எனக்கு ஒன்று தெரிந்து விட்டது. மாற்றத்தை விரும்பாதவனே மறத் தமிழன்.
ரஜனி இருக்கும் வரை அவர் தான் சூப்பர் ஸ்டார்.
அடுத்தவரைப் பற்றி யோசிக்க கூட மாட்டோம் என்று பிடிவாதமாக இருகிறார்கள்.
ஒரு வேளை நடிகர்கள் வந்து கூடாரம் போட்டால் தான் நாம் முடிவு செய்வோமோ?
சென்ற மாதம் இங்கு நடிகை ஸ்ரேயா வந்து போனது யாருக்கும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை.
ஆனால் கூட்டம் தான் இல்லை. நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்ததே காரணம்.
இறுதியில் ஆட்கள் இல்லை என்ற காரணத்தால் , இலவசமாக ஆட்களை கையை, காலை பிடித்து வந்து உட்கார வைத்தார்கள்.
அது போல நாமும் ஒரு கட்டத்தில் யாரையோ ஒருவரை அவர் உறவினர் என்று சூப்பர் ஸ்டார் ஆக
தேர்ந்து எடுத்து விடலாம்.
நமக்கு தான் பரம்பரை ஆளுமை ரொம்ப பழக்கம் ஆகி விட்டதே. இது ஒன்றும் புதிது இல்லை,
வேதாந்தி