அடிக்கடி என் மலேசிய நண்பர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதே பிழைப்பாய் போய்விட்டது.
சில வருடங்களுக்கு முன் இங்கு வசித்துவந்த ஒரு மலேசியத் தமிழ்த் தம்பதிகள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரிச்மண்ட் வந்திருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது நாளைக்கு பசியாறைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டார்கள். அது என்ன பசியாறல் என்றேன். அங்கிருந்த அனைத்து மலேசியர்களும் என்னை ஆச்சரியமாகப் பார்த்து தெரியாதா - நாங்கள் காலைஉணவை பசியாறல் என்போம். பசி ஆறுதல் என்பதை சுருக்கமாக அப்படி சொல்வோம் என்றனர்.
இது breakfast என்பதனை அப்படியே தமிழாக்கம் செய்தது போல இருக்கிறதே என்றேன்.
நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார்.
நானும் தங்கமணியும் ஒரேகுரலில் சொன்னோம்.
டிபனு...
இப்போது அந்த இருவரும் கடும் வயிற்றுவலிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.