Saturday, June 16, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 2

என்னோட ஆர்வமெல்லாம் இசை தான். சிறு வயதில், என் அண்ணனோடும், தம்பியோடும் சேர்ந்து இந்தியா முழுக்கசுத்தி நாடகங்களுக்கு இசை அமைச்சிருக்கேன்.

ஹார்மோனியம் தான் பிரதான வாத்தியம். பிறகு சென்னைக்கு வந்து பியானோவும், கித்தாரும் கத்துக்க ஆரம்பிச்சேன்.

அப்புறம் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் டிப்ளமோ பயின்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

ஆண்டவன் கிருபையில என்னோட வாரிசுகளையும் இசைத்துறையில பேர் சொல்ற அளவுக்கு கொண்டுவந்திட்டேன்.

இசைக்கு அப்புறம் எனக்கு புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் நிறைய உண்டு. • பிரபலம் யாருனு கண்டுபுடிச்சிருப்பீங்க, அவரே தான். இளையராஜா என்று அழைக்கப்படும் டேனியல் ராசய்யா அவர்கள்.


 • இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பல இந்திய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


 • இவரது இசையில் முதல் படமான அன்னக்கிளியில் வந்த 'மச்சானப் பாத்திங்களா' பாட்டு இன்றளவும் பேசப்படுகிறது.


 • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான விருதுகள் பெற்றவர், தன் மாநிலம் தன்னை கெளரவிக்கவில்லையே என்ற தாக்கத்திற்கு ஆளானவர். பின்பு கலைமாமனி, இசைஞானி போன்ற பட்டங்கள் கிடைத்தது.


 • ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.


 • ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.


 • காட்சியை விவரித்தவுடனே காகிதத்தில் இவருக்கு இதென்று notes எழுதிக் கொடுத்திடுவார். அவசரத்துக்கு எழுதற notes-ஆக இல்லாமல் அத்தனை துல்லியமாக இருக்கும் என்று இவரைப் பற்றி ப்ரமித்தவர் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.


 • அரைமணி நேரத்தில தன்னால் ஒரு திரைக்கு இசை அமைக்க முடியும் என்றவர்


 • பஞ்சமுகி என்ற கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தவர்.


 • மக்களைக் கவரும் வண்ணம் இசையால் பல பல திரைப்படங்களை வெற்றிகரமாக்கி ஓடச் செய்து திரையில் பல ஹீரோக்களை உருவாக்கியவர்.


 • திருவாசகம் இசை வடிவில் அமைத்து புகழ் பெற்றார். அதற்கு உண்டாகும் தயாரிப்பு செலவை தன் ஒருவனால் செய்யமுடியும் என்றும் ஆனால் எல்லோரையும் சேர்த்து செய்து இது எல்லோராலும் உருவாகிய முயற்சி என்று மற்றவர்களையும் பெருமைப் படுத்தியவர்.


 • இன்னும் நிறைய ப்ரமிப்புக்கள் இளையராஜாவைப் பற்றி இருந்தாலும், பதிவின் நீளம் கருதி மிகச் சிலவே அளிக்கப்படுகிறது.

  மேலும் இவரைப் பற்றி ப்ரமிக்க சுட்டிகள் கீழே

  Internet Movie Database
  விக்கிபீடியா
  ராக்காம்மா

  2 comments:

  1. Shan,

   நல்ல பதிவு. நீங்கள் சொல்வதுபோல இளையராஜா பற்றி லிஸ்ட் போட்டால் போய்க்கொண்டே இருக்கும். உங்களின் ராஜா படமும் வெகுஜோர். இசைஞானியின் நிஷ்டையை நன்றாக கொண்டுவந்திருக்கிறீர்கள். scan செய்து போட்டீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் higher resolutionல் ஸ்கேன் செய்ய்ங்கள். படம் ரொம்ப மங்கலாகத் தெரிகிறது.

   ReplyDelete
  2. நாகு,

   பதிவைப் படித்தும், ஓவியத்தைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி . resolution சரி செய்துள்ளேன். o.k.வா என்று சொல்லுங்கள்.

   ReplyDelete

  படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
  தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
  அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!