Showing posts with label பிரபலம். Show all posts
Showing posts with label பிரபலம். Show all posts

Tuesday, October 02, 2007

நியுயார்க்கின் சிறந்த தெருவோர உணவகம் - NY Dosas

நியுயார்க் நகரத்தின் தெருவோர உணவகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் சிறந்த கடைகளை தேர்ந்தெடுத்து வெண்டி அவார்ட்ஸ் என்ற பரிசை அளிக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் திரு குமார். தோசா மேன் என்று அழைக்கப்படும் கந்தசாமி திருகுமார் ஈழத்தில் இருந்து வந்தவர். வேகன் முறையில் நெய், வெண்ணெய் இல்லாமல் இவர் சுடச்சுட சமைக்கும் தோசைகள் பறக்கின்றன. பல நியுயார்க் சுற்றுலா இதழ்களில்(Tour Guide), நியுயார்க் நகரில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியலில் இவருடைய தோசைக்கடையையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் வெண்டி அவார்ட்ஸ்க்கு கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களை கீழே காணலாம்



தெருவோர கடையாய் இருந்தால் தரங்குறைவான எண்ணெய், காய்கறிகள் உபயோகிப்பார்கள் என்ற பரவலான கருத்தை பொய்ப்பிப்பதே என் நோக்கம் என்கிறார் திரு குமார்.

Monday, October 01, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 3 - இந்திரா நூயி

இந்த எந்திர உலகில், மனிதர்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டிருக்கிறது. நெருங்கிய பால்ய நண்பர்களே, தொலைபேசியில் அழைத்தாலோ, மின்னஞ்சல் செய்தாலோ, அவர்களின் புலம்பல் தான் வெகுவாக இருக்கிறதே அன்றி நம்பிக்கை வலுப்பதில்லை ;-(

நமது வாழ்வில் ஒரு சிலரைப் பார்க்கையில், அவர்களைப் பற்றி படிக்கையில் ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை வலுக்கும். அப்படி ஒருவரைப் பற்றி சமீபத்தில், நம் தமிழ் சங்கத் தலைவர் நாகு மூலம் அறியப் பெற்றேன்.



நூயி அவர்களின் பெருமையை நம்ம வீட்டு அம்மணியிடம் சொல்லி அசத்தலாம் என்று பார்த்தால், இவரைப் பற்றி எனக்கு முன்பே தெரியுமே என்று சொல்லி நம்மை அசத்தி விட்டார்.

இந்திரா நூயி ! என்னது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணி கூகுளாரிடம் முறையிட்டால், கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார் இந்தப் பவர்புல் பெண்மணியைப் பற்றி. தொழில்துறை பத்திரிகைகள் அனைத்திலும் இவரைப் பற்றி செய்தி தான் ப்ரதானம். "இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்கத் தொழில்துறை அரசி" என்ற பட்டத்துடன் விவரிக்கிறது Times of India.

என்றாவது நெற்றியில் திருநீறு (ஒரு சிறு கீற்று) அணிந்து வேலைக்குச் செல்வது நம் போன்ற சிலரின் வழக்கம். அதையே சில நண்பர்கள் (வெள்ளைக்காரர்கள் என்று நினைக்காதீர்கள், பக்கா இந்தியர்கள் தான்) இதெல்லாம் ஏன் வைத்து வருகிறீர்கள் ! இவர்களுக்குப் பிடிக்காது தெரியுமா என்று ஜால்ரா அடிப்பார்கள்.

ஆனால் நூயி அவர்கள், 1980ல் Yale பல்கலைக் கழகத்தில் பயிற்சி முடிந்து Boston Consulting Group என்னும் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்கு, நம் பாரம்பரிய உடை சேலையில் சென்றிருக்கிறார். வேலையும் வாங்கியிருக்கிறார் !

நூயி அவர்களைப் பற்றிய மேலும் சில ப்ரமிப்புக்கள் :

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக பவர்ஃபுல் பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். 2005ம் ஆண்டு கணக்கெடுப்பில் பதினோறாம் இடத்தில் இருந்தவர்.

2000ல் Chief financial officer பொறுப்பேற்ற பின்பு பெப்சி நிறுவனத்தின் ஆண்டு ரெவின்யூ 72% கூடியிருக்கிறது.

இந்த 2007 மே மாதம் பெப்சி நிறுவனத்தின் சேர்மன் & CEO ஆகியவர்.

நம் நாட்டின் மிகச் சிறந்த விருதுகளின் ஒன்றான பத்மபூசன் விருது பெற்றவர்.

மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

தற்போது கணவருடனும், இரு மகள்களுடனும் கனெக்டிக்கட்-ல் வசித்து வருகிறார்.

நூயி அவர்களைப் பற்றிய வீடியோ காட்சி:

Saturday, June 16, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 2

என்னோட ஆர்வமெல்லாம் இசை தான். சிறு வயதில், என் அண்ணனோடும், தம்பியோடும் சேர்ந்து இந்தியா முழுக்கசுத்தி நாடகங்களுக்கு இசை அமைச்சிருக்கேன்.

ஹார்மோனியம் தான் பிரதான வாத்தியம். பிறகு சென்னைக்கு வந்து பியானோவும், கித்தாரும் கத்துக்க ஆரம்பிச்சேன்.

அப்புறம் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் டிப்ளமோ பயின்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

ஆண்டவன் கிருபையில என்னோட வாரிசுகளையும் இசைத்துறையில பேர் சொல்ற அளவுக்கு கொண்டுவந்திட்டேன்.

இசைக்கு அப்புறம் எனக்கு புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் நிறைய உண்டு.



  • பிரபலம் யாருனு கண்டுபுடிச்சிருப்பீங்க, அவரே தான். இளையராஜா என்று அழைக்கப்படும் டேனியல் ராசய்யா அவர்கள்.


  • இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பல இந்திய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


  • இவரது இசையில் முதல் படமான அன்னக்கிளியில் வந்த 'மச்சானப் பாத்திங்களா' பாட்டு இன்றளவும் பேசப்படுகிறது.


  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான விருதுகள் பெற்றவர், தன் மாநிலம் தன்னை கெளரவிக்கவில்லையே என்ற தாக்கத்திற்கு ஆளானவர். பின்பு கலைமாமனி, இசைஞானி போன்ற பட்டங்கள் கிடைத்தது.


  • ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.


  • ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.


  • காட்சியை விவரித்தவுடனே காகிதத்தில் இவருக்கு இதென்று notes எழுதிக் கொடுத்திடுவார். அவசரத்துக்கு எழுதற notes-ஆக இல்லாமல் அத்தனை துல்லியமாக இருக்கும் என்று இவரைப் பற்றி ப்ரமித்தவர் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.


  • அரைமணி நேரத்தில தன்னால் ஒரு திரைக்கு இசை அமைக்க முடியும் என்றவர்


  • பஞ்சமுகி என்ற கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தவர்.


  • மக்களைக் கவரும் வண்ணம் இசையால் பல பல திரைப்படங்களை வெற்றிகரமாக்கி ஓடச் செய்து திரையில் பல ஹீரோக்களை உருவாக்கியவர்.


  • திருவாசகம் இசை வடிவில் அமைத்து புகழ் பெற்றார். அதற்கு உண்டாகும் தயாரிப்பு செலவை தன் ஒருவனால் செய்யமுடியும் என்றும் ஆனால் எல்லோரையும் சேர்த்து செய்து இது எல்லோராலும் உருவாகிய முயற்சி என்று மற்றவர்களையும் பெருமைப் படுத்தியவர்.


  • இன்னும் நிறைய ப்ரமிப்புக்கள் இளையராஜாவைப் பற்றி இருந்தாலும், பதிவின் நீளம் கருதி மிகச் சிலவே அளிக்கப்படுகிறது.

    மேலும் இவரைப் பற்றி ப்ரமிக்க சுட்டிகள் கீழே

    Internet Movie Database
    விக்கிபீடியா
    ராக்காம்மா

    Friday, May 25, 2007

    பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 1

    இந்த வீடு வாங்கி, அது ஆச்சு அம்பது வருசம். கல்யாணம் முடிஞ்சு வாங்கின வீடு. எவ்வளவோ இடங்களுக்குப் போனாலும் என் வீடப் போல வராது. என்ன தான் பணம் வச்சிருந்து பங்களாக்கள் இருந்தாலும் நான் இன்னும் இந்த வீட்டில தான் வசிக்கிறேன்.

    வீட்டுப்பக்கத்தில கொஞ்ச நிலம் வாங்கி அதை வாடகைக்கு விட்டுட்டேன். அதில கொஞ்ச வருமானம் வர ஆரம்பிச்சது. பங்குச் சந்தையில இறங்கினேன். எனக்கு இந்த கைத்தொலைபேசி, மடிக் கணிணி கச்சடாவெல்லாம் வச்சிக்கனும்னு இஷ்டமே இல்லை. (இந்தக் காலத்து பசங்கள நினைத்து சொன்னாரா என்று தெரியவில்லை !)

    வேலைக்குப் போய்ட்டு, கார ஓட்டிகிட்டு நேரா வீட்டுக்கு வந்தன்னா, பாப் கார்ன் வச்சிக்கிட்டு தொலைக்காட்சியில மூழ்கிடுவேன்.

    எனக்கு இந்த பர்ட்டிகெல்லாம் போய் சோசியலைஸ் பண்றதுல விருப்பம் இல்லை.



    இப்படிச் சொல்பவர் திரு. Warren Buffet அவர்கள் [Greatest Stock Market Investor of the Modern World].


    இவரைப் பற்றிய பிரமிப்புகள்:

  • முதல் பங்கு வாங்கிய வயது பதினொன்று. பின்னாளில் அதுவே தாமதம் என்று நினைத்தாராம்.

  • பதின்மூன்று வயதில் வருமான வரி கட்டியது.

  • பதினாலு வயதில் ஒரு சிறு பண்ணையை (செய்தித் தாள் விற்ற காசில்) வாங்கி வாடகைக்கு விட்டது.

  • பதினைந்து வயதில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து pinball game machine வாங்கி புழக்கத்தில் விட்டு, சில மாதங்களில் மேலும் இரண்டு மெசின்கள் வாங்கியது.

  • பல வருடங்கள், நலிந்த / நலிவுறும் பல நிறுவங்களை வாங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியது. உதாரணம் Berkshire Hathaway, GEICO.

  • இவரது Berkshire Hathaway நிறுவனத்தின் கீழ் தற்போது 63 நிறுவங்கள் செயல்படுகின்றன.

  • உலகில் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமை பெற்றது.

  • சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர்களில் 80% (37 பில்லியன் டாலர்கள்) charity க்கு கொடுப்பதாக அறிவித்தது.

  • இவரது ஆஸ்தான சீடர் திரு. Bill Gates அவர்கள்.

  • இன்னும் பல பிரமிப்புக்கள் ...

  • கடைசியா, இவரது ஆண்டு சம்பளம் 100,000 டாலர்கள் மட்டுமே. இவரை ஒத்த மற்றவர்கள் வாங்கும் சம்பளம் 9 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இவரைப் பற்றி மேலும் பிரமிக்க இங்கே க்ளிக்கவும்.


    ------------------------

    அனைவருக்கும் வணக்கம் !

    முதல் முயற்சியா இதப் பண்றேன். இந்த மாதிரி எல்லாரும் பண்றது தான். என்ன, ஒரு சின்ன வித்தியாசம் தலைவர்களின் படங்களை வரைந்து பதியலாம் என்று ஒரு எண்ணம். உங்க கருத்துக்களை வரவேற்கிறேன்.

    சண்முகா.