Saturday, January 31, 2009

நாகேஷ் காலமானார்

நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னையில் இன்று காலமானார்.

திருவிளையாடல், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் அவரது கதாபாத்திரங்களினால் நம் அனைவரையும் மகிழ்வித்த நாகேஷ் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற நகைச்சுவை நடிகர்.

ஒரு காலத்தில் நாகேஷ் திரையில் தோன்றினாலே அரங்கம் சிரிப்பில் வெடிக்கும். நகைச்சுவை பாத்திரங்களிலும் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவர் நடிப்புக்கு இணை அவர்தான். யதார்த்தமான நடிப்பு தமிழில் அவர்தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.

அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பொம்மலாட்டம், காதலிக்க நேரமில்லை, நீர்க்குமிழி, ... பட்டியல் நீண்டுகொண்டே போகும்...

நாகேஷின் ஆன்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.

Sunday, January 25, 2009

நமது ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் அடுத்த கலைவிழா

பொங்கல், குடியரசு தினம் மற்றும் காதலர் தின விழா இம்மூன்றையும் ஒரு சேரக் கொண்டாட நமது சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்து வரும் பிப்ரவரி மாதம், 28ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நமது ரிச்மண்ட் கோவிலில் (ஹிந்து சென்டரில்) ஒரு கலாச்சார விழாவினை நடத்த இருக்கிறோம். பல கலை நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து பட்டியலிடும் பணியில் கலாச்சாரக் குழு தங்களை ஈடு படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஒரு கலை நிகழ்ச்சி முடிந்து அடுத்த கலைநிகழ்ச்சி துவங்கும் முன்பு இருக்கும் இடைவெளிகளின் ஊடே சிறுவர் சிறுமிகள் தங்களுக்குத் தெரிந்த ஒரு திருக்குறளைச் சொல்ல (முடிந்தால் அதற்கு விளக்கமும் சொல்ல) ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். திருக்குறள் சொல்லும் (முடிந்தால் விளக்கமும் சொல்லும்) ஒவ்வொரு சிறுவர் சிறுமிக்கும் ஒரு சிறிய பரிசும் உண்டு. இந்தப் பங்கேற்பு முக்கிய கலைநிகழ்ச்சியின் எண்ணிக்கையில் சேராது எனவே, உங்கள் குழந்தைகள் எவ்வளவு திருக்குறள் சொல்ல விழைந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அல்லது மேலும் விவரம் வேண்டுவோர் நமது சங்கத்தின் நிர்வாகக் குழுவினரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

வாருங்கள் எல்லோரும் வடம் பிடிப்போம், வரலாற்றில் ஓர் இடம் பிடிப்போம்.


அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

Saturday, January 24, 2009

அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க...

புதிய செயற்குழு மும்முரமாக அடுத்த நிகழ்ச்சியை - அவர்களின் முதல் நிகழ்ச்சியை தயார் செய்வதாக செய்தி பரவுகிறது. அதற்கு முன்னோடியாக சென்ற விழாவிலிருந்து ஒரு வீடியோ ( no pressure :-)

Monday, January 12, 2009

கோல்டன் க்ளோப்!


நேற்று நடந்த 66வது 'கோல்டன் க்ளோப்!' விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'ஸ்லம்டாக் மில்லினியர்' (Slumdog Millionaire) என்ற படத்தில் மிகச் சிறந்த இசையமைப்பிற்கான (Best Original Music Score) கோல்டன் க்ளோப் விருதைப் பெற்றார்!!


இதன் மூலம் 'கோல்டன் க்ளோப்!' விருதைப் பெற்ற முதல் இந்திய சினிமா இசைக் கலைஞர் என்ற மிக உயரிய சிறப்பைப் பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! 'ஸ்லம்டாக் மில்லினியர்' மேலும் சிறந்த திரைக்கதை, இயக்கம், படம் என 3 விருதுகளை (Best Screenplay, Best Director, Best Film awards) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது!

சர்வதேச அளவில் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில், ஆஸ்காருக்கு அடுத்தாக மிக உயரிய விருதாகக் கருதப்படுவதே கோல்டன் குளோப் விருது!

அடுத்து ஆஸ்கார் விருது கிடைத்திட வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்!!