வலைச்சரத்தில் சதங்காவை இந்த வார ஆசிரியர் ஆக்கியிருக்கிறார்கள்! முதல் பதிவில் ரிச்மண்ட் வாழ்க்கையையும்(என்னையும்) நினைவு கூர்ந்திருக்கிறார் மறக்காமல். நன்றி சதங்கா!! மேலும் அவர் எழுதிய பதிவுகளில் அவருக்கு பிடித்தவற்றையும் அழகாகப் பட்டியலிட்டிருக்கிறார்.
இரண்டாவது பதிவில் அவர் மனதில் நின்ற பதிவுலகில் படித்த கவிதைகளையும், கவிஞர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் மயக்கத்தில் உள்ள எனது நண்பன் மகேஷிலிருந்து ஆரம்பித்து கலக்கலாகப் போகிறது அவரின் அறிமுகம்.
மூன்றாவது பதிவில் கதைகளை அறிமுகப் படித்தியிருக்கிறார். நான்காவதிற்கு எங்கே போகிறார் எனப் பார்ப்போம். :-)
வலைச்சரத்தில் சதங்காவின் மீதமுள்ள நாட்களுக்கான பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து தூள் கிளப்ப வாழ்த்துக்கள்!