என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷ் ராமநாதன் இன்று லூகேமியாவுடன் போராடிக் கொண்டிருக்கிறான். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சென்ற வருடம் போராடி வென்றவன், இப்போது மீண்டும் போரைத் தொடர்ந்திருக்கிறான். முழு விவரங்களை இங்கே காண்க => http://www.helprajesh.com
இந்த Bone Marrow விஷயத்தில், போன் மாரோ(bone marrow) தானம் செய்ய நம் வர்க்கத்தினரால்தான் முடியும். நம் வர்க்கம் என்றால் தெற்காசிய மக்கள். ஆகவே எவ்வளவு பேர் bone marrow donor ஆக பதிவு செய்ய முடியுமோ, ராஜேஷ் போன்றவர்களுக்கு உயிர் வாழ வாய்ப்புகள் அதிகமாகின்றன. ராஜேஷ் மாதிரி இன்னும் சில பேர் இருக்கிறார்கள். சிகாகோவில் ஆறு வாரங்களே நிரம்பிய பிரனவுக்கு தானம் செய்ய அவசரத் தேவை.
நம் ரிச்மண்டில் வரும் புத்தாண்டு தினத்தன்று ஹிந்து மையத்தில் bone marrow donor registration நடக்கவிருக்கிறது. இதில் பதிய தேவையானதெல்லாம் ஒரு காகிதத்தை நிரப்புவதும், ஒரு குச்சியால் உங்கள் உள்கன்னத்தை தடவிக் கொடுப்பதும்தான். உங்களுக்கு ஒரு செலவும் இல்லை, பதிவு செய்ய ரத்தத்துளி தேவையில்லை. ஒரு உயிரைக் காக்க தயாள குணம் மட்டுமே தேவை.
உங்கள் ஊரிலும் மக்களை பதிவு செய்யலாம். சமார் நிறுவனம் தேவையான பொருட்களை இலவசமாக அனுப்புவார்கள்.விவரங்களுக்கு http://www.samarinfo.org. போன் மாரோ தானம் பற்றிய முழு விவரங்கள் சமார் தளத்தில் அமெரிக்க போன் மாரோ தளத்திலும்(http://www.marrow.org) காணலாம்.
இதைப் படிக்கும் அனைவரும் நீங்கள் பதிவது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களையும் பதிவு செய்யவிக்க வேண்டும். உங்களால் முடிந்த நிதியுதவியும் செய்தால் நல்லது.