இரண்டு நாட்களுக்கு முன்னே ஒரு நண்பனிடம் சாட்'டிக்கொண்டிருக்கும்போது கேட்டேன், "இங்கிலாந்தையும் ஜெயித்து, சவுத் ஆஃப்ரிக்காவையும் ஜெயித்து, நல்ல ரன் ரேட் இருந்தால் இந்தியா செமி ஃபைனல்ஸ் போகுமாம்?". ஏதாவது நடக்கிற காரியமா பேசு என்றான் அவன். எனக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் இளைஞர்கள் என்னமாக ஆடினார்கள். இங்கிலாந்து மேட்சில் யுவராஜின் விளாசல் என்ன? சவுத் ஆஃப்ரிக்காவுடன் இருபதே வயதான முதல் ஆட்டம் ஆடும் ரோஹித்தின் ஆட்டம் என்ன... இருவத்தோரு வயதான ருத்ரப்ரதாப் சிங்கின் பவுலிங் என்ன...
அற்புதம். நீங்களே பாருங்களேன்...
இந்தியாவின் இன்னிங்ஸின் முக்கிய பாகங்கள்.
இந்திய பவுலிங் - முதல் பாகம்
இந்திய பவுலிங் - இரண்டாம் பாகம்
யுவ்ராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்கள். வேறு எந்த வர்ணனையைவிட பங்க்ரா இசை எப்படி பட்டையை கிளப்புது பாருங்க!
யுவராஜை ஃப்ளிண்டாஃப் வெறியேற்றிவிட்டாராம். இருவரும் முறைத்துக் கொண்டு போகும்போது வர்ணனையாளர், "நானாக இருந்தால் இந்த நேரத்தில் யுவராஜிடம் ஒன்றும் வைத்துக்கொள்ளமாட்டேன்", என்று சொல்லி முடிக்கவில்லை. வாணவேடிக்கை ஆரம்பமாகிவிட்டது!
பாகிஸ்தானுடன் ஆடிய ஆட்டம் தமாஷாக முடிந்தது. சர்வதேச அளவில் ஆடும் பௌலர்களுக்கு வெறும் விக்கெட்டுக்கு பந்து போட்டு வீழ்த்தவா முடியாது? அதுவும் மூன்று பௌலர்களும்? எனக்கு என்னவோ பொட்டி வாங்கினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
ஆட்டங்களை பார்க்க வலையில் இரண்டு வழி இருக்கின்றன. சொன்னால் அப்புறம் நான் பார்ப்பதை கெடுத்து விடுவீர்கள் :-) வேண்டுமானால் கூகுளாண்டவரிடம் sopcast tvuplayer என்று முறையிட்டுப் பாருங்கள்!