ரிச்மண்ட் தமிழ்க் குடும்பங்களில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். "சுதந்திர இந்தியாவுக்கு காந்தியடிகளின் கொள்கைகளினால் நேர்ந்த தீங்கு"! முதலில் கேட்டு அதிர்ந்து போய்விட்டேன் - இப்படியெல்லாம் யோசிக்கிறார்களா என்று. அதுவும் மாணவரின் தாய் தந்தையர் காந்தியடிகளிடம் மிக்க மரியாதை வைத்திருப்பவர்கள்.
அந்த கட்டுரைக்கான அடிப்படை இதுதானாம். பொதுவாக நம்பப்படும் கருத்துக்களுக்கு மாறாக ஒரு கருத்தை அளிக்க வேண்டுமாம். பார்த்தார் இந்த மாணவர் - வீட்டிலும், மற்ற இந்தியர்களாலும் மதிக்கப்படும் காந்தியைப் பிடித்தார். இங்கே அவருடைய கட்டுரையைப் போட்டால் நம் 'நண்பர்கள்' நாகுவும் ரிச்மண்ட் தமிழ் சங்கமும் காந்தியைத் திட்டுகிறார்கள் என்று கழுவேற்றிவிடுவார்கள் நம்மை. அதனால் இங்கே போய் படித்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமுன் அங்கே முதல் பாராவை ஒரு முறைக்கு நாற்பது முறைகள் படித்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது.