Monday, March 03, 2008

ஷ்யாம்!

பரதேசியாரே - அமெரிக்கர்களும் மற்றவர்களும் நம்ப ஊரில் சேலை கட்டுவது இருக்கட்டும். இங்க நம்ப சங்கத்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் எல்லோருக்கும் சாந்து பொட்டும், சந்தனப் பொட்டும் வைக்கிறானே, கவனித்தீர்களா? வெங்கட், வித்யா தம்பதியினரின் இளைய குட்டி ஷ்யாம் பற்றித்தான் சொல்கிறேன். நம் ஊர் செய்தித்தாளில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள்.

நான் அடுத்த முறை ஷ்யாமைப் பார்க்கும்போது ஒரு ஆட்டோகிராப் வாங்கி வைத்துக்கொள்ளப் போகிறேன். சின்ன வயதிலிருந்தே டென்னிஸ் மட்டையும் கையுமாக இருந்த ஷ்யாம் இப்போது டென்னிஸ் கோர்ட்டில் 'சும்மா அதிருதுல்ல..'ன்னு சொல்லாமல் சொல்கிறான். இவன் பெயரை சொல்வது கஷ்டமா, இவன் கூட விளையாடுவது கஷ்டமா என்று எல்லோரும் விழிக்கப் போகிறார்கள். மேலும், மேலும் டென்னிஸ் உலகில் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
அது எல்லாம் இருக்கட்டும். வெங்கட் அவர்களே - செய்தித்தாளில் போட்டிருக்கிறதே அது யார் மீனா? :-)

3 comments:

  1. வெங்கட் பையன் என்று மட்டும் கேள்விப்பட்டிருக்கிறோம் இது வரை. எந்த இந்திய தம்பதியினர் வீட்டுக்கு சென்றாலும் (சினிமா பற்றி பேசுவது போல) இந்த பையனைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை !

    as read in the article, you will be a pro one day. வாழ்த்துக்கள் ஷ்யாம் !!!

    ReplyDelete
  2. நாகு,

    ஷ்யாம்மின் புகைப்படம் கிடைத்தால் (அல்லது அந்த ஆர்டிக்கலில் இருந்து எடுத்து) பதிவில் சேருங்கள். நன்றாய் இருக்கும்.

    ReplyDelete
  3. நம்ம ஊர் குட்டிப் பையனைப் பத்திப் படிக்கப் பெருமையா இருக்கு. ஷ்யாமின் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!