தமிழ் படிக்கும் நல்லுலகத்தினர்க்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சில நாட்களாக புது நெருப்புநரி பயன்படுத்தலாமே என்று கசியும் ஓரத்துக்கு(அதாங்க bleeding-edge) வந்து Firefox Beta 2 பதிவிறக்கிய பின் நமக்கு பழகிய பழைய எக்ஸ்டென்ஷன்கள்(தமிழ் கீ எழுதிய முகுந்தராஜ் & கோ வாழ்க) எதுவும் வேலை செய்யவில்லை. கை ஒடிந்த மாதிரி இருந்தேன். இப்போதுதான் புது நெருப்புநரியில் அவற்றை எப்படி வேலை செய்ய வைப்பது என்று படித்தேன். அதான் சூடாக ஒரு பதிவு. நம் பின்னூட்டம் இல்லையே என்று நிம்மதியாக இருந்த சதங்கா, முரளி அனைவருக்கும் எச்சரிக்கை!
புத்தாண்டு தினத்தன்று நாங்கள் நடத்திய எலும்பு மஞ்சை தானப்பதிவு அமோக வெற்றி. பாதி நாளிலேயே விண்ணப்பங்கள் தீர்ந்துபோனதால் கடையை மூடும்படியாகிவிட்டது. ராஜேஷுக்கு எலும்பு மஞ்சை தானம் யார் செய்ய முடியும் என்ற தேடல் மும்முரமாக நடந்துவருகிறது. அது என்ன எலும்பு மஞ்சை என்கிறீர்களா? இதோ படம் காட்டி விளக்குகிறேன் :-)
விண்ணப்பங்கள் தீர்ந்து போனதால் (நம் ஆள் பிடிக்கும் திறமைக்கு நாமே நிகர்) மீண்டும் ஜனவரி 13ம் நாள் வர்ஜினியா ஹிந்து மையத்திலேயே மதியம் தானப்பதிவு நடத்துகிறோம். பதிவு செய்வது மிக சுளுவு. அங்கே சந்திக்கலாம். மற்ற ஊரில்/நாட்டில் இருப்பவர்கள் அருகே எங்கே தானப்பதிவு நடக்கிறது என்று பார்த்து (helprajesh.com தளத்தில் வலப்பக்கம் சுட்டிகள் இருக்கின்றன) பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மறுபடியும் புத்தாண்டு வாழ்த்துக்கள். பொன்ஸிடம் இருந்து ஆரம்பித்த புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சல் புயல்உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் த்மிழ்பதிவுலகில் இன்னும் பெரிய/சின்ன ஆள் ஆகவில்லை! :) ஆகவே உங்களுக்கு அந்த மடல் வரவில்லையென்றால் பொன்ஸை ஒரு பிடி பிடியுங்கள். ஹி... ஹி... ஏற்கனவே நொந்து போயிருக்கும் பொன்ஸுக்கு ஏதோ நம்மளாலான உதவி!