ஏ தமிழனே, நம் பாரதி சொன்னது போல " ரௌத்திரம் பழகு" தமிழையும், தமிழை சாடுபவரையும் விட்டு வைக்காதே.
புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது வழக்கம். அது பொங்கினால் மிக உத்தமம். அது போல செயலர் " தமிழ் தளபதி" ஜெய காந்தன் பொங்கினார், ஆனால் அரிசி உலை கொதி நீர் போல அவர் மறுமொழியில் பொங்கி அடங்கினார். பொங்கியதற்கு நன்றி, ஆனால் அடங்குவது முறை அல்ல.
தமிழ் தலைவர் முரளியும் தன பங்கிற்கு தீபாவளி விழாவினை தமிழில் செய்து காட்டி, பெரியவர்கள் தான் பேசுவது இல்லை, குழந்தைகள் எல்லாம் மிக்க ஆர்வத்துடன் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களின் பங்கு குறைவு என்று ஒரு நெற்றியடி கொடுத்து உள்ளார். அன்பான பெற்றோர்களே நீங்கள் தான் அவர்க்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
"தமிழ் கோ" முத்துவோ இந்த வம்பு தமிழுக்கோ என்று ஒதுங்கி உள்ளார்.
"தமிழ் பேரரசு " பரதேசியும் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேசலாம் என்று ஆமோதித்து இருக்கிறார். அனால் சங்கத்தின் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் பேசிய தமிழ் பெரிவர்களிடம் இல்லையே என்று நிருபித்து விட்டனர்.
மிக்சர் மீனாவோ இதனை இன்முகம் காட்டி வரவேற்று உள்ளார்.
டோண்டு வோ, சங்கங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு காரணம் பெரியாரும், பார்ப்பனர்களும் என்று மரபு திரிந்து வழ்க்கமான அரசியல்வாதியை காரணம் காட்டி புறமுதுகு காட்டி உள்ளது.
நம் வம்போ அது நல்லதா, கெட்டதாஎன்று ஆராய்வது அல்ல. அதனை எப்படி செயல் படுத்துவது என்று தான். அன்பான தமிழனே, நீ உண்மையான தமிழனாக இருந்தால் உண்மையை உணர்வாயாக. அமெரிக்காவில் அதிகம் பேசும் மொழி எது தெரியுமா? ஆங்கிலம் அல்ல என்பது உண்மை. ஸ்பானிஷ் (மெக்சிகோவின் மொழி) என்பது தான் உண்மை. ஏன் தெரியுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, அவர்களிடம் வேலை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் ஸ்பானிஷ் கற்று கொள்கிறார்கள். இதே நிலைமை தான் சீன மொழி மற்றும் ஜப்பான் மொழி பேசும் மக்களிடமும் .
உன்னிடம் பணிவு உண்டு, திறமை உண்டு, ஆனால் விட்டு கொடுக்கும் பங்கும் உண்டு. அதனால் தமிழை விட்டு கொடுக்காதே. உன் திறமையை அறிய இந்த உலகம் உன் மொழியை கற்கும என்று இறுமாப்பு கொள். இந்த உலகம் உன் திறமையின் காலடியில். பரங்கியனை பாடாதே. வஞ்சகம் பேசாதே. உன்னால் ஒருவன் மேன்மை அடைகிறான் என்றால் அவன் தமிழன் என்றால் மட்டும் பெருமை கொள்.
நாரதனின் கலகம் இன்னும் ஆரம்பமாக வில்லை.
வேதாந்தி