எங்காவது அரிசி சிந்தியிருப்பதைப் பார்த்தால் சுஜாதா!
குதிரைக்கு வெகு அருகே சென்றால், சுஜாதா! (டாக்டர் குதிரைக்கடியா என்று ஒரு பெரிய புத்தகத்தை எடுப்பார். மனைவி உடனே - அதில் குதிரைக்கடிக்கு இல்லை என்பாள்! போன டாக்டரின் அனுபவம்)
ரோட்டிலோ ட்ரெயினிலோ விற்கும் தின்பண்டங்களைப் பார்த்தால் சுஜாதா! (அந்த பண்டம் வேண்டாம் - இஞ்சினுக்கு போடும் ஆயிலில் பண்ணியிருப்பான்!)
டைம் மெஷின் பற்றி எங்கு படித்தாலும் சுஜாதா! (கடவுள் வந்திருந்தார்).
திருப்பதி பற்றி பேசினால் சுஜாதா - 'திமலா'.
சாடிலைட் என்றால் சுஜாதா! வானத்தில் ஒரு மௌனத் தாரகை. (கூட அவர் கிளாஸ்மேட்டும் நினைவில்)
சினிமாவிலோ விமான நிலையத்திலோ கழிப்பறையில் காத்திருந்தால் சுஜாதா! " என் ராசி - எனக்கு முன்னால் இருப்பவன்தான் குடம் குடமாக போவான்" - நிர்வாண நகரம் என்று நினைக்கிறேன்
சிறுவர்களுக்கு மகாபாரதம் கதை சொல்லும்போது தர்மன் - யட்சன் விவாதத்தில் சுஜாதா!
யாருக்காவது கலைமாமணி கிடைத்தால், சுஜாதா! - சென்ற வாரம் நானும் லூஸ்மோகனும் கலைமாமணி பெற்றுக்கொண்டோம்.
சிங்கப்பூரில் ட்ரெயின்கள் நிமிடம் தவறாமல் வருகிறது என்று நண்பன் புகழ்ந்தால் - சுஜாதா(சொர்க்கத்தீவு - don't ask me!)
சாய்பாபா கலைஞருக்கு மோதிரம் கொடுத்தார் என்றால் சுஜாதா!(கடவுள் வந்திருந்தார்)
சிப்பாய் கலகம் அல்லது பைராகி என்றால் சுஜாதா! (ரத்தம் ஒரே நிறம்)
குடகு காபித்தோட்டம் என்றால் சுஜாதா! (கதைப் பெயர் மறந்துவிட்டது - ஒருவர் மனைவி காணவில்லை என்று கணேஷ்-வசந்திடம் கதை பண்ணுவார்)
ஸ்காட்லண்ட் யார்ட் என்றால் சுஜாதா! (ப்ரியா)
அழகான நாய்க்குட்டியைப் பார்த்தால் சுஜாதா!(மீண்டும் ஜீனோ)
நியூட்டன் விதிகள் என்றால் சுஜாதா! (ஒரு கதையில் அவ்விதிகளை வைத்து விபத்துக்கு காரணம் யார் என்று கணேஷ் கண்டுபிடிப்பான்)
சமீப காலமாக, யாருக்காவது இருதய சிகிச்சை என்றால் சுஜாதா - சிகிச்சைப்பிறகு எடுத்த என் போட்டோவைப் பார்த்து சின்ன பசங்கள் பயப்படுகிறார்களாம்.
உங்கள் பட்டியலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
மும்பையைச் சார்ந்த என் சக ஊழியரிடம் ஒருமுறை பெங்களூர் மற்றும் டெல்லி ஆட்டோக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் நாம் போகுமிடத்திற்கு வராமல் அவர்கள் போகுமிடத்தை சொல்லி அழைப்பார்கள் நினைவிருக்கிறதா? அவர் தனக்கு அந்த பிரச்சினை எப்போதுமே பெங்களூரில்
இருந்ததில்லை என்றார். ஆட்டோவை நிறுத்தி பனசங்கரி காவல்நிலையம் போகவேண்டும் என்பாராம். ஒரு மறுப்பும் வராதாம். அவர் வீடு காவல்நிலையத்திற்கு பக்கத்து வீடாம். "அப்படியா, என் அபிமான எழுத்தாளர் தமிழில் அப்படி காவல்நிலையத்து பக்கது வீட்டில் இருந்தவரை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறார் என்றேன். தமிழ் சுத்தமாக தெரியாத அந்த மனிதரிடம் இருந்து வந்த கேள்வி - "யார் சுஜாதாவா?"
எனக்கு ஒரே ஆச்சரியம். சுஜாதா அந்த வீட்டில் அவருக்கு முன்னால் குடியிருந்தாராம்!
போன மாதம் மகனுடன் ஒரு வகுப்பிற்கு சென்றிருந்தேன். அந்த வகுப்பில் இன்னொரு இந்தியர் தன் மகளுடன் வந்திருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தபோது அவர் பெங்களுர் பி ஈ எல்'லில் பணிபுரிந்ததாகச் சொன்னார். உடனே நமக்கு வேறு என்ன தோன்றும்? - ரங்கராஜன் என்று ஒருவர் இருந்தாரே தெரியுமா? ஏதோ நமக்கு ரொம்ப தெரிந்தவர் மாதிரி! சுஜாதா அவருடைய மேலாளருக்கு மேலாளராம். எங்காவது வேலை நிமித்தமாக பயணம் செய்ய அனுமதி வாங்க சில சமயம் பேசியிருக்கிறாராம்.
நான் பெங்களூரில் பணிபுரிந்த சமயம் சதாசிவ நகரில் இருந்த எங்கள் அலுவலத்தின் வழியாக சிலமுறை சுஜாதா காரில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எம்ஜிரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சிஆரெல்லிருந்து வெளியே வந்து பக்கத்தில் நடந்து வந்தார். அவ்வளவு அருகில் சுஜாதா! எனக்கு ஸ்தம்பித்து விட்டேன். சுதாரித்து, பேசலாம் என்று பார்த்தால் சட்டென்று காரில் ஏறி சென்று விட்டார்.
அப்போது பெங்களூர் அலுவலகத்தில் CASE Tools எழுதிக்கொண்டிருந்தோம். சரியாக ப்ரோக்ராம் எழுத வராதவர்கள் போய் மற்றவர்களுக்கு எப்படி எழுதுவது என்று ட்ரெய்னிங் கொடுக்க செல்வார்கள். அப்படி செல்பவர்களில் ஒருவர் ஒரு நாள் - that Rangarajan should be shot dead என்று கூவிக் கொண்டிருந்தார். என்னய்யா விஷயம் என்றேன். பிஈஎல்லில் ட்ரெய்னிங் போயிருந்தாராம். அப்போது அங்கே ஒரு ரங்கராஜனிடம் வாக்குவாதம். ப்ரோக்ராமர்கள் தாங்கள் எழுதுவதை அவர்களே டாக்குமெண்ட் செய்யவேண்டுமா வேண்டாமா என்று. நமக்கு நம்மை சொன்னால் கூட கோபம் வராது. சுஜாதாவைச் சொல்லிவிட்டால்? எனக்கு அதில் முரணான கருத்து இருந்தாலும் அந்த ஆளிடம் சுஜாதா சார்பாக அரைதினம் சண்டை போட்டேன். சுஜாதா பற்றி ஏதாவது சொல்லிவிட்டு யார் தப்பித்தார் நம்மிடமிருந்து. சதங்காவிடம் கேட்டுப் பாருங்கள். நம் பதிவில் சதங்காவிடம் பின்னூட்டத்தில் நடந்த சண்டை பற்றி தெரியுமா உங்களுக்கு?
சிறு வயதில் என் சகோதரர்களுக்குள்ளே கடும்சண்டை வர ஒரு காரணம் சுஜாதா புத்தகம் - யார் முதலில் படிப்பது என்று. முதலில் படிப்பவன் சத்தமாக சிரித்து சிரித்து மற்றவர்கள் வயத்தெரிச்சலை கொட்டிக் கொள்வான். சுஜாதா பற்றி நிறைய வாக்குவாதம் சகோதரர்களுக்குள் நடந்திருக்கிறது. என் சகோதரர்கள் அறிமுகப்படுத்தியதால் என் வகுப்பில் எல்லோரும் அம்புலிமாமா படிக்கும் வயதிலேயே நான் சுஜாதாவுக்கு தாவிவிட்டேன்.
உயர்நிலைப்பள்ளியில் கலைக்கழகப் போட்டி நடக்கும். தமிழ்க் கட்டுரையில் - உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் - இந்த தலைப்பை விட அதிகமாக அரைத்த புளி ஏதாவது இருக்கிறதா? அதிலும் வழக்கம்போல திருவள்ளுவர் அல்லது பாரதி பற்றிதான் எல்லோரும் எழுதுவார்கள். நான் ஒருமுறை பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து சுஜாதா பற்றி எழுதிவிட்டு வந்தேன். என் அண்ணன்மார் எல்லாம் சிரி சிரி என்று சிரித்தார்கள். மறுநாள் போய் பார்த்தால் எனக்கு இரண்டாம் இடம்! உமாபதி வாத்தியார் சொன்னார் - "உயிரோடு இருக்கும் எழுத்தாளரைப் பற்றி எழுதியதற்காகவே உனக்கு இரண்டாம் இடம்". அப்படியும் முதலிடத்தை பாரதியே தக்கவைத்துக் கொண்டார். இப்போது அந்த வரிசையில் அநியாயமாக சேர்ந்து விட்டார் இந்த மனுஷனும்!
கல்லூரியில் ஆங்கில வகுப்பில் உனக்கு பிடித்த விஞ்ஞானக் கதையைப் பற்றி எழுது என்று ஒரு அஸைன்மென்ட். மக்களெல்லாம் அஸிமோவ் அது இது என்று பீட்டர் விட்டுக்கொண்டிருந்தார்கள். லைப்ரரியில் இருக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களும் போய்விட்டன. நமக்கு என்ன கவலை? மீரா பேனர்ஜி எல்லா தலைப்புகளையும் புரட்டி விட்டு திடீரென வாய்விட்டு படித்தார்கள்: A Silent Star in space - by Sujatha! நினைவில் இருந்த கதையை ஆங்கிலத்தில் சிறிதாக மொழி பெயர்த்து சேர்த்து ஒரு விமர்சனமும் எழுதி முடித்துவிட்டேன். மீரா பேனர்ஜிக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் சயன்ஸ் பிக்ஷன் கூட எழுதுகிறார்களா என்று? மீரா பேனர்ஜி மேடம் கூட சென்ற மாதம்தான் காலமானார்கள்.
இதில் வருத்தமான விஷயம் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக். மனுஷன் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டார் என்று ரவி திருவேங்கடத்தான் கூட மின்னஞ்சலில் புலம்பியிருந்தார். அடுத்த ஜென்மத்தில் சொல்வாரா என்று பார்த்தால் மனுஷன் எங்கே திரும்பி வரப் போகிறார், அரங்கன் காலில் போய் ஐக்கியமான பிறகு? குட் பை, சுஜாதா! உங்களாலான சின்ன உதவி - சமயம் கிடைக்கும்போது அரங்கன் செவியில் ராஜேஷ் பற்றி கொஞ்சம் போட்டு வையுங்கள்.