Sunday, April 25, 2010
Sunday, April 11, 2010
அரிது, அரிது...
எச்சரிக்கை: இந்தப் பதிவை சொஞ்சம் மெல்லிய இதயம் படைத்தவர்கள் தவிர்ப்பது அவர்களின் இதயத்திற்கு நல்லது. கொஞ்சம் கடினமாகவோ கனமாகவோ ஆகலாம். இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாகப் போகலாம். குறுக்குவழி இங்கே...
இன்று மாலை எங்கள் வீட்டருகில் நடந்து சுற்றிக் கொண்டிருந்தோம். சாலையில் நான் ஒரு இலை போல கிடந்த ஒரு வஸ்துவை மிதிக்க இருந்தேன். புது மாதிரியாக இருந்ததால் குனிந்து பார்த்தேன்.எச்சரிக்கையைத் தவிர்த்த மெ.இ.ப. - படத்திற்காக என்னைத் திட்ட வேண்டாம்.
அற்பாயுசில் மரணித்த ஒரு பறவைக்குஞ்சு. அருகில் ஒரு தடயமும் இல்லை. தொடர்ந்து நடந்தோம். அனைவர் மனதிலும் அந்தப் பறவைக்குஞ்சுதான். எப்படி இது நடந்திருக்கும் என்று யோசித்தோம். பல யூகங்கள்.
பறவைக்குடும்பம் கூடு மாற்றி போகும்போது இந்தக் குஞ்சை கீழே தவறவிட்டிருக்கலாம். பறவையினங்கள் சின்னக்குஞ்சை வைத்துக் கொண்டு ஜாகை மாற்றுவது கேள்விப்பட்டதாயில்லை.
வேறு ஒரு பெரிய பறவை முட்டையைத் திருடியோ அல்லது குஞ்சைத் திருடியோ போகும்போது கீழே தவற விட்டிருக்கலாம். ஆனால் பக்கத்தில் உடைந்த முட்டையோ எதுவோ இல்லை. பருந்து போன்ற பறவை இந்தக் குஞ்சைக் கவர்ந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டப் போகும்வழியில் தாய்ப்பறவையுடன் சண்டையில் கீழே போட்டிருக்கலாம்.
இந்தக்குஞ்சு பக்கத்து மரங்களில் எங்கேயோ இருந்த கூட்டில் இருந்து வெளியேற முயன்று கீழே விழுந்திருக்கலாம். சற்று நகர்ந்து சாலையில் வந்து சூட்டில் செத்திருக்கலாம்.
இப்படியெல்லாம் பேச்சு போனது. அப்போது பசங்களிடம் அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது பற்றி ஒரு சொற்பொழிவாற்றினேன். பேச்சை மாற்றுவதற்காக என் பெரிய மகன் சொன்னான். என்ன ஆயிற்றோ என்னவோ, அந்தக் குஞ்சு இப்போது இறைவனிடம் சேர்ந்து ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதனால் அதைப்பற்றி இனிமேல் கவலைப்பட வேண்டாம் என்றான். உடனே சிறியவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. சொர்க்கத்திலும் அது குஞ்சாக இருக்குமா பெரியதாக இருக்குமா? என் பதில்: வயதெல்லாம் உயிருடன் இருக்கும் போதுதான். செத்த பிறகு வயதெல்லாம் இல்லை. எல்லா ஆத்மாவும் சமம்தான்.(நமக்குதான் செத்த பிறகு என்ன நடக்கும் என்பது தெள்ளத்தெளிவாயிற்றே?).
பெரியவன் நக்கல் ஆரம்பமாயிற்று. அப்படியா? விபத்தில் நசுங்கி செத்தவர்களின் ஆத்மா பாதி நசுங்கி இருக்கும் என்று நினைத்தேன் என்றான். நசுங்கல் எல்லாம் உடலுக்குத்தானடா.நசுங்கிய உடல் எல்லாம். அதைத்தான் புதைத்தோ எரித்தோ விடுகிறோமே. மேலே போவது எல்லாம் ஆத்மாதான் என்றேன். மரணத்திற்கு பிறகு நடப்பது என்ன என்று யாருக்குத் தெரியும், எப்படித் தெரியும் என்றான் சிறியவன். பெரியவன் சொன்னான் ஒரு ஒளி மாதிரியோ என்னவோ தெரியலாம். யாராவது எழுதி வைத்து விட்டு செத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றான். ஆனால் ஒரு வாக்கியத்தை பாதியில் விட்டுவிட்டு இறந்துவிட்டால், படிப்பவர்கள் இன்னும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்று பல பாதி வாக்கியங்கள் கற்பனையில் மூழ்கினான்.
அரிது, அரிதுக்கு திரும்ப வந்தேன். பாருங்கடா. மனிதராய்ப் பிறப்பது ரொம்ப கடினம். அதுவும் ஊனமில்லாமல் பிறப்பது இன்னமும் கடினம் என்றேன். அதனால் மனித உயிர் என்பது ஒரு அபூர்வமான வரம். அதை உதாசீனம் செய்யாமல் அனுபவிக்க வேண்டும் என்றேன். அப்படியா, எங்கே தினம் ஓட்டம், சைக்கிள் என்று லெக்சர் அடிக்கப் போகிறாயோ என்று பார்த்தேன் என்றான் பெரியவன்.
வீடு வந்து சேர்ந்தோம். போங்கடா என்று கணினியில் உட்கார்ந்தேன். இட்லிவடை ரொம்ப நாளுக்குப் பிறகு முனிக்கு கடிதம் எழுதியிருப்பதை படித்தேன். சிதம்பரம் கழுத்து சுளுக்குமளவுக்கு திருப்பி மின்னலை(அது யார்?) சைட் அடிக்கும் படம் இருந்தது. அதற்கு மேலே ஹெல்ப் என்று ஆங்கிலத்தில் ஒரு சுட்டி. சும்மா கிளிக்கி அதிர்ந்தேன். கண்கள் கலங்கின. அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது.
ஒரு பிழையும் இல்லாமல் அரிதாகப் பிறந்த ஒரு சுட்டிப் பிறப்பின் நிலை. அதுவும் பண்ருட்டி அருகில் கச்சராப்பாளையத்தில். சுமன் என்ற சுரேந்தர் ஒரு குச்சியை எடுத்து அதிக மின்சக்தி செல்லும் கம்பியைத் தட்டியிருக்கிறான். அவ்வளவுதான். கை, கால்கள் பொசுங்கிவிட்டன. இதற்கு மேல் நீங்களே கதிரின் பதிவில் படித்துக் கொள்ளுங்கள். படிப்பதோடு நின்று விட வேண்டாம் கட்டாயம் உதவ வேண்டும்.
கைகால் பொசுங்கியும் அவன் புன்னகை பொசுங்கவில்லை. இனியும் அந்தப் புன்னகை பொசுங்காமல் இருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
உதவி செய்ய விவரங்கள்:
முகவரி :
P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kacharapalayam post
kallakurichi tk
villuppuram dt
விவரங்கள், சந்தேகங்கள், தகவல்களுக்கு - கதிரின் தொலைப்பேசி: 9791460680
பணம் அனுப்ப:
Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
இந்தியன் வங்கி தளத்திலிருந்து கதிர் எடுத்த விவரங்கள் கீழே
Name : KACHARAPALAYAM
IFSC - CODE : IDIB000K001
MICR - CODE : 606019007
CIRCLE : CUDDALORE
Address : 10 - F, Gomuhi Dam Road
Kacharapalayam
Vadakkanandal Post
PIN : 606207
District : VILLUPURAM
State : TAMIL NADU
Phone : 4151234234
Email : kacharapalayam@indianbank.co.in
அமெரிக்காவில் இருப்பவர்கள் வரிச்சலுகையுடன் நன்கொடை அனுப்பலாம். உங்கள் காசோலையை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
என் பதிவுலக நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் சொன்னது:
ரவி சொன்னதும்தான் உறைக்கிறது. அந்தக் குஞ்சை சாலையிலிருந்து அகற்றி புதைத்திருக்கலாமோ?

Channels of Glory
404 E Laurelwood Dr
Bloomington, IN 47401
காசோலையை 'Channels of Glory' பெயருக்கு அனுப்பவும். காசோலையில் குறிப்பு எழுதுமிடத்தில் 'Towards Suman, Kacharapalayam, India" என்று எழுத மறக்காதீர்கள். பிறகு கதிருக்கு Channels of Glory க்கு அனுப்பிய தொகை என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுங்கள். அவருடைய எண்: +91-9791460680
என் பதிவுலக நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் சொன்னது:
சிறுவனுக்கு உதவுங்கள்
கதிர் பதிவை அப்படியே கொடுத்துள்ளேன். உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள். முடிந்தால் அந்த சிறுவனை போய் பார்த்து ஆறுதலாக பேசிவிட்டு வாருங்களேன்..!!! நானாக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்...!!
ரவி சொன்னதும்தான் உறைக்கிறது. அந்தக் குஞ்சை சாலையிலிருந்து அகற்றி புதைத்திருக்கலாமோ?
Thursday, April 08, 2010
மீனாவுடன் மிக்சர் - 20 {வா வா வசந்தமே}
அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.
நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.
வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.
ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.
இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.
உடல் எடை குறைப்பை பத்தி நான் இன்னிக்கு அதிகம் ஒண்ணும் சொல்லரத்துக்கு இல்லை. ஏன்னா அது ஒரு சோகக் கதை.(மேல சொன்ன பார்முலாவை படிச்சீங்க தானே?) அது மட்டும் இல்லை. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு அழுகின தக்காளி மழையில் நனைய ரெடியாக வேண்டியது தான். சொதப்பினா ஊர் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திட மாட்டாங்களா?
சரி அதை விடுங்க. வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.
அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.
Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?
-மீனா சங்கரன்

Subscribe to:
Posts (Atom)