ரிச்மண்ட் தமிழ்ச் சங்க சிறுவன் ஒருவன் இந்த வருடம் டென்னிஸில் சாதனை படைத்திருக்கிறான். கடந்த ஜூன் 10-ம் தேதி நடைபெற்ற வர்ஜினியா மாநில உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் இறுதிப் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறான் பரணி சங்கர். நமது சங்க உறுப்பினரான பிருந்தா, சங்கர் தம்பதிகளின் மூத்தப் புதல்வன் பரணி சங்கருக்கு மாநில இறுதிப் போட்டி ஒன்றும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சங்க போட்டி என்று எண்ணுமளவு இரட்டையர் இறுதிப் போட்டியில் நமது சிறுவர்கள் மூவர் ஆடியதை பற்றி இங்கே படிக்கலாம். அந்தப் போட்டியில் இழந்த கோப்பையை இந்த ஆண்டு வெற்றிகரமாக கைப்பற்றியிருக்கிறான் பரணி.
டீப் ரன் பள்ளி இரட்டையர் போட்டியில் வெற்றி வாகை சூடிய செய்தியை இந்தத் தளத்திலும், டீப் ரன் பள்ளியின் தளத்திலும் படிக்கலாம்.
மே மாதத்தில் ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் செய்தித்தாளின் 'இந்த வார சிறந்த விளையாட்டு வீரன்' பரணி சொல்வதை நீங்களே கேளுங்கள்.
இந்த ஆண்டு கல்லூரி செல்லும் பரணிக்கு மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க எங்கள் வாழ்த்துக்கள்!