Monday, March 31, 2008

என் கண்மணி

நானே எப்பவாச்சும்தான் என் வலைப்பூ பக்கம் போறேன்; ஆனா நீங்களெல்லாம் எப்பவுமே (சதங்கா மட்டும் போனாப் போகுதுன்னு... நன்றி, சதங்கா! :) அந்தப் பக்கம் வரதில்லை. இதான் என் கடைசி முயற்சி, உங்களை வர வைக்க...

என் கண்மணி

7 comments:

  1. கவிநயா,

    Google analytics-க்கு போய் அதை எப்படி உங்கள் ப்ளாகில்(இதன் தமிழ் பதம் வலைப்பூ வா?) எப்படி அதை பயன்படுத்துவது என்பதை நாகுவிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பிறகு எத்தனை பேர் உங்கள் ப்ளாக்கை படிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். அதாவது இதுவரை analytics போடாமல் இருப்பீர்களானால். பின்னூட்டம் எண்ணிக்கையை வைத்து யாரும் உங்கள் ப்ளாக்கை பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வராதீர்கள். இதே எண்ணம் எனக்கும் இருந்த போது நாகுதான் எனக்கு analytics எப்படி பயன் படுத்துவது என்பதைச் சொல்லித் தந்தார். பிறகுதான் எனது ப்ளாக்கை சிலர் தவறாமல் கனடா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் இருந்து படிப்பது தெரிந்தது.

    உங்கள் பதிவையும், சதங்காவின் பதிவையும் நான் தவறாமல் படித்து விடுவேன். நான் பின்னூட்டம் இடுவதில் உள்ள ப்ரச்சனை அது ஒரு கிறுக்கல் பதிவு போல பெரிதாகவும், சற்று கார சார விமர்சனமாகவும் ஆகிவிடக் கூடியது. அதனால் கூடுமானவரை அப்படிப் பட்ட பின்னூட்டங்களை நான் தவிர்த்து விடுகிறேன்.

    ஒரு வேளை நீங்க இடிக்கரப்பல்லாம் கொஞ்சம் தள்ளி உக்காரச் சொல்லி சொல்லி, எல்லோரும், ரொம்ப தள்ளி உக்கார்ந்து இருக்காங்களோ?

    பித்தன்.

    ReplyDelete
  2. 'கிளிக்'கற மாதிரி சுட்டி போடாட்டி என்ன மாதிரி சோம்பேறிகளுக்கு கஷ்டம். அதக் கொஞ்சம் கவனிச்சிங்கன்னா உங்க பதிவு பக்கம் கூட்டமோ கூட்டம் மேய்க்குங்கோ!

    ReplyDelete
  3. நன்றி பித்தரே! தவறாமல் படிக்கிறதுக்கு :)நானும் analytics போட்டுட்டு அப்புறம் கவனிக்கிறேன் :)

    நாகு, போன முறை எல்லாம் க்ளிக்கிற மாதிரிதான் போட்டேன். என்னமோ சொல்வாங்களே, "நொண்டிக் குதிரைக்கு..." அந்த மாதிரி ... ஹ்ம்... :-|

    ReplyDelete
  4. //பின்னூட்டம் எண்ணிக்கையை வைத்து யாரும் உங்கள் ப்ளாக்கை பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வராதீர்கள். இதே எண்ணம் எனக்கும் இருந்த போது நாகுதான் எனக்கு analytics எப்படி பயன் படுத்துவது என்பதைச் சொல்லித் தந்தார்.//

    me too. vaazga Nagu pugaz !!!

    ReplyDelete
  5. ஆஹா - நம்ப புகழ் பாட (ரெண்டே)ரெண்டு பேரு இருக்காங்க. கட்சி ஆரம்பிச்சிட வேண்டியதுதான். கவிநயாகிட்டே கூட அனலிடிக்ஸ் புகழ் பாடியிருக்கிறேன். மறந்துட்டாங்க.

    ReplyDelete
  6. மறக்கலை, தலைவரே (கட்சி ஆரம்பிச்சா தலைவர்தானே!) - அதை நிறுவறதுக்கு நேரம் கிடைக்கலை இன்னும்.

    ReplyDelete
  7. உள்ளேன் அம்மா! (எதுக்கும் எல்லாப்பக்கமும் அட்டென்டன்ஸ் போட்ருவோம்!!)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!