Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, April 15, 2008

எதிலும் உன் நினைவாய் !

ஒரு காதல் கவிதை. தலைவியைப் பார்த்து தலைவன் பிதற்றுவது.

எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம். (அதைத் தாங்கி நிறுத்தப் போகிறேனா என்று விவாதிக்க வராதீர்கள் =;) ). எண்ணங்களை சேகரித்து வைப்போமே என எண்ணியதன் விளைவு எதிலும் உன் நினைவாய் ! கவிதை.

வழக்கம்போல வந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_14.html

Tuesday, March 25, 2008

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

பெண், அப்படி என்றாலே கவிதை தான் இல்லையா ? கவிதை மீது காதல் கொள்ளாமல் இருக்கவும் முடியுமா ? ஒரு வாலிபனின் கனவுகள், கற்பனைகளாகக் கவிதை வடிவில் இங்கே. படித்துப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் !

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_1832.html

Thursday, March 13, 2008

அடி பெண்ணே !

டிஸ்கி: இது என் சொந்தக் கதை அல்ல. வெகு நாட்கள் முன் ஆ.வி.யில் படித்த ஒரு கதையும் (used at climax here), பின் நண்பர்கள், அவர்தம் நண்பர்களின் கதைகள் எல்லாம் கலந்து செய்து கலவை தான் அடி பெண்ணே ! படிச்சுப் பார்த்து புடிச்சிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க !!!

பி.கு.: எங்க ஊட்டுக்காரம்மா ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க, ஏன் இந்த மாதிரி விசயங்களில் பெண்கள் தான் தவறு செய்வார்களா ? பசங்க செய்றதில்லையா என்று ! ஏன் இல்லை, அது பற்றியும் ஒரு கவிதை எழுதி போட்டுறலாம் என்று சொல்லி, நல்ல வேளை கவிதையின் நாயகி யாரு என்று அவர்கள் கேட்கும் முன்னால எஸ்கேப்ப்ப்ப்ப் ....

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post.html

Tuesday, July 03, 2007

ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...



வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்

மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்

வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்

இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)

அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்

பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்

-----

இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)

என்றும் அன்புடன்
சதங்கா

Saturday, May 05, 2007

மாறினால் மறக்க முடியுமா ?

"சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

"எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

சொல்லுடா ராஜி.

இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.