எல்லோரும் காக்கா நரி கதை படித்திருப்பீர்கள். அதை கவிதையாக வடித்திருக்கிறேன்.
புழுதி படிந்த ஒரு கிராமத்தில்
ஒரு யௌவனக் கிழவி வடை
சுட்டு விற்று வந்தாள்
காசு பெற்று வந்தாள்
அந்த கந்தக வடையை
கவர்ந்து செல்ல அங்கே வந்தது
ஒரு கார்மேகக் காகம்
பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேகக் காகத்தின்
கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லறைப் பூக்கள்கூட
அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது.
பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேகக் காகம்
சந்தன மின்னல் போல் பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது
விதைக்குள் இருந்து வந்த விருக்ஷம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம்
அதன் சுந்தரக் கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொப்பனக் காகம்
பூவுக்குள் பூகம்பம்போல்
புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி - நர்த்தக நரி
நாலடியார் நரி
நீதியறிந்து போதி சொல்லும்
போதி மரத்து சாதி
கார்மேகக் காகம் வைத்திருந்த அந்த வடையை
அந்த நரி பார்த்தது
உடல் வேர்த்தது
அந்த ராஜவடையை அபகரிக்க
அதன் நந்தவன மூளை
நாசவேலை ஒன்றை செய்தது
நரி
அதுவாகச் சென்றது ,
காகம் இருந்த மரத்தடியே
மெதுவாகச் சென்றது
ஆனால் அந்தக் கார்மேகக் காகமோ
இச்சக அழகியாகி ய
எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை
தன் நேரிய விரல்களுக்கிடையில் வைத்து
அதன் கூர்மையை சோதித்துக் கொண்டிருந்தது
நரி பகர்ந்தது
ஓ உலக அழகியே
உள்ளூர் மோனலிசாவே
நகராட்சி ப் பூங்காவுக்குள் நுழைந்த நமீதாவே
என் அந்தப்புரத்துக்குள் அத்து மீறி புகுந்த அசினே
தீவுத் திடலில் திடும்பென நுழைந்த திரிஷாவே
நீ பார்க்கவே எ வ்வளவு அழகு
நீ மட்டும் உன் கந்தர்வக் குரலிலே ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும்
சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்
ஏன், நீருக்கும் வேர்க்கும் என்றது
இந்த இடத்தில்தான் சரித்திரம் சரிகிறது
பூகோளம் புரள்கிறது
தமிழ் தடுமாறுகிறது
நரியின் தேவ எண்ணத்திலே
ஈட்டி பாய்ந்தது
ஏனென்றால்,
காகம் என்ன பதிலளித்தது தெரியுமா?
ஏ நர்த்தக நரியே
நான் பாடமாட்டேன்.
ஏனென்றால்
நான் நாகுவின் வாசலில் வளர்ந்த காகம்
ஆகவே மெட்டு இல்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது
ரிச்மண்ட் மக்களே
பாசமுள்ள ரிச்மண்ட் தமிழ் மக்களே
காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது
மனதிற்குள் மழை பொழிந்தது
அங்கே ஆனந்தங்கள் பரவசம்
அனுமதி இலவசம்
கார்மேகக் காகத்தின் கதை
என்னைப் பொருத்தவரை
ஒரு கருவாட்சிக் காவியம் !
கள்ளிக்காட்டு இதிகாசம் !!
பாசமுள்ள ரிச்மண்ட் வாசிகளே
நீங்கள் பள்ளிகளிலும்
பல்கலைக் கழகங்களிலும்
இந்தக் கார்மேகக் காகத்தின் கதையை
பாடத்திட்டமாக்க பரிந்துரை செய்யுங்கள்!
வணக்கம் கூறி கதை முடித்தேன் யான்.
பிகு: நானே எழுதியது என்று சொன்னால்..... பித்தன் நெற்றிக்கண்ணைத் திறந்திடப் போகிறார். அதனால் சொல்லிவிடுகிறேன். இந்த மண்டபத்தில் சுட்டது. அதுவுமில்லாமல் ஏப்ரல் ரெண்டுக்குள் எழுத ஒரு கெடு.. அதான் ஹி.... ஹி....
உங்க கெடுவை செக் பண்ணதான் வந்தேன். பரவாயில்லை; கதைக்கு பதிலா வடையைச் சுட்டு, என்னமோ செய்திருக்கீங்க! :) ஆமா, சுட்டதுல உங்க பேரு, ரிச்மண்ட் பேரு, எல்லாம் வந்த ரகசியம் என்னவோ?
ReplyDeleteநாகு,
ReplyDeleteஉங்க 'ஒரிஜினல்' கவிதையின் யூ ட்யூப் பதிவைப் பார்த்தேன். விவேக் தான் ஒரு அருமையான கலைஞன் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். எனது பார்வைதான் சற்று கோணல் பார்வை ஆயிற்றே, அவர் கவிதை என்று சொன்னது ஒரு நல்ல சந்தங்களோடு வந்த ஒரு கட்டுரை மாதிரிதான் இருந்ததே தவிர கவிதை போல இல்லை.
இருந்தாலும் படிக்க பார்க்க மிக அருமையான ஒரு பதிவு.
பித்தன்.
//ஒரு நல்ல சந்தங்களோடு வந்த ஒரு கட்டுரை மாதிரிதான் இருந்ததே தவிர கவிதை போல இல்லை. //
ReplyDeleteசோ முகமது பின் துக்ளக் நாடகத்தில் சொல்லுவார்: "நம் நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க நான் அமெரிக்கா செல்கிறேன்". உடனே ஒரு உப பிரதமர் கேட்பார் - "அதற்கு எதற்காக அமெரிக்கா செல்கிறீர்கள்?"
பதில்: "நாட்டின் பிரச்னைகள் எப்படியும் தீரப் போவதில்லை. நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா?
அதைப்போல அது கதையோ, கவிதையோ, கட்டுரையோ - நான் கவிதை லேபில் போட்டு அப்புறம் எப்படி எழுதுவது?
எங்கியோ இடிக்கறது என்பவர்கள் கவிநயா சொன்ன வழியைக் கடைப்பிடிக்கவும் :-)
யாரு யார போட்டுத் தாக்குறீங்க என்றே தெரியவில்லை =:D ஆனா கவிதையோ, காவியமோ பதிவு அருமை !
ReplyDeleteGood one; but danger being kept as a lesson in schools/colleges: they have to do research on Trisha, Namitha,
ReplyDeleteEnjoyable one...
Good one; but danger being kept as a lesson in schools/colleges: they have to do research on Trisha, Namitha,
ReplyDeleteEnjoyable one...