Tuesday, March 04, 2008

சின்னக் கண்மணி…

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பெற நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வன்னப் பிஞ்சுப் பாதத்துல
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோக்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பொண்ணே தங்கப் பொண்ணே
கொத்திக்கொத்தி என் மனச
கொள்ளை கொண்ட சின்னப் பொண்ணே

மோகமுல்லச் சிரிப்பக் கண்டு
சோகந் தொலஞ்சு போச்சுதடி
பால்நெலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

ஒன்னழகப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி ஒன்னக் கட்டிக்கத்தான்
வாஞ்ச மீற ஏங்குதடி


--கவிநயா

7 comments:

  1. நல்லா இருக்கு, கவிநயா. கண்ணு முன்னாடி பொண்ணு ஓடற மாதிரி இருக்கு.

    ஆனா பேச்சு மொழியில நடுவுல நடுவுல எழுத்து மொழி வர்ற மாதிரி இருக்கறதுதான் கொஞ்சம் இடிக்குது. உதாரணம்: சின்னப் பெற நெத்தி - செந்தூரப்பொட்டொளிர..

    வாரி ஒன்னக்... வாஞ்ச மீற..

    கொள்ளை கொண்ட - க்கு பதில் கொள்ள கொண்ட-ன்னு போட்டால் நல்லாஇருக்குமோ...

    இத பாருங்கப்பா - இன்னொரு ரவுண்டு 'வன்ன' ஆட்டம் வேணாம் :-)

    ReplyDelete
  2. //நல்லா இருக்கு, கவிநயா//

    நன்றி நாகு!

    //ஆனா பேச்சு மொழியில நடுவுல நடுவுல எழுத்து மொழி வர்ற மாதிரி இருக்கறதுதான் கொஞ்சம் இடிக்குது.//

    இடிக்கிறப்பல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னுக்கோங்க :)

    // இன்னொரு ரவுண்டு 'வன்ன' ஆட்டம் வேணாம் :-)//

    இதுக்கும் நன்றி!

    ReplyDelete
  3. (வந்துட்டு பின்னூட்டம் போடலைன்னா எனக்கு செமத்தியா விழும்.. அதனால...)

    இனிமையா இருக்குதுங்க :-)

    ஊப்ஸ்... வன்ன ஆட்டத்தை ஞாபகப்படுத்தாதீங்க நாகு ;-O

    ReplyDelete
  4. கவிநயா,

    தங்கள் ரசனையின் வெளிப்பாடு, அப்படியே கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  5. நன்றி சேது!

    //(வந்துட்டு பின்னூட்டம் போடலைன்னா எனக்கு செமத்தியா விழும்.. அதனால...)//

    ம்.. அந்த பயம் இருக்கட்டும் அம்மணி! :)

    உங்கள் கருத்துக்கு நன்றி, சதங்கா!

    ReplyDelete
  6. கவிநயா,

    நல்லா வந்திருக்கு கவிதை, நாகு சொன்ன மாதிரி ஒரு குட்டிப் பொண்ணு குதிச்சு ஆடரதுமாதிரி இருக்கு. எனக்கு என்னோட ரெண்டு பெண்களின் சேட்டைகளை நியாபகப் படுத்தியதற்கு நன்றி. எனக்கு கவிதை எழுதத் தெரியாது என்பது நம்மூரில் தமிழ் தெரிந்த அனைவருக்கும் தெரியும், அதனால, பேச்சு மொழி, எழுத்து மொழி பத்தியும் தெரியாது, (அது என்ன வன்ன ஆட்டம், அதுவும் தெரியாது). ஆனால், இந்தப் பாட்டை ஒரு எளிய நாட்டுப் புறப் பாட்டின் மெட்டில் பாட முயற்சித்தேன், வார்த்தைகள் சற்று முட்டியது. உ-ம்.

    பட்டுப்பா வாடை கட்டி
    பச்ச மரு தாணி வச்சு
    பட்டுக் கன்னம் பளபளங்க
    பச் சரிசிப் பல்லு மின்ன

    முதல் இரண்டு வரி கோர்வையா வந்ததும், மூன்றாவது வரியோடு நாலாவது வரி மின்ன என்பதை விடுத்து மினுங்க என்று இருந்திருந்தால் பாட ஒத்து வரும் போல இருக்கிறது.

    இதை படிச்சவுடன், "ஏய், இப்படியே ரவுசு பண்ணிகிட்டிருந்த, கட்டம் கட்டி வெளியேத்திடுவோம்ன்னு" யாரோ மனசுக்குள்ள யோசிக்கரது தெரியுது. ஊரைச் சொன்னாலும், நாகுன்னு அவர் பேர சொல்லக்கூடாது, அதனால நான் அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்.

    சேத்துக்கரசி: எந்த தரமான தமிழ் ப்ளாகை பார்த்தாலும் அதில் உங்களின் பின்னூட்டம் இருக்கிறது, அதிலிருந்து தமிழ் மீது இருக்கும் உங்களின் வாஞ்சை தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  7. என்னுடைய "தெரியாது"ங்கிற லிஸ்ட் அனுமார் வால் மாதிரி ரொம்ப நீளம். அதுல பாட்டு, ராகம், இதுக்கெல்லாம்தான் முதலிடம். யாராச்சும் ராகம் அமைச்சு பாடறதாச் சொல்லுங்க, அப்ப அதுக்குத் தகுந்தா மாதிரி மாத்திடலாம்...

    கவிதை படிச்சதுக்கு நன்றி!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!