Tuesday, December 30, 2008

அஞ்சா நெஞ்சன் - அஞ்சன்!

ரிச்மண்டில் வாழும் வாணி, பவனிராம் கௌஷிக் தம்பதியினரின் மகன் அஞ்சன் கௌஷிக்  மார்ச் 2009ல் லூகேமியா, லிம்ஃபோமா சொசைட்டிக்கு நிதி திரட்டுவதற்காக வர்ஜினியா பீச் நகரில் நடக்கவிருக்கும் ஷாம்ராக் அரை மராத்தனில் கலந்து கொள்ளவிருக்கிறான்.

லுகேமியாவுடன் போராடும் தங்கைக்காக நிதி திரட்டாமல் அந்த நோயை எதிர்க்க இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டிருக்கும் அவன் மனதிடம் என்னை வியக்க வைக்கிறது. அவனுக்கு இருக்கும் உறுதியில் சற்றாவது நமக்கும் தொற்றிக்கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் இதில் ஈடுகொள்ள. அஞ்சனுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்பினால், உடனே விரையுங்கள் இந்தத் தளத்திற்கு => http://www.tinyurl.com/anjank 

ஷார்லட்வில்லில் மருத்துவம் படிக்கும் அஞ்சனின்  இந்த அரிய சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

நீங்கள் இதுவரை எலும்பு மஞ்சை தானத்திற்கு பதிந்திராவிட்டால், உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சந்தர்ப்பம். ஜனவரி 18ல் ரிச்மண்ட் ஹிந்து சென்டரில் நடக்கவிருக்கும் லட்சார்ச்சனையின் போது மாடியில் இலவச எலும்பு மஞ்சை பதிவு முகாம் நடக்கவிருக்கிறது.  மேல் விவரங்கள் இங்கே.

Wednesday, December 17, 2008

மாநில ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி!



சென்ற டிசம்பர் 6-7 தேதிகளில் ஹாரிஸன்பர்க்'கில் நடந்த வர்ஜினியா/வாஷிங்டன் பகுதி லெகோ ரோபாட்டிக்ஸ் இறுதிப் போட்டியில் கார்த்திக் செட்டியின் அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. கார்த்திக் படத்தில் இடது பக்கம் நிற்கிறான்.

மூடி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்கையும் சேர்த்து எழுவரைக் கொண்ட இந்த அணி வர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசியில் இருந்த பல அணிகளுடன் மோதி இரண்டாம் டிவிஷன் பிரிவில்(12-14 வயதிற்குட்பட்டோர்) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அடுத்ததாக இவர்கள் வர்ஜினியா/டிசி தரப்பில் அமெரிக்க அணியாக ஏப்ரலில் அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்கள். அந்த போட்டியிலும் அசத்த கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்!

உமா, அசோக் செட்டி தம்பதியினருக்கும் தம்பி அஷ்வினுக்கும் எமது வாழ்த்துக்கள்.

லெகோ ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவது கார்த்திக்கிற்கு புதிதல்ல! சென்ற வருடமும் மாநிலப் போட்டியில் வெற்றி பெற்றான். உலக சாம்பியனாக ஏப்ரலில் வர வாழ்த்துக்கள்.

Sunday, December 14, 2008

படம் பாரு கடி கேளு - 24


சே! இந்த கம்பனி டெலிவரிமேன் வேலை ரொம்ப மோசம்பா. பெட்ரோல் விலை கட்டுப்படி ஆகலே ட்ரக்குக்கு பதிலா சைக்கிள் வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படீன்றான் அந்த படுபாவி மேனேஜர்.

படம் பாரு கடி கேளு - 23


சே! நான் கஷ்டப்பட்டு ஏதோ "பீ பீ"ன்னு வாசிச்சா, ஒரு கும்பலே சேர்ந்திடுச்சு இங்கே! கத்ரி கோபால்நாத் வாசிச்ச "டூயட்" பாட்டு வாசின்னுவேறு படுத்தறாங்க! தாங்கமுடியலப்பா இவங்க பாடு.

படம் பாரு கடி கேளு - 22


நான் "இன்க்ரிமின்" டானிக் அப்படியே சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 40 தடவை சாப்பிடுவேன். ஆனா என் பெண்சாதி மட்டும் சாப்பிடலே!

Thursday, December 11, 2008

எழுச்சியூட்டிய மனிதர் - 2008

இந்த வருடத்தின் (2008) எல்லோரையும் மிகவும் கவர்ந்த எழுச்சியூட்டிய மனிதராக சமீபத்தில் மறைந்த பேராசிரியர் ரேண்டி பாச்'ஐ தேர்ந்தேடுத்துள்ளனர்.


பரிந்துரைக்கு வந்த பல பெயர்களிலிருந்து, சிறந்த 10 மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மூவர் (ஸ்டிவென் சாப்மேன் , சாரணர் சிறுவர்கள் மற்றும் பேராசிரியர் ரேண்டி பாச்) இறுதி சுற்றிற்கு தேர்வு செய்தனர். இறுதியில் எல்லோரையும் மிகவும் கவர்ந்த மனிதராக ரேண்டி பாச்'ஐ தேர்ந்தேடுத்துள்ளனர்.


இவரை நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்திருக்கலாம். இவர் பான்கிரியாடிக் கேன்சரால் தாக்கப்பட்டு தன் மரணத்திற்கு நாள் குறித்த பின் வழங்கிய "இறுதி சொற்பொழிவு" ("The Last Lecture") நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முழு நிறைவுடன் வாழவும், கனவுகளையும், லட்சியங்களை அடையவும் மிகவும் ஊக்குவித்தது என்பது மிகையல்ல. இந்த சொற்பொழிவினை கேட்டால்/பார்த்தால்/படித்தால் அதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்பது உறுதி. இவரைப் பற்றி படித்தவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது வள்ளுவனின் இந்த குறள்!




இந்த சொற்பொழிவு முதலில் கார்நகி மெல்லன் பல்கலைகழகத்தில் மிகச் சிறிய கூட்டத்தில் வழங்கப்பட்டாலும், ஊடகம் வாயிலாக உலகெங்கும் பிரசித்தி பெற்றது! இதுவரை அவரது சொற்பொழிவுகளை 20 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பது இதன் தாக்கத்திற்கு சான்று!

"நம் கையில் வந்த சீட்டு அட்டைகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.. ஆனால் அதை வைத்து எப்படி ஆடி வெற்றி பெறலாம் என்பது நம் கையில் தான் உள்ளது!" என்று அவர் சொன்ன கருத்தின் தாக்கம், ஜுலை 2008ல் அவர் மறைவிற்கு பின்னும் இருப்பது இவரது வலைதளத்தின் பின்னூட்டங்களில் கண்கூடாக தெரிகிறது.

இந்த வருடத்தின் முன்மொழியப்பட்ட மற்றவர்களும் ஒவ்வொரு வகையில் மக்களை கவர்ந்துள்ளனர். அதிலிருந்து சிலர்:

பால் நுமன் : அமெரிக்கர்களுக்கு மிக பிடித்த நடிகர், இயக்குனர், அகாடமி விருது வாங்கியவர், நல்ல சமுக தொண்டாளர். 2008 வரை அவர் வழங்கிய கொடை மட்டும் $250 மில்லியன் டாலர்கள்! இவரும் 2008'ல் மறைந்துவிட்டார்.

கிரிஸ்டீனா ஆப்பிள்கேட் : இந்நாள் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நடிகை. 2008 ஆகஸ்ட்'ல் மார்பக புற்றுநோய்க்காக இரட்டை மாச்டெக்டொமி (மார்பக அகற்றல்) செய்த பின் தற்போது நலமாக இருப்பதுடன், மார்பக புற்றுநோயுடன் போராடும் அமெரிக்க பெண்களுக்கு மிக்க ஆதரவும், ஊக்கமும் அளித்தவர். இன்னமும் சினிமா/தொலைக்காட்சி சிட்காம்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!!

டாரா டொரெஸ் : இவர் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட மிக வயதான (41 வருடம், 125 நாட்கள்) வீராங்கனை என்ற பெருமையுடன், 2008ல் 50 மீட்டர் freestyle, 4×100 'medley relay' மற்றும் 4×100 freestyle relay' போட்டிகளில் 3 வெள்ளி பதக்கம் அள்ளியவர்! சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என ஊக்கம் அளித்தவர்!

வில்லியம் கிப்சன்: போரில் குண்டடிபட்டு ஒரு காலை இழந்த பின்னும், செயற்கை கால் பொருத்தப்பட்டு மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தவர்.

டாக்டர் ஹலிமா பஷிர்: சுடான் நாட்டில் டார்ஃப்ர் பகுதியில் நடக்கும் இனப் படுகொலைகளுக்கு எதிராகவும், சிறுமிகள் நாசப்படுத்தப் படுவதை தடுக்கவும், தன் உயிரை பொருட்படுத்தாமல் போராடும் பெண். சமீபத்தில் இவரை வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் சந்தித்து அங்கு நடக்கும் அவலங்களை பற்றி பேசினார்! இவர் எழுதிய "Tears of the Desert" என்ற புத்தகத்தை பற்றி அதிபர் மிக பெருமையாக குறுப்பிட்டார்!

டாரின் ஹெட்ரிக்: கன்சாஸ் மாகாணத்தின் க்ரீன்ஸ்பர்க் என்ற குக்கிராமத்திலுள்ள பள்ளியின் மேலாளர், புயலால் தாக்கப்பட்டு அனைத்தும் இழந்த தங்கள் ஊரில் "பசுமை" பள்ளிகளை நிறுவ உதவி புரிந்து மக்களை மீண்டும் அந்த ஊருக்கு திரும்ப வர வைத்தவர்!

டாக்டர் ஜில் போல்ட் டெய்லர்: மூளை ஆராய்ச்சியாளர்; மிக அரிய மூளைத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்ததுடன் அதைப்பற்றிய அனுபவங்களை சொற்பொழிவாற்றியவர்.

சாரணர் சிறுவர்கள்:: ஐயோவா மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து "தலைமை வகித்தல்" பயிற்சிக்காக வந்த சாரணர் தங்கியிருந்த முகாமினை சுழல் காற்று (Tornado) தாக்கியது. அவர்கள் பதற்றமடையாமல், தயார் நிலை பயிற்சியை நினைவிற்கொண்டு தங்களை காத்துக்கொண்டதுடன், மற்ற மாணவர்களையும் காத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தனர்!

ஸ்டிவென் சாப்மேன்: கிருத்துவ பாடகரான ஸ்டிவென் சாப்மேனின் தத்தெடுத்தல் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு, அதன் தாக்கத்தினால் பல சீன அனாதை குழந்தைகள் மக்கள் அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டனர். தான் தத்தெடுத்த மகளை ஒரு விபத்தில் இழந்தும், குடும்பத்தில் அனைவரையும் தேற்றி முன் சென்ற தீரம், மற்ற துன்பப்படும் பெற்றோரின் மனதினில் நம்பிக்கை வளர்த்தது!

நம்ம நாட்டிலிருந்தும் இது போல வருடா வருடம் மக்களுக்கு அறிமுகமில்லாத ஊக்கமூட்டிய மனிதர்களை பத்திரிக்கைகள்/ஊடகங்கள் சிறப்பித்தால்,
மக்களிடையே நன்னெறியும், நற்பண்பும், தொண்டாற்றும் ஆர்வமும் வளரும் என்பது என் கருத்து! ('டைம்' சஞ்சிகை இது போல இந்திய மக்களை கவர்ந்த மனிதர்களை அறிமுகம் செய்துவருகிறது!)

பேராசிரியர் ரேண்டி பாச்'ன் பிற சொற்பொழிவு விடியோக்கள்:
இறுதி சொற்பொழிவு (Last Lecture) - http://www.cmu.edu/uls/journeys/randy-pausch/index.html அல்லது http:\\www.thelastlecture.com

நேர மேலாண்மை (Time Management):
http://video.google.com/videoplay?docid=-5784740380335567758
அவர் எழுதிய ப்ளாக் (Blog Journal): http://download.srv.cs.cmu.edu/~pausch/news/index.html
அவர் எழுதிய "An Injured Lion Still Wants to Roar" - http://www.beliefnet.com/Inspiration/Most-Inspiring-2008/Last-Lecture.aspx

Wednesday, December 10, 2008

ராமசுப்பையர் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலை வெளியீடு

தினமலர் நிறுவனரான டி.வி.ராமசுப்பையரின் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலையை இந்திய அரசு வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் திரு ஆ. ராசா அவர்கள் வெளியிட, தமிழக முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதி பெற்றுக் கொண்டு பேருரையாற்றுவதுடன் இந்த அஞ்சல்தலை வெளியீட்டு விழா இனிதே நடக்கவிருக்கிறது.

ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தின் அங்கத்தினர்களான ராமசுப்பையரின் பேத்தி மல்லிகா மற்றும் நடராஜமூர்த்தி தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.



அழைப்பிதழ் அனுப்பிய தினமலர் பிரசுரகர்த்தா டாக்டர் ரா. லஷ்மிபதி அவர்களுக்கு எமது நன்றி.

Tuesday, December 09, 2008

நடராஜ்னு பேரு வச்சா சும்மாவா?

அடுத்த தமிழ் சங்க கமிட்டில கலாச்சார டிபார்ட்மெண்ட் இந்த தடவ மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங். ஒரு சாம்பிள் பாக்கணுமா?



என்னய்யா ஏதோ ஏரிக்கரைல இந்த ஆட்டம் ஆடியிருக்கியே, ஏதாவது உபயோகமாச்சான்னு கேட்டேன். ஒண்ணும் பதில் வரல :-)

ரிச்மண்ட் மக்கா - இனிமே நடராஜ் கூட ஆடனும்னா இந்த ஸ்டெப்புல்லாம் போட்டு பழகி ’ஆடி’ஷன் காமிச்சாதான் யோசிப்பமே...

கைல இன்னும் நடராஜ் ஆடின ஆட்டம் வீடியோல்லாம் கொஞ்சம் இருக்கு. எல்லாத்தையும் இங்க போட்டா அப்பறம் சிலபஸ் அவுட்டாயிரும். அதான் போடல.

Monday, December 08, 2008

வலை வலம்!

ஒலி பரிமாற்றுச் சேவை (VOIP)



முந்தைய பதிவில் நாகு கூகிளில் இருந்து "Video / Voice" அரட்டையடிப்பது பற்றி எழுதியிருந்தார். இணையத்தின் பல நல்ல வசதிகளில் ஒன்று VOIP (Voice over Internet Protocol) எனப்படும் ஒலி பரிமாற்றுச் சேவை. பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. சில சேவைகளை பாவிக்க உங்களுக்கு விசேட உபகரணங்கள் (Broadband Internet, VOIP Router) தேவைப்படும். இதற்கு மாதச் சந்தா கட்டினால், சில நிறுவனங்கள் Router இலவசமாக வழங்குகிறன. சந்தா இல்லாமல், விசேட உபகரணங்கள் இல்லாமல் உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு (PC-to-phone) பேசவும் இப்போது வசதிகள் உள்ளன! அந்த வகையில் www.freeringer.biz என்ற இணையதளத்திலிருந்து சுமார் 30 நாடுகளுக்கு இலவசமாக உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசலாம்! இதை பாவிக்க எந்த மென்பொருளையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர்! (சோதித்ததில் இதற்கு "Adobe Flash Player" மட்டும் தேவைப்படும் என தெரியவந்தது.). இதை பாவிக்க உங்களிடம் Broadband இணைப்பு தேவைப்படும். இல்லாவிட்டால், நீங்கள் பேசி 2 நிமிடம் கழித்து எதிரே உள்ளவருக்கு போய்ச்சேரும். (இந்த நிறுவனத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை).


பி.பி.சி இணைய வானொலி:

சிலருக்கு தமிழில் கட்டுரைகள் வாசிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதுவும் பல பக்கங்கள் கொண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு பொறுமையும் அவசியம். அந்த சிரமங்கள் இல்லாமல் நல்ல விடயங்கள் "ஒலி" வடிவத்தில் இருந்தால் எவ்வளவு வசதி! BBC இணைய தளத்தினில் நம்மில் பலரும் அடிக்கடி உலவியிருப்போம். அதில் பல நல்ல "ஒலி" தொடர்கள் உள்ளன. அதிலிருந்து உங்களுக்காக சில இங்கே:


1. நெஞ்சம் மறப்பதில்லை

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள், சிரிக்கவைத்த சிந்தனையாளர்கள், சிந்திக்கவைத்த இயக்குநர்கள் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். சம்பத்குமார் தயாரிப்பில். இங்கே கேட்கலாம்

2. தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
தமிழ் இசையின் வரலாறு கூறும் இந்தத் தொடர், தமிழ் இசையின் தொன்மை, அதன் பரிமாணங்கள், வளர்ச்சிப் போக்கு, அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இசைக் கலைஞர்கள், மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது BBC சென்னை நிருபர் த.நா.கோபாலன்

3. பாட்டொன்று கேட்டேன்
அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்.


மேலும் சில சுட்டிகள்:

1. தமிழோசை: நேரடி ஒலிபரப்பு

2. செய்தியறிக்கை: (மறு-ஒலிபரப்பு - On-Demand)

3. தமிழ் பண்பலை:: (மறு-ஒலிபரப்பு - On-Demand)


உதவி: கணினியில் தமிழோசை கேட்பதற்கு வகைசெய்யும் ஒலிச் செயலியை பெறுவது எப்படி?


கூகிள் மொழி மாற்று செயலி:

நமது வலைபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவி பக்கம் இருப்பினும், சிலருக்கு அவற்றை பாவிக்க சற்று கடினமானதாக(!) இருக்கிறது என்று கூறியுள்ளனர். சிலர், "நான் ஆங்கிலத்தில் எழுதி தருகிறேன், நீங்களே தமிழுக்கு மற்றிக் கொள்ளுங்கள்" என்று பின்வாங்கிவிடுவதுண்டு! அவர்களுக்காகவே இந்த மொழி மாற்று செயலியை கூகிளாண்டவர் கொடுத்துள்ளார். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை "பொனெடிக்" முறையில் தட்டச்சு செய்தால் அதை தமிழில் உடனே மாற்றி காட்டும்!! உதாரணத்திற்கு, "sangam" என்று தட்டச்சு செய்தால் அதை "சங்கம்" என மாற்றிடும்.

அதே போல தட்டச்சு செய்த வார்த்தையின் மேல் சொடுக்கினால், அதனை பல விதங்களில் காட்டும் (ஆனால், செயலியே சரியான எழுத்துக்களை தேர்ந்தெடுப்பதும், பிழையான வார்த்தையை சுட்டிக்காட்டிடவும் இன்னமும் வசதிகள் இல்லை!). நீங்கள் தட்டச்சு செய்தவற்றை ஈமெயில் அல்லது கோப்புகளில் வெட்டி ஒட்டிக் (Copy & Paste) கொள்ளலாம்! இதுவும் மிகச்சுலபமான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் கருவி! ஆங்கில பிழை திருத்தி போன்ற வசதிகள் கொண்ட தமிழ் தட்டச்சு செயலிகள் இன்னமும் சில காலத்தில் வந்துவிடும். மேலும் விபரங்கள் மற்றும் உதவி பக்கத்தை இங்கே காணலாம்


சில நாட்களாக நாகு வலை வலம் பற்றி சொல்லாததால், நான் அறிந்த சில தகவல்களை இங்கே கொடுத்துள்ளேன்..

Sunday, December 07, 2008

பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

நேற்று ரிச்மண்டில் இந்த ஆண்டின் முதல் பனியாக ஒரு சின்ன பனித்தெளிப்பு இருந்தது. புல்தரை கூட முழுதாக மூடப்படாத அளவு குறைவான பனிச்சிதறல். குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சிறிதாக விழுந்த பனியால் பெரிய மனக்குறை. எங்கள் மாவட்டத்தில் (கவுண்டிக்கு தமிழில் வேறென்ன?) பள்ளிக்கூட தினங்களில் கொஞ்சம் பனி விழுந்தாலும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடுவார்கள். சனிக்கிழமை இவ்வளவு குறைவாக விழுந்தால் என்ன ஆகும்...


அரைகுறையாக மூடப்பட்ட புல்தரை...

ஞாயிறு மதியம் வெளியே கிளம்பினோம். எப்பொழுதும் வேனில் போகலாம் எனும் என் மகன், காரில் போகலாம் என்றான். என்னடா என்றால், வெயில்பட்டு எல்லா பனியும் மாயமாய் மறைந்திருக்க வேன் மறைத்ததால் புல்தரையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பனி இருந்தது. வேன் எடுத்தால் அந்த பனியும் உருகிவிடுமாம்! அதனால் வேனை எடுக்க விடவில்லை. அவனால் காப்பாற்றப்பட்ட புல்தரையும், தேரும்...


பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

Monday, December 01, 2008

ரிச் மெலடிஸ் இன்னிசை இரவு

சென்ற சனிக்கிழமை மாலை ரிச்மண்டில் ஆர் சி லாங்கன் துவக்கப்பள்ளியில் ரிச் மெலடிஸ்(RichMelodies)குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. தயா என்று அழைக்கப்படும் பால் ஞானோதயனின் குழுவினர் அசத்தினார்கள். ரிச்மண்ட் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அனைத்து பாடகர்களும்(தயா, ஜெயக்குமார், ரமேஷ், கலா, நாராயணன், அரவிந்தன், சிவாந்தி, அங்கிதா, சுதா, சுரேஷ், அஸ்வின், சூர்யா மற்றும் பலர்) அழகாகப் பாடி மகிழ்வித்தார்கள்.
நிகழ்ச்சியை ஜெயந்த் கீபோர்டில் வசீகரா பாடலுடன் துவக்கினான். ஆர்த்தி கிளாரினட்டில் 'ஒரு மாலை'யுடன் தொடர்ந்தாள். இருவரும் அற்புதமாக வாசித்தார்கள்.
கார்த்திகேயனும் அட்லாண்டாவில் இருந்து வந்த ஒரு பெண்மணியும் நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

நிறைய குழந்தைகளும், பெரியவர்களும் பிரமாதமாகப் பாடினார்கள். என் நினைவில் நிற்பது சூர்யா கணீர்க்குரலில் திருத்தமாக பாடிய 'உன்னை அறிந்தால்' பாட்டு. அஸ்வின் பாடிய ராப் கலந்த பொன்மகள் வந்தாள் ரிமிக்ஸும் அட்டகாசம். பெரியவர்கள் பாட்டு வரிசை மிக நீளம். யாரையாவது விட்டு விடப்போகிறேன் என்ற பயத்தால் அனைவரையும் விட்டுவிடுகிறேன் :-)

உணவிற்குப் பின் டிஜே வைத்து மக்களின் ஆட்டம் கூட சூப்பர். படங்கள் இங்கே....(முழுதாகப் பார்க்க இங்கே)

Wednesday, November 26, 2008

சுவடுகள்: அவளைப் போல (சிறுகதை), தமிழ்த்திரையுலகம் ஒரு பார்வை

சுவடுகள்:தமிழ் சங்கத்தின் தமிழ் கதை,கட்டுரை பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட கதை மற்றும் கட்டுரை மறுபதிப்பு (2004).

கதை: மீனா வீரப்பன்
கட்டுரை: ச.சத்தியவாகீஸ்வரன்

Tamil Prose 2004 - Richmond Tamil Sangam

Monday, November 24, 2008

படம் பாரு கடி கேளு - 21


சே, 2 லிட்டர் எண்ணை தடவி வந்தும் பரிசு கிடைக்கலியே!
அவங்களுக்கு மோட்டார் பைக் வேறு குடுத்திருக்காங்க

Saturday, November 22, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 31

நம்பியார்
உலகத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருந்த ‘வில்லன்களின் வில்லன்’ எம்.என்.நம்பியார் மறைந்து விட்டார். இவர் நடிக்காத 60, 70, 80 களில் வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நடித்த படங்களில் அவர்களைத் தாண்டி ஒரு நடிகர் ப்ரசித்தி பெறுவது என்பது கிஞ்சித்தும் யோசிக்கக்கூட முடியாத விஷயம். அதை சர்வ சாதாரணமாக செய்து காட்டியவர் இவர். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து, படத்தில் பல வில்லன்கள் இருந்தாலும், அவர்களிலிருந்து தன்னைத் தனித்து வெளிப் படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். எம்.ஜி.ஆருடன் இவர் செய்யும் சண்டைக்காட்சிகள் என்னைப் போன்ற பல ரசிகர்களை புலகாங்கிதமடையச் செய்துள்ளது. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருடன் இவர் செய்த சீன முறை சுமோ சண்டை இனி மீண்டும் ஒருவர் செய்ய முடியாது என்பது என் கருத்து. என் சிறு வயதில் நான் பார்த்த படத்தில் இவர் சாட்டையால் அடித்ததில் எம்.ஜி.ஆருக்கு வலித்ததோ இல்லையோ எனக்கு வலித்து நான் அழுதது நினைவிருக்கிறது. அசாத்திய வில்லன் நடிப்பு இடையே திடீரென நல்லவனாகவும் நடித்து (ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பின்பகுதி, தூறல் நின்னு போச்சு) நம்மை ஆச்சர்யப் பட வைத்தவர். எம்.ஜி.ஆர் தேர்தலுக்கு ப்ரசாரம் செய்யப் போகும் போது மக்கள் அவரை வழி “மறித்து நல்லா இரு ராசா” என்று வாழ்த்திய அதே நேரம் “இந்த நம்பியார் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இரு ராசா, கெட்ட பய உன்னைய ஏதும் செய்துரப் போறான்” என்று வாஞ்சையோடு சொன்னது இவருடைய நடிப்புக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

ஒரு நல்ல கலைஞன் எப்போது மற்ற கலைஞர்கள் போல நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறானோ அப்போதுதான் முழுமையடைகிறான் என்பது என் கருத்து. ரஜனியின் தளபதி படத்தில் அம்ரிஷ் பூரியின் ‘கலிவர்தன்’ கதாபாத்திரம் தனக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி அவர் அதன் முத்தாய்ப்பாக எனக்கு தலையில் இப்போது முடியே இல்லை மொட்டை போடும் செலவு கூட இல்லை இருந்தாலும் மணிரத்தினம் என்னை தேர்வு செய்ய வில்லையே என்று வருத்தப் பட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி என்ற இரு இமயங்களோடு நடித்தவருக்கு ரஜனி, மம்முட்டி இரு சிறு மடுக்களோடு நடிப்பதில் பெரிய சவால் இல்லை ஆயின் அந்த சிறிய பாத்திரம் இவரை பாதிக்கிறது என்று சொன்னால் இவருடைய கலையார்வத்தை கண்டு தலை வணங்கத்தான் வேண்டும்.

திரையில் இவர் ஒரு நயவஞ்சகன், பெண் பித்தன், திருடன், ஏமாற்றுப் பேர்வழி, கொள்ளைக்காரன், கொடுங்கோலன், ராஜத்துரோகி, பணத்தாசை பிடித்த பிசாசு, இரக்கமில்லாதவன். ஆனால் நிஜ வாழ்வில் இவர் ஒரு இனிமையான மனிதர், அல்லும் பகலும் ஐயப்பனின் நாமத்தை ஜெபித்த, 60-65 வருடங்களுக்கு மேலாக சபரிமலை (வருடத்திற்கு 4-5 முறை) சென்று வந்த பக்தர். புகை, மது, மாது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர். நடிப்பது, எனது தவம், வாழ்க்கை, எனக்கு ஆண்டவன் இட்ட பிச்சை என்று வாழ்ந்த உத்தமர்.

1991-ல் நான் முதன் முதலாக சபரிமலைக்குச் சென்றபோது 18 படியை தழுவி, ஐய்யனை தரிசித்து விட்டு எங்கள் குடிலுக்கு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் ஒரே பரபரப்பு, என்ன என்று கேட்டதற்கு, குருசாமி வந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரே திகைப்பு, எங்கள் குழுவின் குருசாமி எங்களோடுதான் மலையில் நடந்து வந்தார், எனக்கு ஒரு 100-200 பேர்களுக்கு முன்புதான் 18 படி கடந்து வந்தார், அப்படி இருக்க இவர்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே என்று எங்கள் குருசாமியின் மகனிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், என் தந்தை நம் குழுவிற்கு குருசாமி, ஆனால் நம்பியார் சாமிதான் நம் எல்லா ஐய்யப்பன்மார்களுக்கும் குருசாமி என்றார். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடுமபத்திற்கும், மற்றவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம்.என். நம்பியாரைப் போலவே தமிழ் சினிமாவில் ப்ரபலமான மற்றொரு நம்பியார் ஆர்.என். நம்பியார் இவர் ப்ரபல சண்டை பயிற்சியாளர், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் சண்டைப் பயிற்சி தந்தவர். இவர்தான் அண்மைக் காலத்தில் மறைந்த ப்ரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ‘விகரம்’ தர்மாவின் தந்தை என்பது மற்றொரு சிறப்பு.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

Wednesday, November 19, 2008

குழந்தையின் பார்வையில் தமிழ் சங்க தீபாவளி

எங்கள் தமிழ் சங்க தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஒரு குழந்தையின் கையில் என் டிஜிட்டல் கேமிராவைக் கொடுத்து, என்ஸாய் என்றேன்.   விளைவு இதோ.... :-)
இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் இதை செய்யலாம் என்றிருக்கிறேன்.

தமிழ் சங்கத்தின் தீபாவளி மற்றும் கிருத்துமஸ் விழா: படங்கள்

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தீபாவளி மற்றும் கிருத்துமஸ் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது அதிலிருந்து சில படங்கள்:



(சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.அவை உங்களிடம் இருப்பின் எங்களுக்கு (richmondtamilsangam@gmail.com) அனுப்புங்கள். இதனுடன் சேர்த்துவிடுகிறோம்.)

Friday, November 14, 2008

சந்திராயன்-1 சாதனை!

சந்திராயன்-1








இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல் சந்திராயன்-1 சென்ற மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது நினைவிருக்கலாம். அதிலிருந்து நம் தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்ட "Moon Impact Probe" எனப்படும் இயந்திரம் இந்திய நேரப்படி இன்று இரவு 8:31 மணியளவில் நிலவைத்தொட்டுள்ளது!!. இந்திய தேசத்தின் கொடியின் வர்ணம் நிலவில் கால் பதித்த பெருமையான நாள்!! இதுவரை அமெரிக்கா, சோவியத் ரஷ்யா மற்றும் ஜப்பான் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளை நிலவில் நிறுவியுள்ளன! அதில் நம் பாரத தேசத்தின் கொடியும் சேர்ந்துள்ளது எல்லோருக்கும் மிக்க பெருமையான நிகழ்வாகும்!!


இது குழந்தைகள் தினத்தன்று நிகழ்வது மேலும் சிறப்பு!! வருங்கால அப்துல் கலாம்களுக்கு இது மிக்க உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் என நான் நம்புகிறேன்.


மேலும் விபரங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தினை காணவும்!


ஜீரோ-G:



டாம் ஹாங்ஸ் அப்போலோ-13 திரைப்படத்தில் விண்வெளியில் மிதந்ததை பார்த்து அதைப்போல அனுபவிக்க நம்மில் பலரும் ஆசைப்பட்டிருப்போம். சில காலம் வரை இதை அனுபவிக்க ஆகும் விலையால் $5100 டாலர் (25000 ரூபாய்) மக்கள் எண்ணிப்பார்க்க கூட முடியாமல் இருந்தது. சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய விலையே! இதையே அமெரிக்காவில் drugstore.com என்ற தளத்தில் குறைவான விலைக்கு அறிவித்துள்ளனர்! உங்களுடன் மேலும் 9 பேர் சேர்ந்து பயணம் செய்ய மொத்தமாக சுமார் $35,000 டாலர் (10 பேருக்கு $35000, ஒருவருக்கு $3500) செலவழிக்க தயாராக இருந்தால், இந்த தளத்தில் அதற்கான பயணத்தை நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக முன்பதிவு செய்யலாம்!!





இந்த பயணத்தில், போயிங் நிறுவனம் அமைத்துள்ள G-FORCE ONE விமானத்தின் மூலம் சுமார் 24 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் அடி உயரத்திற்கு அழைத்து சென்று புவியீர்ப்பு விசையின்றி ("weightless fall / Parabola Flight") விமானம் சுமார் 10 மைல் கீழே செல்லும் போது உள்ளே இருப்பவர்கள் மிதப்பார்கள்! ஒரு மிதவை சுமார் ஒரு நிமிடமே நீடிக்கும்! இதே போல பல முறை திரும்ப செய்வார்கள்.


என்ன அடுத்த விண்வெளி பயணத்திற்கு தயாரா? அப்படியானால், நீங்கள் முதலில் அடுத்த செய்தியையும் படித்துவிடுங்கள்..



சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர்!


உங்களுக்கு விண்வெளியிலுள்ள நாசாவின் ஆராய்ச்சி ஆய்வு மையத்திற்கு சென்று வர வாய்ப்பு கொடுத்தால் இந்த தகவலை படித்து விட்டு முடிவு செய்யுங்கள். நாசா ஆராய்ச்சியாளர்கள் சிறுநீர் சுத்திகரிப்பு எந்திரத்தின் ஆராய்ச்சி முடிவிகளை வெளியிட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் சுவையில் சாதரண நீர் போலவே உள்ளதாக தெரியவந்துள்ளது (சிறு Iodine சுவையை தவிர்த்து!!). இதன்படி, இன்று $250 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சிறுநீர் சுத்திகரிப்பு எந்திரம் மற்ற உபகரணங்களுடன் சேர்த்து விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப் படும் என நாசா அறிவித்துள்ளது!

நாசாவின் 124வது விண்கல பயணத்தில், இந்த முறை இரண்டு படுகையறைகள், இந்த நிலையத்தின் முதல் ப்ரிஜ், புதிய உடற்பயிற்சி உபகரணங்கள், மற்றும் புதிய கழிப்பறை ஆகியன எடுத்துச்செல்லபடும் என தெரிவித்துள்ளனர்!! சுமார் 6 - 10 பேர் மாதக்கணக்கில் விண்வெளியிலுள்ள நாசாவின் ஆராய்ச்சி ஆய்வு மையத்தில் பணியாற்றுகின்றனர்.

2010 வது ஆண்டுக்குள் இன்னும் 10 முறை இது போல விண்கல பயணம் பல ஆராய்ச்சிகளை விண்ணில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கு எடுத்துச் செல்லும்! அதன் பிறகு இந்த திட்டத்தை கைவிடப்போவதாக நாசா அறிவித்துள்ளது.

என்ன பயணத்திற்கு தயாரா?

Wednesday, November 12, 2008

ஜீமெயிலில் குரல் மற்றும் வீடியோ அரட்டை

நான் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவர் நேற்று ஒரு அசத்தலான காரியம் செய்தார். அரட்டை அடிப்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் வேறுவேறு மென்பொருள் ஏனடா உபயோகிக்கிறாய் மானுடனே - உலாவியை விட்டு விலகாதே - இங்கேயே குடியிரு என்று உலாவியில் இருந்தே ஜீமெயிலில் பேச்சும் படமும் தெரிகிறமாதிரி அருள் புரிந்து விட்டார். நீங்கள் ஏதாவது குகையில் வாழ்பவராயிருந்தால்தான் இதை இந்நேரம் வரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

 நீங்கள் இதுவரை இதைப் பயன்படுத்தி இருக்காவிட்டால், உடனே இங்கே சென்று  ஜென்மசாபல்யம் அடையுங்கள்.  சக்தி கூகுள், வீர கூகுள்!

Wednesday, November 05, 2008

படம் பாரு, படம் பாரு

முதலில் கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் படத்தில் ஒரு மனிதன் ஒளிந்துக் கொண்டு இருக்கிறான். அவனைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். நிஜமாகவே இதில் ஒரு மனிதன் இருக்கிறான். கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் கண்டுபிடித்தபின்னே கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதைதான்.... காபிக்கொட்டைகளே தெரியாது. மனிதன் தான் தெரிவான்....




என்ன, எவ்வளவு நேரமாச்சு கண்டுபிடிக்க.?

மூன்று வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் கில்லாடிதான். உங்கள் மேலாளரிடமோ வாழ்க்கைத்துணையிடமோ உங்களுக்கு இன்னும் நிறைய வேலை கொடுக்கச் சொல்லுங்கள். :-)


அதுக்கும் மேல ஆச்சுன்னாதான் கவலைக்கிடம். சீக்கிரமாக டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

அடுத்த படத்தை ஆடாமல் அசங்காமல் பார்க்க வேண்டும். என்ன சரியா? ஆனால் முதலில் இங்கே கிளிக்கி பெரிதாக்கிக் கொள்ளுங்கள்....


அசங்கக்கூடாதுன்னு சொன்னேன். ஏன் இப்படி தலைகீழாகத் தொங்குகிறீர்கள்?

அடுத்த படம் புத்தம் புதுசு. என் நண்பர் ஒருவரின் உறவினர் அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஹைக்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. அவரிடம் இருந்து நேற்று வந்த புகைப்படம் இது...


விட்டால் தட்டு, ஸ்பூன் எல்லாம் கேட்கும் போலிருக்கிறது...

Monday, November 03, 2008

நியுயார்க் மராத்தனில் என் நண்பன்

நான் முன்பே எழுதியது மறுபடியும் நடந்திருக்கிறது. இல்லை.. ஓடியிருக்கிறது(நம்ம ஊர் ரமேஷ் பாணியில்). மராத்தன் ஓடி என்னை அசர வைத்த என் கல்லூரித் தோழன் மறுபடியும் நியுயார்க் மராத்தன் ஓடி அசத்தியிருக்கிறான். ஓடிவிட்டு வரும்போது போனில் சொன்னான், இந்த தடவை முடியலடா, கடசில நடந்து தவழ்ந்து முடிச்சேன்.

அவன் சொன்னதைப் வைத்து மோசமாக இருக்கும் என்று பார்த்தால், சென்ற முறையைவிட வேகமாகவே ஓடியிருக்கிறான் - 4 மணி 40 நிமிடங்களில். சென்ற முறை 5 மணி 20 நிமிடங்கள். முதல் 25 கிமீ வேகமாகவே போயிருக்கிறான்.




கடைசியில்தான் நிறைய நேரம் எடுத்திருக்கிறான். ஆரம்பத்தில் ரொம்ப வேகமாக போயிருப்பான் என்று நினைக்கிறேன். Proud of you, buddy! நம்ம கல்லாப்பெட்டி அரவிந்தன் ஏதோ அரை மராத்தன் ஓடுகிறேன் பேர்வழி என்று பயிற்சிக்கு என்னையும் இழுக்கப் பார்க்கிறார். இதுவரை சாக்குப்போக்கு சொல்லி சமாளித்துவிட்டேன். நானும் ஓடிவிட்டால் அப்புறம் யார் என் முருங்கமரத்தைப் பார்த்துக் கொள்வது?

Sunday, November 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 30

தனம் திரைப்பட விமர்சனம்
நண்பி ஒருவர் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யச் சொன்னார். உடனே தலையில் கொம்பு முளைத்தது போல ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. தெரிந்த கடைகளில் போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்தேன். வீட்டுல “ஏங்க ஒரு வாரமா சொல்லிகிட்டு இருக்கேன், புல் வெட்டனும்னு அதச் செய்ய துப்பில்லை, ஒரு தமிழ் படத்தை தேடிக்கிட்டு கடை கடையா அலையரீங்களே” ன்னு கடமைகளை “அன்புடன்” நினைவு படுத்த, அதையெல்லாம் கவனிக்கரவரங்களா நாம, கடமை முக்கியமில்லையா. எந்தக் கடைகளிலிலும் கிடைக்கவே இல்லைன்னு இருக்கும் போது நண்பர் ஒருவர் அந்தப் படமா, என்கிட்ட இருக்கு என்று சொல்ல ஓடிப் போய் வாங்கி வந்து இந்தப் படத்தை பார்த்தேன்.

முதலில் இந்தப் படம் வீட்டில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படமேயில்லை. கதையில் அங்கங்கே ஓட்டைகள் என்று எதுவும் சொல்ல முடியாது, ஓட்டைகளுக்கு நடுவே கதை என்று ஒன்று இருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது.

படம் ஹைதராபாத்தில் போலீஸால் தனம் என்ற ஒரு தாசியைத் தேடுவதில் ஆரம்பிக்கிறது. தனம் ஒரு குற்றவாளி என்று போலீஸ் குற்றம் சாட்ட, அவர் குற்றவாளியில்லை என்று ஒரு கூட்டமே சொல்லி ப்ளாஷ்பாக்கில் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இதற்கு மேல் இந்தப் படத்தின் கதையை நாசுக்காக சொல்ல என்னால் ஆகாது. தமிழ் பட கதாநாயகன் ரவுடியாக இருந்து ஒரு கூட்டத்திற்கே சாப்பாடு போடுவான் அதையே என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இந்தப் படத்தில் கதாநாயகி தாசியாக இருந்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றுகிறார் ஆனால் அது என்ன விதமான லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.

திரைப் பட விமர்சனங்கள் எழுதும் போது நானாக விருப்பப் பட்டு பார்க்கும் படங்களைத்தான் விமர்சனம் செய்து வந்தேன், அந்தப் படங்களை நான் பார்க்க யாரும் என்னைத் தூண்டவில்லை, ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக எனது பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ஒரு டப்பா படம்.

The Happening
மனோஜ் நைட் ஷ்யாமளனின் சமீபத்திய படம். நியூயார்க்கின் செண்ட்ரல் பார்க்கில் திடீரென எல்லோரும் தற்கொலை செய்து கொண்டு இறக்க, அதிலிருந்து தப்பிக்க பலர் ரெயில் ஏறி பிலடெல்பியா நோக்கி செல்ல வழியில் பலரும் இறக்க ஏன் அவர்கள் அப்படி செய்து கொள்கிறார்கள் என்று ஹீரோ கண்டு பிடிப்பதுதான் கதை. ஹீரோ மார்க் வாஹல்பெர்க். இவர் மிக மிக புத்திசாலி போல இந்தப் படத்தில் சித்தரிக்கப் படுகிறார். அது ஒரு மிகப் பெரிய டுபாகூர் தியரி. இவருக்கு மொத்தமே இரண்டு அல்லது மூன்று விதமான முகபாவங்கள்தான் வருகிறது. அதை மட்டுமே பார்ப்பது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு போர் அடித்து விடுகிறது. அது என்ன ஆக்டிங் எக்ஸ்ப்ரஷனா அல்லது கான்ஸ்டிபேஷனா என்று தெரியாத ஒரு அவஸ்தை நமக்கு. அடுத்து ஹீரோயினாக வருபவருக்கு இந்தப் படத்திற்கு பிறகு நடிக்க சந்தர்ப்பம் கிடைப்பது துர்லபம். தமிழ் சினிமாவில் கூட்டமாக வரும் 100 துணை நடிகைகளில் கட்டங்கடைசியாக இருப்பவர் கூட இவரை விட 1000 மடங்கு நன்றாக நடிப்பார். இது போல ஒரு சம்பவம் நடக்க சாத்தியமுண்டா, ஏன் இப்படி லாஜிக் இல்லாத திரைக்கதை என்று கேட்காமல் படத்தைப் பார்த்தால் படத்தை ரசிக்க முடியலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Thursday, October 30, 2008

அவசரத் தேவை - ரத்த வெள்ளை அணுக்கள் - ஹூஸ்டனில்...

லூகேமியாவுடன் போராடிக் கொண்டிருக்கும் மனீஷ் பரத்வாஜ் என்ற இளைஞருக்கு அவசரமாக ரத்த வெள்ளை அணுக்கள்(WBC) தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்தவர்கள் ஹூஸ்டன் பகுதியில் இருந்தால் உடனே தெரியப்படுத்துங்கள்.

மேல் விவரங்களுக்கு

http://www.lifeformanish.com/wbc.php

Tuesday, October 28, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 29

அமெரிக்க அதிபர் தேர்தல்.
ஒரு வழியாக தேர்தல் வந்தே விட்டது. வெற்றி பெறப்போவது நாங்கள்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது என்பதாக ரிபப்ளிகன் கட்சியும், டெமாக்ரெட் கட்சியும் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜமா என்று யாராவது விளக்கினால் நல்லது. நடுநிலையாக விளக்க யாரும் இல்லாவிட்டால் நான் விளக்கலாம் என்று இருந்தேன். “ஜொஞ்சம் வாய மூடிகிட்டு இருக்கியா” என்று என் நண்பர் ஒருவர் சொன்னதால் சரி நமக்கேன் வம்பு என்று விட்டு விடுகிறேன். முடிவு எப்படியும் நவம்பர் 5ம் தேதி தெரிந்து விடப் போகிறது அது வரை காத்திருக்க மாட்டோமா?

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் நிர்வாக குழுவின் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் அதே நேரம் நிர்வாகக் குழுவின் தேர்தலையும் நடத்திவிடலாம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கும் பலரில் நானும் ஒருவன். அதோடு புதிய குழு வழக்கமான வருடத்திற்கு 3 கலை நிகழ்ச்சி, ஒரு பிக்னிக்கைத் தாண்டி வேறு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தால் சூப்பராக இருக்கும்.

இலங்கையில் போர்
இது சற்று சென்சிடிவான விஷயம். இலங்கை ராணுவத்தின் இந்த போரில், பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் கூடிய சினிமா ப்ரபலங்களுக்கு நடுவே சற்று காரசாரமாக பேசிய இயக்குனர்கள் அமீர் (மெளனம் பேசியதே, பருத்தி வீரன்), சீமான் (தம்பி), பாரதிராஜா, ராமநாராயணன் நால்வரில் அமீர் மற்றும் சீமான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் சீமானின் பேச்சை அவரது இணைய தளத்தில் கேட்டேன். மிக வேகமான சொற்பொழிவு. பலருடைய உணர்வுகளை தூண்டி வெறியேற்றக் கூடிய பேச்சு. கைது செய்யாமல் விடப்பட்ட மற்ற இருவரோடு திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பல கட்சிகள் கூறி வருகின்றன. இதே நேரம் வைகோ மற்றும் அவர் கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்று பார்க்க வேண்டிய அதே நேரத்தில் அனைவரும் பல அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. இவ்வளவு நடக்கும் சமயம் தமிழக முதல்வர் தன் பங்கிற்கு தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவை வாங்கி வைத்திருக்கிறார். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜிநாமா செய்வோம் என்று பத்திரிகைகளுக்கு செய்தி சொல்லியிருக்கிறார். இதில் இலங்கையில் அவதிப் படும் அப்பாவி பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. இது ஒரு சினிமாவின் திரைக்கதை மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று ராஜிநாமா செய்வதாக இருந்தால் அதை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும் அல்லது பிரதமரிடம் தர வேண்டும் இரண்டும் இல்லாமல் தான் வாங்கி வைத்துக் கொண்டு, சும்மா பயம் காட்டுவது என்ன மனிதாபிமான நடவடிக்கை என்று தெரியவில்லை. இதில் அப்பாவி மக்களின் நிலையை நினைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்று உருகி உருகி ஒரு டைலாக் வேறு.

இந்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட் மாட்ச்
இந்தியா இரெண்டாவது டெஸ்ட் மாட்சில் 320 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை போட்டு துவைத்து எடுத்து வெற்றி பெற்று இந்த 4 டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னனியில் இருக்கிறது. இன்னும் இரண்டு டெஸ்ட் மாட்ச் இருக்கிறது. ஆஸ்திரேலியா இதை விட தீவிரமாக அடுத்த இரண்டு டெஸ்ட் மாட்ச்சுகளையும் எதிர் கொள்ளும். அப்போது அவர்களை சமாளிக்க சச்சினின் ஆட்டம் மிக மிக முக்கியம். என்ன செய்யப் போகிறார்கள் இந்திய அணியினர் என்று சற்று படபடப்பாகத்தான் இருக்கிறது.



ரிச்மண்டில் கிரிக்கெட்

ரிச்மண்டில் கிரிக்கெட் அமோகமாக நடப்பது சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் தெரியவந்தது. அவர் சொன்ன இந்த வெப்சைட்டில் விளையாடும் பலரை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
www.greaterrichmondcricketclub.com. இதைப் போல வேறு அணியின் வெப்சைட்டின் தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஆமாம், RTS –ம் ஒரு அணியை தயார் செய்து கிரிக்கெட் விளையாடலாமே?

டிவிங்கிள் டிவிங்கிள் பாட்டு.
யூ டுயூப்பில் சுட்டு பதிவு நானும் போடுவேனே!
இந்த பாட்டைக் கேளுங்கள், சூப்பரா இருக்கு.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்.

Friday, October 24, 2008

அட பரவாயில்லையே

யூட்யூப் காட்டி கொஞ்ச நாளாச்சே. அதான். பாருங்க இந்த ஊர்க்காரங்க நம்ப கச்சேரில கலக்கறாங்க.



கனக்டிகட் மாநிலத்தில் இருக்கும் வெஸ்லாயன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாம். வெகு ஜோர்.

Wednesday, September 10, 2008

வர்ஜினியா செஸ் சாம்பியன் ஆதித்யா




வர்ஜினியா மாநிலத்தின் 2008ம் ஆண்டின் செஸ் சாம்பியன் ஒரு தமிழ் பையன்! லலிதா, பாலசுப்பிரமணியன் தம்பதியினரின் மகன் ஆதித்யா செப்டம்பர் 1ம் தேதி முடிவடைந்த செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கிறான். கூடவே சிறந்த இளைய செஸ் வீரருக்கான ரிச்சர்ட் டெலான் நினைவுக் கோப்பையையும் வென்றிருக்கிறான்.

இன்ஸ்ப்ரூக்கில் இருக்கும் ஹில்டன் கார்டன் இன்'னில் நடந்த இந்தப் போட்டியின் முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

இசைக் குடும்பத்தை சேர்ந்த ஆதித்யா கர்னாடக இசையிலும் கெட்டிக்காரன். ஆதித்யா வீணை வாசிப்பதை ரிச்மண்ட் இசை நிகழ்ச்சிகளில் நீங்கள் கேட்டிருக்கலாம்.

ஆதித்யாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உறுப்பினர்களின் பொதுநல திட்டங்கள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோர்களின் கவனத்திற்கு. membersproject.com ல், உறுப்பினர்களின் பொதுசேவைத் திட்டங்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதில் சிறந்த 25 திட்டங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நீங்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உபயோகிப்பவராய் இருந்தால், இந்த தளத்தில் போய் உங்களுக்கு பிடித்த திட்டத்திற்கு ஓட்டளிக்கலாம். முதலில் வரும் திட்டத்திற்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஒன்றரை மில்லியன் டாலர்கள் அளிக்கவிருக்கிறது. நீங்கள் பலமுறை ஓட்டளிக்கலாம். ஆனால் கடைசி ஓட்டுதான் செல்லும். நான் ASHA விற்கும் Kids For Sightற்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பிடித்த திட்டத்தை பின்னூட்டமிட்டு என்னை இன்னும் கொஞ்சம் குழப்பவும்.

முழு பட்டியல்:
$25 Infant Incubator
6,000 Girls' Scholarships in the Developing World
Advancing Education in Rural Cambodia
Alzheimer's Disease: Early Detection Matters
ASHA - The Livelihood Programme for millions
End Human Trafficking:Sustainable Livelihoods
Feeding 1 Million Children Daily
Help 100,000 children thrive in the classroom!
Help Women and Children Survivors of War Rebuild
Helping Poor Mayans to Help Themselves
Jharkhand Tribal Project
Kids for Sight: Ending childhood blindness - India
Loans That Change Lives
Marine Conservation & Awareness- Pacific Solo Row
Mobile Pediatric Orthopaedic Education
My Little Waiting Room
New, Affordable Treatments with Existing Drugs
Project Brain Child
Protect Cocos Island - World Heritage Site
Rebuilding New Orleans Green
Saving the Lives of Malnourished Children
Solar Powered Africa-LED Lanterns Lighting the Way
Stop the traffic! (human trafficking)
The 3G Project
Using the Power of Soccer to Fight AIDS in Africa
Vote now for your favorite project. American Express will fund the winning projects with $2.5 million:
$1,500,000 for the winning project
$500,000 for the second place project
$300,000 for the third place project
$100,000 each for the two remaining finalists
VOTE NOW

Wednesday, September 03, 2008

கூகுள் குரோம்!


கூகுள் யாரும் எதிர்பார்க்காதபோது ஒரு உலாவியை வெளியிட்டு உள்ளது. கூகுள் குரோம்!  ஏன் இன்னொரு உலாவி என்று சிலர் கேட்கலாம். அதற்கான காரணங்களை  இங்கே விளக்குகிறார்கள் அவர்களே.

நான் அதை நிறுவிப் பார்த்ததில் தெரிந்தவை:

1. வலைப் பக்கங்கள் வேகமாக லோட் ஆகின்றன
2. முகவரிகள் அடிக்கும்போது - கூகுள் சஜஸ்ட் பாணியில் சாய்ஸ்கள் வருகின்றன.
3. எகலப்பை மூலமாக தமிழில் தட்டச்ச முடியவில்லை. இந்த பதிவை வெட்டி ஒட்டுகிறேன் :-(  ஏதாவது வழி இருந்தால் சொல்லவும்.
4. ஒவ்வொரு tab-ம் தனித்தனி processகள். ஒரு tab தொங்கினால் உலாவியே தொங்காது.


குரோமின் மற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

கூகுள் குரோமை சேர்த்து என் கணினியில் நான்கு உலாவிகள். ஐஈ, நெருப்பு நரி(எனக்குப் பிடித்தது), ஆபரா மற்றவை. என் சக ஊழியன் குரோம் தெரியுமா என்று கேட்டால் போகோ தான் உலகின் தலைசிறந்த உலாவி என்கிறான்!  போச்சுடா. இன்னொன்னா?

Tuesday, September 02, 2008

எம் ஐ டி!


அமெரிக்காவின் பிட்ஸ்,பிலானி என (இனிமேல்) அழைக்கப்படும் எம்.ஐ.டி போயிருந்தேன் மகனின் தயவால்!  மகன் ஒரு போட்டியில் கலந்து கொண்டான். எம்.ஐ.டி, எம்.ஐ.டி என்று புல்லரித்துப் போய் இருந்தேன். என் மகன் நீயே போய் சுற்றிப்பார் என்று கழட்டிக் கொண்டான். நான் இப்போதிருந்தே அவனைப் படுத்தப்போகிறேன் என்று - "சின்னவன்தான் இந்த இடத்திற்கு எல்லாம் சரி இல்லையாப்பா" என்று எம்.ஐ.டி கனவிலிருந்து முன்னெச்சரிக்கையாக ஜகா வேறு வாங்கி விட்டான்.  காவ்யா விஸ்வநாதன் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

Monday, September 01, 2008

சென்னை

சென்னை விஜயத்தின்போது எடுத்த படங்களில் இரண்டு...

கூகுள் மட்டும்தான் அவர்களுடைய விஷயங்களை பீடா டெஸ்ட் என்ற பெயரில் வெள்ளோட்டம்  விடமுடியுமா என்ன? நாங்கள் செய்ய முடியாதா என்கிறார் இவர்.



இவர் கடன் கொடுக்க மாட்டாராம். ஆனால் நம்மை எப்படியாவது கடனாளியாக்க மட்டும் தயார்!

Thursday, August 14, 2008

தெருப் பெயர்...


வர வர சென்னையில் தெருப் பெயர்கள் சென்னைத் தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அல்லது இந்தத் தெருவில் ஒருவர் சண்டிகரில் இருந்து டோபா வாங்கி வந்திருக்க வேண்டும். பின்னே இருக்கும்  பழைய தெருப்பெயர் இன்னும் தமாஷ்...

சதங்கா - பாருமய்யா - தெருத்தெருவாக spell check செய்து கொண்டிருக்கிறேன்.

Wednesday, August 13, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 28

சினிமா விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சு அதனால இந்த வாரம் சில படங்களைப் பாத்தி கட்டி வகுந்திடலாம்னு இருக்கேன். முதலில், தசாவதாரம் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை, சொன்னால், "ஏன்யா அதுதான் ஒருத்தர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே அதுகூட உனக்கு பொறுக்கலையா"ன்னு யார் யாரெல்லாம் என்னை கட்டம் கட்டி திட்டுவார்களோ தெரியவில்லை அதனால் Me NO Comments on தசாவதாரம்.

10000 BC
கதை அரத பழசு. நம் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் கதை. என்ன இதில் நம்பியார், ராமதாஸ் வில்லன்கள் இல்லை, ஜெயலலிதாவின் காதல் கதை இல்லை, எம்.ஜி.ஆரின் கத்தி சண்டை இல்லை, நாகேஷின் காமெடி இல்லை, மற்றபடி கதை அதே அடிமைகள் கதை, ஜெயலலிதாவின் கன்னித்தீவுக்கு பதிலாக நைல் நதி ஓரத்தில் எகிப்தியர்களின் ப்ரமீட் கட்ட அடிமைகளை பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். நடுவே டைனோசர் குடும்பத்தைச் சார்ந்த சில பறவைகள் (டெரொடாக்டைல் வகை), பெரிய பல்லுடன் கூடிய புலி (சாபர் வகை), பெரிய யானைகள் (மாமொத்) எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கட்டி ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள். கதையில் வரும் பலர் காட்டுவாசிகள். நல்ல வேலை இயக்குனர் பாரதிராஜா இல்லை, இருந்திருந்தால் கதாநாயகிக்கு கவர்ச்சியாக ஒரு உடை கொடுத்து, பார்க்கும் அருவியெல்லாவற்றிலும் முக்கி எடுத்திருப்பார். இந்த இயக்குனர் அப்படி எந்த அபத்தமும் செய்யாமல் கதாநாயகியை ரொம்ப நயமாக காண்பித்திருக்கிறார். கதாநாயகன் ஊர் விட்டு ஊர் வந்து என்னமோ செய்து கதாநாயகியைக் காப்பாற்றுகிறானா இல்லையா என்பதுதான் கதை. ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் குழந்தைகளோடு பார்க்காதீர்கள், வன்முறை நிறைய இடங்களில் பளீரென தாக்குகிறது கண்டிப்பாக பயப்படுவார்கள்.

பாட்மேனின்
டார்க் நைட்
இது முதலில் குழந்தைகள் படமில்லை. குழந்தைகளோடு பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தயவு செய்து அதைத் தவிர்க்கவும். ஹீத் லெட்ஜர் அருமையாக நடித்திருக்கிறார். இவருடைய அகால மறைவு இந்தப் படத்தின் வெற்றிக்கும் ஒரு காரணம் என்று பேச்சு. ஆனால் இவர் திரையில் என்ன செய்தாலும் விசில் பறக்கிறது. எது நடந்தாலும் இவருக்கு ஒன்றும் ஆவதில்லை, பெரிய ட்ரக் தலைகீழாக விழுகிறது அதிலிருந்து பல்லி அல்லது பாச்சை குட்டி போல தொபேல் என்று விழுகிறார் ஒன்றும் ஆகவில்லை, போலீஸ் ஸ்டேஷனில் பாட்மேன் அவரை அடித்து நொறுக்குகிறார் ஒன்றும் ஆகவில்லை. இப்படி என்ன ஆனாலும் அவர் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் தப்பி வந்து கிக் கிக் என்று சிரிக்கிறார். நம்மூர் ரஜனி, சரத்குமார், விஜயகாந்த் சண்டைகளைப் பற்றி இனி யாராவது எதாவது சொல்லுங்க அப்பால இருக்கு வேடிக்கை. பாட்மேனாக நடிக்கும் கிரிஸ்டன் பேல் ரொம்பவே சுமாராகத்தான் நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய பாட்மேனில் அவர் இதைவிட நன்றாக நடித்திருந்தாக நினைவு. கதையை ஒரு 40 நிமிடங்கள் அதிகமாக இழுத்து அதை ஜவ்வு ஜவ்வுன்னு ஜவ்வி "யோவ் படத்தை முடிங்கைய்யா, வீட்டுக்கு போகனும்" னு எல்லோரும் அவஸ்தைப் பட வைத்து விட்டார்கள். இதில் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது என்று சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. என்னத்தை சொல்றது இதை கேள்வி பட்ட போது என்னை மாதிரி பல பேர் போய் ஏமாந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த மாதிரி படங்களில் மார்கன் ப்ரீமேனையும், மைக்கேல் கெய்னையும் வீணாக்கியிருப்பதை தவிர்க்க ஒரு சட்டமே வர வேண்டும். எனக்கு வர வர பாட்மேனையும் ஸ்பைடர் மேனையும் சூப்பர் மேனையும் பிடிப்பதில்லை இவர்கள் கதைகள், குழந்தைகளுடன் படிக்க கூடிய காமிக் புத்தகங்கள் ஆனால் திரையில் வரும்போது தாங்க முடியாத வயலன்ஸ் திணிக்கப் பட்டு குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

Apocalypto
இது மெல் கிப்ஸனின் படம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லாத படம். பார்த்தால் குமட்டலே வரும் அளவுக்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஒரு நிலையில் "யோவ் என்னய்யா படம் எடுக்கறாங்க " என்று கோபமே வருகிறது. இதையெல்லாம் காசு கொடுத்து வாங்கி வந்து பார்க்கின்ற என்னைப் போல ஆளுங்கள என்ன சொல்றது. இந்தப் படத்தைப் பார்க்காமல் தவிர்த்தால் தப்பேயில்லை.

சீனி கம் (ஹிந்திப் படம்)
இப்படி படம் எடுக்க ரொம்ப தைரியம் வேண்டும். அது இந்த இயக்குனருக்கு இருக்கிறது. ஒரு 60 வயது பெரியவர் (அமிதாப்) 30 வயது பெண் (தபு) இருவருக்கும் வரும் சின்ன மோதல் பின் காதல் இதை அனுமதிக்க மறுக்கும் தபுவின் தந்தை (பரேஷ் ராவல்), அமிதாபின் வயதான தாய், பக்கத்து வீட்டு குட்டிப் பெண் அவளுடைய அப்பா என சின்னஞ்சிறு குழுவை வைத்து ஒரு படம். கதையின் முன்பகுதி லண்டனில் நடக்கிறது பின் பகுதி டெல்லியில் என்று கலந்து கட்டி தந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அமிதாப் சண்டை போட ஒரு சந்தர்ப்பம் வந்ததும் சரிதான் இதுவும் சராசரி மசாலா லாஜிக்கில் மாட்டிகிட்டு முழிக்குதேன்னு நினைத்த போது அதை சாமர்த்தியமாக சமாளித்து விட்டு டிக்கி சாப்பிட போய்விடுகிறார் அமிதாப். முடிவு கொஞ்சம் மெலோ ட்ரமாடிக்காக இருந்தாலும், பரவாயில்லை ரசிக்கலாம் டைப் தான். இப்படிப் பட்ட படங்களில் வரும் குழந்தைகளுக்கு கடுமையான நோய் என்று காட்டுவதை தடுக்க யுனிசெஃப்பில் ஒரு புகார் கொடுக்கலாமா என்று இருக்கிறேன்.

இனி கொஞ்சம் தமிழ்நாட்டு அரசியல்.
''பாஜக மீண்டும் அம்மாவுடன் (ஜெயலலிதா) கூட்டணி சேருமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அம்மா, அய்யா (கருணாநிதி) இரண்டு பேருமே ஒன்று தான். அரசியலில் எங்களுக்கு எதிரிகளே கிடையாது''(வெங்கையா நாயுடு)
இதுக்கு பதிலா எங்களுக்கு வெக்கம் மானம் ரோஷம் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருக்கலாம்.
******************************************************************************************
''தனது பிறந்த நாளில், தமிழக முன்னேற்றத்துக்கு இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத மிகப்பெரிய திட்டத்தை விஜயகாந்த் அறிவிப்பார். திட்டமிட்டபடி 'கேப்டன் டிவி' துவக்கப்படும்'' (தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா)
அது என்ன திட்டம் அரசியல் சினிமா ரெண்டிலிருந்தும் விலகி டிவி ஒளிபரப்பு துவக்கி நீங்களே எல்லா தொடர்களிலும் நடிக்கரதா. சூப்பர்!!!
******************************************************************************************
''என் வீட்டில் 10 நிமிடம் கரண்ட் இல்லை என்றாலும் கூட என் மனைவி என்னங்க மின்சார அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் கஷ்டப்பட்டு அவரை காசிக்கு அனுப்பி வைத்தேன். அங்கு போய் விட்டு வந்த பின்னர் அவர், நம்ம ஊர் சொர்க்கம், அந்த இடம்தான் நரகம் போல இருக்கிறது என்கிறார்.''(ஆற்காடு வீராசாமி)
என்னங்க இது பகுத்தறிவு பாசறையில படிச்சவங்கன்னு வாய் கிழிய பேசட்டு, காசிக்கா போவாங்க கோபாலபுரம்தானே போயிருக்கனும். ஆமா என்ன ஆட்சி கவிழப் போகுதா சொர்க்கம் நரகம் எல்லாம் பேச ஆரம்பிச்சிடீங்க
******************************************************************************************
''12 சமாஜ்வாடி எம்.பிக்கள் அரசை எதிர்த்து வாக்களிப்பார்கள். நானும் வாக்களிப்பேன். இதையடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றுவார்கள். பின்னர் நான் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விடுவேன்'' (அதிருப்தி சமாஜ்வாடி எம்.பி. முனவர் ஹசன்)
ஹைய்யா கட்சி விட்டு கட்சி தாவறதுக்கு இப்படி ஒரு சாக்கா?
******************************************************************************************
''மழை பெய்தால் தமிழக மக்கள் நல்ல சகுனம் என்பார்கள். என் கணவர் போகும் இடமெல்லாம் மழை பெய்கிறது. இது நாட்டுக்கு நல்ல சகுனம்''(சரத்குமாரின் மனைவி ராதிகா)
பார்த்துங்க மழை கொஞ்சம் அதிகமாயிட்டாலும் எல்லாருக்கும் கஷ்டம்தான். அப்புறம் சகுனத்தடையாயிடப் போறாரு.
******************************************************************************************
''அணுசக்தி ஒப்பந்தம் குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவையில் நடந்த முழு விவாதத்தையும் நான் கவனித்தேன். ஆனாலும் கூட எனக்கு தலையும் புரியலை, வாலும் புரியலை''(சமாஜ்வாடி எம்பி அதீக் அகமத்)
என்னங்க காமடி பண்றீங்க, நீங்கள்ளாம் தேர்தல் சமயத்தில பேசரது, அதுக்கு அப்புறம் பேசரது எதாவது எங்களுக்குப் புரியுதா, நாங்க அதைப் பத்தி என்னிக்காவது வருத்தப் பட்டிருக்கோமா?
******************************************************************************************
''அத்வானியை அவரது ஜோதிடர்கள் தவறாக வழி நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலனுக்காக அவர் முதலில் தனது ஜோதிடரை மாற்றிக் கொள்வது நல்லது'' (பிரதமர் மன்மோகன் சிங்)
அதேபோல அவரும் நீங்கள் உங்கள் ஆலோசகரையும், உங்கள் கட்சித் தலைவரையும் மாற்றிக் கொள்ளச் சொன்னால் கேட்பீர்களா?
******************************************************************************************
''கம்ப ராமாயணத்தில் சேது பாலத்தின் புனிதத்தன்மை குறித்து குறிப்பிடும் ராமர், 'இந்தப் பாலத்தை பார்த்தால் அனைத்து தீமைகளும் விலகும்' என்கிறார். பாலம் இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?''(விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் வேதாந்தம்)
என்னங்க இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு, வால்மீகி ராமாயணமே புருடான்னு சொல்றவங்க கிட்ட சூப்பர் டூப்பர் கதை கம்பராமாயணத்தைப் பத்தி சொல்றீங்க.
******************************************************************************************
''பாமக குழி பறிக்கிறது, குழி பறிக்கிறது என்கிறார்கள். நேற்று கூட மரம் நடுவதற்காக குழி பறித்தோம்''(பாமக நிறுவனர் ராமதாஸ்)
பேசரவங்க பேசட்டுங்க அவங்கள விட்டுத் தள்ளுங்க, இப்ப நட்ட மரங்களை எப்போ வெட்டித் தள்ளப் போறீங்கன்னு சொல்லுங்க?
******************************************************************************************
''இளைஞர்கள் விலகி போகிறார்கள் என்று அதிமுக இளைஞர் பாசறையை தொடங்கியுள்ளது. அதில் கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக லேப்டாப் தருகிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்''(திமுக எம்பி கனிமொழி)
அவங்க கட்சி படிச்சவங்களை குறி வெச்சி காய் நகத்துராங்க, நீங்க பாவம் இன்னும் புடவை, வேட்டி, சட்டை, பல்பொடி, செருப்பு தரேன்னு சொல்லி எப்படி ஆள் சேர்க்க முடியும், பேசாம கட்சியில சேர்ந்தா கார் தருவோம்ன்னு சொல்லிப் பாருங்க.
******************************************************************************************
''அரசியல் மிகவும் கெட்டுபோய் விட்டது. அரசியலை சரி செய்ய இன்னொரு மகாத்மா காந்தி வர வேண்டும்''(கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி)
இன்னொரு மகாத்மா வந்து அரசியலை சரிசெய்யரதுக்கு பதிலா உங்களைப்போன்ற எல்லா அரசியல்வாதிகளும் அரசியலை விட்டு விலகிட்டாலே போதும் நாடு உருப்பட்டுவிடும்.
******************************************************************************************
''ஓகேனக்கல் பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?'' (இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்)
அவர் எந்த வருடத்தியத் தேர்தல்ன்னு சொல்லலையே!!!
******************************************************************************************
''பிரதமர் பதவியில் என்னை அமர வைப்பதற்கான இயக்கம் தொடங்கிவிட்டது. மக்களின் இந்த கனவும் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும். நான் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.'' (உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி)
மக்களின் கனவா, கண்டிப்பா பொது மக்களா இருக்க முடியாது, வேற எந்த மக்கள், ஓ உங்க சொந்தக்கார மக்களா, சரி சரி.
******************************************************************************************
''சமூக விரோதிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. கட்சியிலும் இடமளிக்கக் கூடாது''(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன்)
இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி புரியும், எந்தக் கட்சின்னு பளிச்சுனு சொல்லிடுங்க.

பித்தனின்
கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

Tuesday, August 12, 2008

சென்னை

  1. சென்னை!

எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது சென்னை! செல்போன்(மன்னிக்கவும் - அலைபேசி) எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. வீட்டு வேலைக்காரி கையில், கோயிலில் பெருக்கும் ஆயா கையில், திருவண்ணாமலையில் தாலி கட்டி முடித்தவுடன் மணமகன் கையில்... இவ்வளவு நாள் ஒரு போன் இணைப்புக்கே அல்லாடியவர்கள் ஒரு கொலைவெறியுடன் தழுவியிருக்கும் சாதனம் அலைபேசி. அப்பாவின் முகவரிப் புத்தகத்தில் முகவரிகள் எல்லாம் போய் ஒரே போன் நம்பர்களாகத்தான் இருக்கின்றன. போனில் இதுவரை பதில் மட்டுமே பேசிவந்த அம்மா சித்தியின் செல்போன், வீட்டு போன் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே போடுவதை பார்த்து அசந்து விட்டேன்.

செல்போனிலேயே வினாடிகளில் உங்கள் அக்கவுண்டை டாப்- அப் செய்து விடுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுக்காதீர்கள். குறுஞ்செய்தி வந்து குவிந்து விடும். அண்ணன் மகன் தினத்துக்கு நூறு செய்திகளுக்கு மேல் அனுப்புகிறான். இரவு பனிரெண்டு மணிக்கு என்ன செய்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்று இன்னொரு அண்ணன் மகள் புகார் செய்தாள். இன்னொரு அண்ணன் மகன் இவன் செய்திகளுக்கு பயந்து எண்ணையே மாற்றிவிட்டான். இன்னொரு அண்ணன் மகன் இன்னும் செல்போன் பாவிக்கும் வயதுக்கு வரவில்லை. அவன் என்ன செய்யப் போகிறானோ? என்னிடம் முறைத்துக் கொள்பவர்களின் அலைபேசி எண்களை அவனுக்கு கொடுப்பதாக உத்தேசம்.

அண்ணன் சுஜாதா அஞ்சலி வந்த பத்திரிக்கைகளை சேர்த்து வைத்திருந்தான். சதங்காவின் கவனத்திற்கு - ராமகிருஷ்ணன் மூன்று பக்கத்துக்கு மேல் அஞ்சலி எழுதியிருக்கிறார்.

இவ்வளவு நாள் அமெரிக்காவில் இருந்து வந்து பொருட்களின் விலையைப் பார்த்து 'ஆ ஸம்' என்று வாங்கி குவித்தவர்கள், இப்போது நாற்பதால் வகுத்து பார்த்துவிட்டு அம்மாடி என்று ஓடுகிறார்கள். சரவணா, நெல்லி, சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களை விட பணியாளர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். எது எதற்கோ ஆடி தள்ளுபடி. ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுத் தம்பதிகள் SMS செய்துகொள்ள ஆடி அட்டகாச தள்ளுபடி!

திருமண மேடையில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள், மணமக்கள், புரோகிதர் தவிர மற்ற அனைவரும் செருப்பணிந்து இருக்கிறார்கள்.

சென்ற மறுதினம் மதிமுகவின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது சேலையூரில். ஓபாமாவுடன் வைகோவின் படம் பெரிய பேனரில்.

ஒரு பேச்சில்: அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஓபாமாவை சந்தித்து கை குலுக்கி, கட்டித் தழுவி முத்தமிட்ட முதல் தமிழன் என்று எங்கோ போய்விட்டது பேச்சு. ஓபாமாவும் வைகோவும் கேட்டிருந்தால் நெளிந்திருப்பார்கள்... குடியரசுக் கட்சியினருக்கு இந்த பேச்சு போயிருந்தால் வரும் தேர்தலில் ஓபாமாவுக்கு எதிராக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. என்னை அசர வைத்த இன்னொரு பேனர் பாண்டிச்சேரியில்.

எந்த பேனரிலும் இவர் பெயரே கிடையாது. புதுவையின் காமராஜர் என்று ஆரம்பித்து ஒரே அடைமொழிதான். அவ்வளவு பிரபலமா என்று வியந்தேன். புதுவை முழுவதும் இவர் பிறந்தநாள் பேனர்தான். சில பேனர்களில் இவர் அமர்ந்திருக்க பக்கத்தில் சிங்கம், புலியெல்லாம். நிறைய பேனர்களில் அந்த வட்டார கட்சி பிரமுகர்கள் அனைவர் முகமும் போட்டு ஒரே அட்டகாசம். எந்த காங்கிரஸ் முதல்வர் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறார்? அதனால்தான் போலிருக்கிறது காங்கிரஸின் தேசிய விளையாட்டான உட்கட்சி பூசல் அதிகமாகி இப்போது டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நீங்கள் இதை படிக்கும்போது முதல்வராக இருக்கிறாரா என்று பார்ப்போம்.

எல்லா கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங்தான். ஒரு மளிகை கடையில் சில பொருட்கள் வாங்கிவிட்டு பில்லைப் பார்த்தால் அதில் ஒரு வஸ்து: Burpy. என் மகன் சிரி சிரி என்று சிரித்தான். அது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? பெட்ரோல் பங்குகள், பண்ருட்டி மளிகைக் கடைகள், ரிலையன்ஸ் ப்ரஷ் என எங்கிலும் பெண்கள்தான். இந்திய ராணுவத்திலும் பெண்களைச் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் பெண் தேடி அல்லாடுகிறார்கள்.

எஃப் எம் ரேடியோ தமிழ் கலக்குகிறது. அதாவது நம் பித்தன் என் பேச்சை சொன்னமாதிரி, ஆங்கிலத்தில் கொஞ்சூண்டே கொஞ்சூண்டு தமிழ் கலந்து பேசுகிறார்கள். சில DJகள் குரலைக் கேட்டால் நம்ப ஊர் லாவண்யா ராம்கி போலவும், பார்கவி கணேஷ் மாதிரியும் இருக்கிறது. ரிச்மண்டில் எஃப் எம் ரேடியோ ஆரம்பிக்கவிருக்கிறவர்கள் கவனிக்கவும். இதைவிட மோசம் மெகாசீரியல் தமிழ். பார்ப்பவர்கள் அனைவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல மெதுவாகப் பேசுகிறார்கள். பிற்காலத்தில் ஒரு ஆராய்ச்சி பண்ணி இதனால் தமிழர்களின் மூளை அவ்வளவு விரைவாக வேலை செய்யாது என்று டாக்டரேட் செய்யாமல் இருந்தால் சரி.

குசேலன் படப் போஸ்டரில் ஒன்றிலும் அந்தப் படத்தின் கதாநாயகனைக் காணமுடியவில்லை. பாவம் பசுபதி! அனைவர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது. நாம்தான் இங்கே நின்டென்டோ விற்கும் சாதனங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். சென்னையில் கம்ப்யூட்டரில் gameboy advance, DS எமுலேடர் புரோகிராம் வைத்து அந்த விளையாட்டுகளை பைசா செலவு இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

போக்குவரத்து மிக மிக அதிகமாயிருக்கிறது. சாலையில் சென்றால் எண்திசைகளிலிருந்தும் வருவதால், ஜாக்கிரதையாக ஓட்ட தும்பி மாதிரி கூட்டுக்கண்தான் வேண்டும். இன்னும் மேலே கீழே இருந்துதான் போக்குவரத்து வரவில்லை. அடுத்த முறை அதுவும் வந்துவிடும். நண்பனின் மாமனார் அவருடைய காரை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். நான் எடுத்துக் கொண்டு போனால் அவர் காரை திரும்ப 'எடுத்துக் கொண்டுதான்' வரவேண்டும் என்று மறுத்துவிட்டேன். டாடாவின் நேனோ வராமலே இந்த கதி! நானோ வந்துவிட்டால் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் புஷ் நானோவை காரணமாக சொல்லுமளவுக்கு பிரச்னை வரப் போகிறது....


இனி உங்களுக்கு சில கேள்விகள்....

1. இது என்ன பூ?




2. இது எந்த மலைக்கோட்டை?


3. இந்த மலைக்கோட்டை?

4. இந்த மலை அடையாளம் தெரிகிறதா? - மேலே கோயிலோ கோட்டையோ கிடையாது....



5. கீழ்காணும் அமைப்பு என்ன? படத்தை பெரிதாக்கிப் பார்க்காமல் சொல்லவும் :-)


பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோயில் சுவற்றில் இருக்கும் சித்திரம்.
சிலோத்துமத்தில் சிலோத்துமம் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது முற்றினால் மருந்து கிடையாது. (கிளிக் செய்து பெரிய படத்தில் பார்க்கவும்).

6. கடைசி கேள்வி - எனக்கு எத்தனை அண்ணன்மார்? :-)

தொடரும்...

Saturday, August 09, 2008

என்ன விலை அழகே - தொடர்கதை

என் இனிய ரிச்மண்ட் தமிழ் மக்களே !

சமீபத்தில ஒரு கதை, உண்மையை மையமாக வைத்து ஆரம்பித்து, கடைசியில் ஒரு அழகிய காதல் கதையாக மாற்றி எழுதியிருக்கிறேன். வந்து வாசித்து சொல்லுங்கள்.

என்ன விலை அழகே

சுட்டிய அழுத்தி, வரும் பக்கத்தில், கடைசிப் பதிவில் இருந்து வாசித்து வாருங்கள். முதல் பாகத்தில் இருந்து பக்கத்தில் ஆரம்பிக்க, blog default மாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. அறிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் :))

Thursday, July 24, 2008

ஒரு இணைய வானொலி:

இந்த வாரம் ஒரு இணைய வானொலி தளத்தை பற்றி நண்பர் ஒருவர் மிகவும் மேலாக சொன்னதால், வேலை பார்க்கும் நேரத்தில் நான் தினமும் (விருப்பமில்லாமல்) கேட்கும் சூரியன், ரேடியோ என்.ஆர்.ஐ. , ஆஹா எப்.எம் போன்றவற்றிலிருந்து மாபெரும் விடுதலை கிடைத்துவிட்டது!!.

கால நேரத்திற்கு ஏற்ற பாடல்கள், இடையில் நல்ல கருத்துகள் (விகடனில் வந்த மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ், இன்று ஒரு தகவல், சுகீசிவம், பட்டிமன்ற பேச்சு, மற்றும் பல), காமெடி (அ.போ.யா, சினிமா காமெடி..), இணைய துணுக்குகள், இன்னும் பல சிறப்பான விடயங்கள் இந்த இரு நாட்களில் நான் கேட்டதில் கவனித்தவை. சில பாடல்களின் முன்னே வரும் (பட) டயலாக், அசட்டு காம்பியர்களின் தேவையே இல்லாமல் செய்கிறது!
கடைசியாக, அலட்டல் இல்லாத, நல்ல தெளிவான தமிழ் பேசும் வானோலி.

இணைய முகவரி: கலசம் வானொலி (http://www.kalasam.com )

நேரடியாக Windows Media Player வழியாக கேட்க http://www.kalasam.com/live

Monday, June 30, 2008

புரதம் மடிக்கலாம் வாங்க...

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புரதம் மடிக்கப்படுவதை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். புரதம் எவ்வாறு மடிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் அல்ஸைமர் மற்றும் பல வகையான புற்று நோய்களின் சூட்சுமங்கள் தெரியலாம். இந்த ஆராய்ச்சியில் நீங்களும் உதவலாம். உங்கள் கணினி சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் அதில் புரதம் மடிக்கும் மென்பொருளை ஓட்டலாம். டிஸ்ட்ரிப்யூட்டட் ப்ராஸஸிங் மூலம் உலகில் பல கணினிகளில் அந்த ஆராய்ச்சியை நடத்துகிறார்கள். அதில் பங்கு கொண்டு சதமடித்திருக்கிறேன். And I have a certificate to prove it! :-)


நீங்களும் உங்கள் கணினியிலும், சக தொழிலாளி ஏமாந்த நேரம் அவர்கள் கணினியிலும் இதை நிறுவி உதவலாம்!

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்!

Wednesday, June 25, 2008

தண்ணி போட்டு ஆ(ஓ)டும் கார்

கார் ஓட்டுவது இனிமேல் தண்ணி பட்ட பாடு தான். கீழ்க்கண்ட செய்தியை படிக்கவும்.


Skyrocketting fuel prices, adulterated fuel, long queues at petrol stations, often unscrupulous attendants out to fleece you -- your cup of woes spills over everytime you need to fill the tank of of your car.

But all this could be history if Genepax -- a Japanese company -- is successful in commercialising its latest innovation: the 'water car.'

Genepax unveiled the car in Osaka, Japan on June 12, saying that a litre of any kind of water would get the engine going for about an hour at a speed of 80 kmph, or 50 mph.

Genepax president Kiyoshi Hirasawa, in a mission statement published on the company's official web site, said, "Our mission is to develop technology and products for efficient production and use of energy. By 'efficient,' we mean ecologically and economically efficient. Ecological and economical energy is our business. Our goal is to create energy that is not taxing on our natural environment."

The water needed to run the car could be tap, rain or sea water, the company clarified.

Once the tank (which is at the rear) of the Genepax car is filled with water, a generator would extract hydrogen from the water using, what the comapny calls, its Water Energy System, or WES, to produce electricity that the car runs on. As opposed to the hybrid cars which emit water, Genepax's invention consumes water.

Whether the car is a commercial success or not remains to be seen, but Genepax said it had applied for a patent and is planning to collaborate with Japanese auto manufacturers.

"Energy made from water," as Hirasawa says, "is not a dream story anymore We hope many people will join us in our challenge to promote the use of our WES, for the better future of the earth," he added in a statement.

Tuesday, June 24, 2008

தசாவதாரம்

தசாவதாரம் திரைப் படத்தை என்னுடன் பேர்ட் த்யேட்டர்ல பார்த்த 100-120 பேருக்கும் இந்தப் படம் பிடித்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த விமர்சனம் சற்று பெரியதாக இருக்கப் போகிறது. எனவே கமலையோ, அல்லது இந்தப் படத்தையோ பிடிக்காதவர்கள் அனைவருக்கும் வருகைக்கு நன்றி, தடயம் அடுத்த அத்தியாயம் வெளிவரும் போது பார்ப்போம். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

படத்துக்கு வாங்கன்னு சொல்லி என் நண்பர் ஒருவரை வரச்சொன்னேன், அவர், "நான் கொஞ்சம் பிஸி, நீ பாத்துட்டு வந்து கதை சொல்லு, நான் டிவிடில வரும்போது பாத்துக்கரேன். அதோட நான் வந்தா என்னைத் தெரிஞ்சவங்க என் வாயைக் கிண்டுவாங்க, நான் ஏதாவது சொன்னா 'கிறுக்கன்'-ன்னு சொல்லுவாங்க வீணா சண்டைதான்னு" சொல்லிட்டார், அதனால அவர் பிடுங்கள் இல்லாமல் ஆனந்தமா படம் பார்த்துட்டு வந்தேன்.

படம் புரியலை, கதை சாதாரண மக்களுக்கு சத்தியமா புரியாது, என்னய்யா இது அசினுக்கு ஒரு டான்ஸ் இல்லை, கவர்ச்சி காட்டின மல்லிகா ஷெராவத்தை பாதிலயே கழுவேத்திட்டாங்க, படம் எந்த ஊர்ல நடக்குதுன்னு ஒரு மண்ணும் புரியலைன்னு யோசிக்கரவங்க ஜோரா ஒரு தடவை கமலையும், வேணும்னா என்னை மாதிரி சில பேரையும் திட்டிட்டு போங்க.

கதை, ஒரு உலக மகா பயங்கர கிருமி அதை வெளியில விட்டா உலகில பலர் அழிந்து விடுவார்கள் என்று அதைக் பத்திரமாக காப்பாற்ற நினைக்கும் ஒரு சாதாரண விஞ்ஞானியின் கதாபாத்திரத்தில் கமல் (கோவிந்தராஜ் ராமசாமி நாயக்கர்). இதைத் தொடர்ந்து கமல் சந்திக்கும் பலரில் மற்ற 8 கமலும் எலும்புகூடாக போய்விட்ட ஒரு கமலும் அடங்குவர். இந்த கதையை ஹாலிவுட்டில் டாம் க்ரூய்ஸ், வில்பர் ஸ்மித் அல்லது வேறு ஒருவர் நடித்திருந்தால் அதைப் புகழ்ந்து பக்கம் பக்கமாக எல்லோரும் பேசி இதைப் போல ஒரு படம் தமிழில் வருவதற்கு இன்னும் 100-150 வருஷம் ஆகும்ன்னு ஆருடம் சொல்லிகிட்டு இருப்போம், அப்படி ஒரு படம் வந்ததும், அட போங்கய்யா கதையே புரியலை, கிருமியாம், ஒரு சின்ன டப்பாவில இருக்குமாம் அது உலகத்தையே அழிக்குமாம் சும்மா புருடா விடாதீங்கன்னு சொல்லி தாளிக்கிறோம்.

எங்கள் உறவினர் ஒருவர், 10 கமலஹாசனின் குணாதிசயங்களை விவரமாக ஒருவர் ஆங்கிலத்தில் விளக்கியிருப்பதை எனக்கு அனுப்பினார், அதை அப்படியே இங்கு தந்திருக்கிறேன். முக்கியமாக இதை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியாது.

To: For the ones who criticize Kamal for Dasavathaaram.
One thing we had noticed is why people didn't get the real subtext and reason for the various roles and hence the title. If you knew the real dasavatharams of Lord Vishnu and their characters you can appreciate the script more. Let me explain, starting with the best adapted role:

1. Krishna avatar - Vincent Poovaraghavan
Lord krishna is actually a dalit, he is dark-skinned [shyamalam]. He saved draupadi when she was being violated and he was the actual diplomat in mahabharatham. Lord krishna dies of an arrow striking his lower leg. Now look at how vincent was introduced.. he appears when asin is about to be molested and he saves her like draupadi. Vincent is the dalit diplomat, fights for land issue [soil issue to be exact] and dies from the metal rod striking his leg. Oh even five of vincent's men are drugged at P. Vasu's.. sounds familiar???
2. Balarama avatar - Balarama naidu
This is an easy given. as the name suggests and the role personifies you can easily get it.
3. Mathsya avatar - Ranagaraja nambi
Nambi is thrown into water in an act of trying to save lord from being thrown into sea, though vainly. what more clue do you want?
4. Varaha avatar - Krishnaveni paatti
During the mukunda song, krishnaveni paatti does varaha avatar in the shadow puppetry. The frame freezes on it for a second. there is the clue. Moreover, in varaha avatar lord actually hides earth so as to protect life forms. Here too krishnaveni hides the germs - life form inside the statue so as to protect.
5. Vamana avatar - Kalifulla khan
Remember in vamana avatar, lord vishnu takes the vishvaroopa, that is the giant form! Hence the giant kalifulla here symbolises vamana avatar.
6. Parasurama avatar - Christian Fletcher
Parasurama is actually on an angry killing spree and killed 21 generations of the particular kshatriya vamsa. Hence the real KILLER... Guess what thats what our Fletcher is! He comes around with the gun [modern upgrade for axe] and kills everyone around. I have to check if he kills 21 people though.
7. Narasimha avatar - Shingen Narahashi
First of all the name itself is a play on the words singam [means lion in tamil] and narasimha [the avatar being symbolised]. Lord Narasimha manifests himelf to kill the bad guy and he also teaches prahaladha.In the movie, he shows up to kill the killer fletcher! and is also a teacher.. Lord Narasimha had to kill the asura with bare hands and hence the martial arts exponent here.. get it?
8. Rama avatar - Avatar Singh
Lord Rama stands for the one man one woman maxim, kind of symbolising true love.. Here Avatar portrays that spirit by saying that he loves his woman more than anything and wants to live for her.
9. Kalki avatar - Govindaraj Ramasamy
As you know, the hero in kaliyug can be none other than the Kalki avatar!!!
10. Koorma avatar - Bush
This is the most loose adaptation I couldn't clearly comprehend. But if you look at the real koorma avatar, the lord is the turtle/tortoise that helps in stirring the ksheera sagara and bringing out the amruth.This essentially creates war among the devas and asuras. Similarly today Bush facilitates war between you know whom... May be Kamal also indicates that this avatar the characteristics of a tortoise...
"இதெல்லாம் சரி, நீ என்ன சொல்ல வர்ரே அதைச் சொல்லு அத விட்டுட்டு அடுத்த ஆளு சொல்றதை ஏன் எங்களுக்கு சொல்றே"ன்னு திட்டாதீங்க. இது இந்த இவர் சொன்ன மாதிரி நிஜமாகவே தசாவதாரமா இல்லையான்னு தெரிஞ்சுக்கரதுக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. எனக்கு, ஒரு படத்தை ரசிக்கத் தேவையானது, நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல இயக்கம், நல்ல ஒளிப்பதிவு, நல்ல பின்னனி இசை, பாடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரிய பாதிப்பில்லை, தொய்வில்லாத கதைக் களமும் திறமையான படப் பகுப்பும் போதும். இவையெல்லாம் இந்தப் படத்தில் இருக்கிறது.

ஒரு கலைஞன் (சொல்லப் போனால் மிகச் சிறந்த கலைஞன்) 10 வேடங்களில் நடித்து, அதற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி (அங்கங்கே இயக்கியும் இருப்பார் என்று நினைக்கிறேன்), ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கியது போல தந்திருப்பது மிகப் பெரிய விஷயம்தான். சில பாத்திரங்கள்(கலிஃபுல்லா கான், அவத்தார் சிங்) அதிகம் வேலையில்லாமல் வெறும வளைய வருவது போல இருக்கிறது. இதுவும் தவிர்க்க முடியாத ஒன்று, எல்லோருக்கும் பேசப் படக்கூடிய அளவில் வசனமும் முக்கியத்துவமும் இப்படிப் பட்ட ப்ரமாண்டமான படத்தில் சாத்தியமில்லை. மகா மகா கலைஞன் நாகேஷுக்கே படம் முழுவதுக்கும் ஒரு பக்கம் அளவுதான் வசனம் என்றால் மற்றவர்களைப் பற்றி அதிகம் சொல்வதற்கில்லை.

ஒரு சைவ சமயத்தை சார்ந்த சோழன்(நெப்போலியன்) எப்படி சாதாரணத் தமிழ் பேசினார் (ஒத்துக் கொள் நம்பி)? பள்ளி கொண்ட பெருமாளை நிஜமாகவே கடலில் தூக்கி எறிந்தார்களா? கிருமி தாக்கிய சில நிமிடங்களுக்குப் பிறகுதானே கடல் நீர் பொங்கி வருகிறது அதற்குள் அந்தக் கிருமி பரவியிருக்காதா? அமெரிக்காவிலிருந்து வரும் வில்லன் கமலுக்கு எப்படி ஹீரோ கமல் இந்தியா வந்திருப்பது தெரியும்? அதுவும் ஏர்போர்டில் எங்கிருக்கிறார் என்பது எப்படித் தெரியும்? எப்படி வீடியோ காமெராவில் கைத்துப்பாக்கியை மறைத்து கொண்டு வரமுடியும்? எப்படி வில்லன் போகிற போக்கில் எல்லோரையும் கொன்று குவிக்க முடியும்? அவர் கடைத்தெருவில் பெரிய களேபரத்தை ஆரம்பித்த பிறகு போலீஸ் ஆஃபீஸர் பலராம் நாயுடு எங்கே போனார்? இப்படி பல கேள்விகளைக் கேட்கலாம், ஆனால் இவையெல்லாம் கதையின் ஓட்டத்தை சற்றும் குலைக்கவில்லை என்பதுதான் நிஜம். கடைசியில் 2004-ல் சுனாமி வந்ததே ஒரு மிகப் பெரிய இழப்பை தவிர்க்கத்தான் என்று கதையை முடித்திருக்கிறார்கள். அது சரியா தவறா என்று ஆராய்வது எனக்கு தேவையில்லாத ஒன்று.
முடிவாக, என்னைப் பொறுத்தவரையில் இது கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம். 13 கமலுக்காக (10 கமல் + கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கமல்கள்) கண்டிப்பாக பார்க்கவேண்டும். கமலைப் பிடிக்காதவர்கள் கதாபாத்திரங்களின் நல்ல ஒருங்கிணைப்புக்காக பார்க்கலாம் அல்லது அசிங்க நடனமாடாத கதாநாயகிக்காகப் பார்க்கலாம் அல்லது கமல் அங்கங்கே அள்ளித் தெளித்திருக்கும் பல நல்ல கருத்துக்களுக்காகப் பார்க்கலாம் அல்லது க்ராஃப்பிக்ஸ் மூலம் பல காட்சிகளைத் தத்ரூபமாக தந்திருப்பதற்காகப் பார்க்கலாம் அல்லது ஒரு க்ராதகச் சுனாமியை கண் முன் கொண்டுவந்து அன்றைய கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியதற்காகப் பார்க்கலாம் கதையை தொய்ய விடாமல் செலுத்தியதற்காகப் பார்க்கலாம் அல்லது மனதைக் கரைக்கும் பாட்டி கமலுக்காகப் பார்க்கலாம் அல்லது தெலுங்கு உச்சரிப்பால் கலகலக்க வைக்கும் பலராம் நாயுடு கமலுக்காகப் பார்க்கலாம் அல்லது நடிப்பால், கண் அசைவால, தெய்வ பக்தியால் நம் அடி வயிற்றை பிசைந்து நம் கண்களைக் குளமாக்க முயன்ற ரங்கராஜ நம்பி கமலுக்காகப் பார்க்கலாம் அல்லது பல இன்னல்களுக்கு இடையில் இப்படி ஒரு ப்ரமாண்டமான படத்தை தயாரித்தவருக்காகப் பார்க்கலாம் அல்லது இப்படத்தை இவ்வளவு சிறப்பாக இயக்கிய ரவிக்குமாருக்காகப் பார்க்கலாம். இத்தனைக் காரணங்கள் போதாது என்றால், குருவி, பீமா போன்ற த்ராபை படங்கள் போதும் என்று இருந்து விடலாம்.

முரளி இராமச்சந்திரன்.