பம்

பெயர் பஞ்சம் ஏற்பட்டு ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களிலும் சில பெயர்கள்:

ஜி

பொய்
பொரி
தாஸ்
தம்
பாபா
பாலா
ரன்
சாமி
கிரி
கஜா
பையா

கீழ்கண்டவைகளை எத்துடன் சேர்ப்பது?

ஐ லவ் யூ டா
அபியும் நானும்
மதுரை சம்பவம்
குரு என் ஆளு
அந்தோணி யார்
அடடா என்ன அழகு
அங்காடி தெரு
அச்சமுண்டு அச்சமுண்டு
ரைட்டா தப்பா

பிரபல பாடல்களை நினைவூட்டும் பெயர்களும் சில:

நினைத்தாலே இனிக்கும்
ஒளியும் ஒலியும்
அலையோடு விளையாடு
எங்க ராசி நல்ல ராசி
யாவரும் நலம்
காதலன் காதலி
குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
சொல்ல சொல்ல இனிக்கும்
சிந்தனை செய்
வானம் பார்த்த சீமையிலே
என்னை தெரியுமா

ரிப்பீட்டே! படங்களும் சில:

ஜகன் மோகினி
பில்லா
வாலிபன் சுற்றும் உலகம்
திருவிளையாடல் ஆரம்பம்
ராமன் தேடிய சீதை
நான் அவனில்லை
God Father
தசாவதாரம்