Showing posts with label கணவன். Show all posts
Showing posts with label கணவன். Show all posts

Sunday, April 27, 2014

கணவனின் பார்வையில்!!!!



கல்லூரிக் காலத்தில்
குடும்பம் பற்றிப் பல கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடித்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதேயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்

கனவு கல்யாணம் வரை தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின் தயவால் மணநாளும் வந்தது
விடுப்பெடுத்து விமானம் ஏறி
ஊர் கூட்டி உறவுகள் சூழ
அவள் கரம் பற்றிக் கணவனானேன்

மணமேடையில் அவள் தலை தாழ்த்தி நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின் பாரத்தால்
என்பது போகப் போக புரிந்தது

வீட்டில்
தாய் தந்தை அவளிடம் பரிவு காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தைக் கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க அனுபவித்தேன்

வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில் வந்தது
வீட்டிற்குப் புதிதாக வந்த ஓட்டைக் கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர் உறவினர்கள்

விருந்தறையில் நான் மட்டும் வீற்றிருக்கச்
சமையலறையில்
என் குடும்ப சரித்திரத்தைச்
சத்தமில்லாமல் அவளிடம் வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும் நல்லவன்

வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்குப் பின்
புன்னகையாய் சுருங்கியது

விடுப்பு முடிந்து விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும் அறிவுரையை
அவளிடம் கூறாமல் என்னிடம் கூற
அதிர்ச்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்

முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை இனியில்லை என
ணியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப
அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது

படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதித் துணிமணிகள்
பார்வைக்குத் தென்படவில்லை
அவளைத் தவிர நான் ரசித்த எதையும்
அவள் ரசிக்கவில்லை என்பது
விளங்கியது

புதியன வாங்கப் புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்

கடுங்குளிரிலும் கார் ஓட்டிக்
கடைகள் பல ஏறி இறங்கிக்
கதவை நான் திறந்து பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள் அளக்க
நான்
கடிவாளம் கட்டிய குதிரையாய் அவள் பின் நடந்து
கால்கடுக்கக் காத்திருந்து
கடுங்கோத்தைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும் காட்டிக்
கட்டாயம் வேண்டுமென அவள் கூறக்
காரணமே தெரியாமல் அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டுக்
கடன் அட்டையில் வாங்கிக்
கார் நோக்கி நடந்த
என் கை முழுக்கக் குடும்ப பாரம்

இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்கப் பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது

வீட்டில்
சீதனமாய்க் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய போதெல்லாம்
நான் சோதனைக் கூட எலியானேன்

கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்த் வறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு ஆளானேன்
 அதுவரை
உலக செய்திகளை மட்டுமே
உற்று கவனித்து வந்த நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உன்னிப்பாய்க் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்

அவளைப் பற்றிய வியங்களில்
என்னோடு கலந்து பேசி
அவளே முடிவு செய்தாள்
என்னைப் ற்றிய விசயங்களில்
முடிவு முன்பே எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன

இடைவிடாது பேசி
இடை இடையே கேள்விகளால்
என் கவனத்தை அவள் சோதிக்க
பதில் தவறானால்
பாடத்தைப் பாதியிலேயே நிறுத்தி
அவள் பாரா முகம் காட்ட
பள்ளியிலே ஆசிரியை
பாடத்தை நிறுத்தினால்
ஆனந்தம் அடைந்த நான்
பள்ளியறையிலோ
அதிர்ச்சியில் உறைந்தேன்
என் ஐம்புலன்களையும் கூராக்கி
அக்கால குருகுல சீடனைப்போல்
பாடத்தைத் தொடர மன்றாடினேன்

குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும் மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும் ரசிக்கப்பட்டன

மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
தொண்ணூறு நாட்கள் கழித்துத்
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை எடுத்துரைக்க
எதிர்க்கத் தயாரானேன் நான்

துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக மட்டுமே இருந்த நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்துக் கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும் அதைச் சமாளிக்கச்
சற்றும் எதிர்பாரா நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னைத் தாக்கியது
மூளையைச் செயல் இழக்ச் செய்து
பேசும் ஆற்றலைத் டுத்து
பயங்கர எரிச்சலை எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்குக்
கண்ணீர் என்று பெயர்

ரிது ரிது மானிடராய்ப் பிறப்பதரிது
அதனினும் ரிது ஆசை இல்லாத பெண்
அதனினும் ரிது அழத் தெரியாத பெண்

அழுகைக்குப் பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலித் தாய் வீடானது

அமைதி முயற்சிக்கு நடந்த
அனைத்துச் சுற்றுப் பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது

சண்டையை முடிக்கச்
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை என
என் பாழாய்ப் போ மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை நான்
இடை விடாது உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்

பழைய நண்பர்களைப்
புதிய கோணத்தில் பார்க்க வைத்தாள்
நண்பனின் மனைவியை இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது

ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டுமென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல்
வேலையேதும் நடக்காது என்று பொருள்

செலவைச் மாளிக்க
நான் வீட்டுக் கணக்கைக் கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு அனுப்பும் கணக்கைக் கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத் தவிர
வேறு வழியில்லை எனச்
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்

முருகா ஈசா பெருமாளே
உணர்ந்தேன் உங்கள் பெருமைகளை 
அப்பப்பா ஒன்றுக்கே என் உயிர் பிதுங்க 
இரண்டு கொண்டு சமாளிக்கும் நீங்கள் எல்லாம் 
கண்டிப்பா கடவுளப்பா!

மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை வரை நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது கூறி
நாளுக்கு நாள் நச்சரிதத்தாள்
இடுப்பு வலிக்கு
இப்போதே பயந்தாள்
இனி வீட்டு வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்து முடிக்க
என் இடுப்பு அன்றே வலி கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்

தாயும் மகளுமே ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது உலக அதிசயமாகத்தான்
இருக்க முடியும்

நான் தின்று செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும் ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில் எத்தனை நாள்
என்னும் விடையில்லாக் கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம் என்னை தாக்கியது
பனிப்போர் பார்வைப் போராகிப்
பின் சொற்போராய் முடிந்தது
இறந்தகாப் ண்பாட்டைத் தாய் கூற
எதிர்காப் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில் சிக்கிய என்
நிகழ்கால நிம்மதி நாசமானது
தம்பிக்கு பெண் பார்க்க
மறக்காமல் ஜோதிடரை மாற்றினார்கள்


விடுப்பு முடிந்து திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு விண்ப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
த் மிழைத் துணைக்கழைத்தேன்

சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்க் காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்


-வாசு சண்முகம்


மிசெளரி தமிழ்ச் சங்கத்தின் 2004 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாக் கவியரங்கத்திற்காக எழுதி வாசித்தக் கவிதை