Saturday, January 12, 2008

ராஜேஷுக்கு உதவுங்கள்!


என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அவனுக்கு எலும்பு மஞ்சை(bonemarrow) யாரால் கொடுக்கமுடியும் என்ற தேடல் மும்முரமாக நடந்து வருகிறது. உங்களால் முடிந்தால் எலும்பு மஞ்சை தானம் செய்ய பதிந்து கொள்ளுங்கள். ராஜேஷுக்கு உதவ நண்பர்கள் சேர்ந்து ஒரு தளம் அமைத்திருக்கிறோம். (http://www.helprajesh.com).

ராஜேஷ் ஒரு நல்ல நண்பன், பரோபகாரி. அவனுக்கு தெரிந்தவர்களாகட்டும் சரி, தெரியாதவர்களாகட்டும் சரி - உதவி தேவைப்பட்டால் முதலில் போய் நிற்பான். அவனுடன் பெங்களுரில் சாயந்திர வேலைகளில் நம் பசியைக்கூட கவனிக்காமல் அவன் பரோபகார அலுவல்களில் நிறைய சுற்றியிருக்கிறேன்(அவனைத் திட்டிக்கொண்டே). அப்படிப்பட்டவனுக்கு இன்று புற்றுநோய். புற்றுநோய் ஏதோ அபூர்வமான மக்களுக்குத்தான் வரும் என்று நினைக்கவேண்டாம். ராஜேஷ் உங்களை மாதிரி ஒரு சாதாரணன். நிறைய சினிமா பார்த்துக்கொண்டு, கிரிக்கெட் விளையாடிக்கொண்டு, வகுப்பில் மேஜையே ஆடும்வரை காலை ஆட்டிக்கொண்டு திரிந்த ஒருவன். சென்ற ஆண்டு கீமோவில் ஆளே அடையாளம் தெரியாமல் ஆகி மீண்டு வந்தவனுக்கு மீண்டும் வந்திருக்கிறது புற்றுநோய்.
அதுவும் அவன் இரண்டாவது மகன் பிறக்கும்வேளையில் இவன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தான். என்ன கொடுமை!

ராஜேஷ் மாதிரி நிறைய இளைஞர்கள், குழந்தைகள் காத்திருக்கிறார்கள் எலும்பு மஞ்சை தானத்திற்காக. ஆகவே முதலில் பதிந்து கொள்ளுங்கள். ராஜேஷுக்கு பொருளுதவியும் நிறைய தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த நிதி உதவி செய்தால் நல்லது. பொருளுதவி செய்ய விவரத்துக்கு இங்கே செல்லுங்கள்.

5 comments:

  1. get in touch with these guys
    http://www.helpvinay.org/dp/index.php

    and follow their advice to get a better reach.

    details on bone-marrow in tamil here:
    http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post_04.html

    ReplyDelete
  2. என்னாலான சிறிய நிதியுதவியை விரைவில் அனுப்புகிறேன். அன்புடன் குழும தளத்திலும் (Help Help Help என்ற தலைப்பில்) இந்த அறிவிப்பை இடுகிறேன். (எலும்பு மஜ்ஜை தானத்திற்காக எங்கள் இரத்த சாம்பிள்களை 2004-ல் கொடுத்திருக்கிறோம்)

    ReplyDelete
  3. சர்வேசன் - சுட்டிகளுக்கு நன்றி. வினய் சமீர் தளத்தில் இருந்த முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். இன்னும் பதில் வரவில்லை. ஏதாவது தொலைபேசி எண் கிடைக்கிறதா என்று தேடவேண்டும்.

    சேது - உங்கள் நிதியுதவிக்கும், அன்புடன் குழுமத்தில் செய்தியைப் பரப்பியதற்கும் மிக்க நன்றி. அமைதிப்படையில் இருந்தாலும் நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்கவும் நன்றி :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!