Monday, June 25, 2007

மீன் பிடிக்க வாரீயளாஅதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது

ஒன்றா இரண்டா
ஓரேழெட் டிருக்குமா ?
அத்தனையும் வேண்டாம்
ஓரிரண்டு பிடித்திடலாம்

என்றே எண்ணியங்கு
தின்னமாய் அமர்ந்து
நெளியும் புழுதனை
நீளமான தூண்டிலிலிட்டு

எவரும் பின்னில்லை
என்றறிந்து வீசியதில்,
மிதக்கும் பந்து
மிதந்து கொண்டேயிருக்க

சிலநேரக் காத்திருப்பில்,
என்ன நடக்குதென்று
சுழற்றி நூலிழுக்கையிலே
முள்ளிலிட்ட புழுவில்லை !

அதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது.

16 comments:

 1. தூண்டில் போட்டுவிட்டு தேவுடு காத்ததை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். படமும் பிரமாதம்.

  ReplyDelete
 2. சண்முகா,

  அருமையான பதிவு. புழு காணாமல் போன பின்னரும் அங்கும் இங்கும் நெளியும் மீன்களை கண்முன்னே உலவ விட்டு கலக்கிவிட்டீர்கள்.

  நாகு,

  இது ஒன்னும் சரியா தெரியலையே, சண்முகா, சதங்கா, கவிநயா எல்லோரும் இப்படி கவிதையில் பின்னி பெடலெடுத்துகிட்டிருக்கரப்போ, நாம (அதாவது நீங்க மட்டும், எனக்கு ரைட்டர்ஸ் ப்ளாக்!!!) இப்படி கதை மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? கொஞ்சம் முயற்சி பண்ணி ஒரு கவிதை எடுத்து விடுங்க.

  இல்லை சீக்கிரம் நம்ம ரெண்டு பேருக்கும், கட்டாய விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடப் போறாங்க!

  அன்புடன்,

  முரளி.

  ReplyDelete
 3. என்ன கிளப்பாதீர். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இன்னொரு கூட்டாங்கவிதை ஆரம்பிச்சு கும்பல்ல கோவிந்தா போடறதுதான். சாயம் இப்பவே வெளுத்துப் போச்சு.ஆட்சி கவுந்துடுமோன்னு கவலயா இருக்கு. இதுல கவுஜ எங்க எழுதறது. எல்லாம் நிம்மதியா மீன் புடிக்கறவங்களுக்குதான். நமக்கு தூண்டில் சிக்கு எடுக்கறதுக்கே நேரம் பத்தலை.தூண்டில் எடுத்துக்கிட்டு எங்க உக்கார்ரது?

  ReplyDelete
 4. நாகு, முரளி,

  வாசித்துப் பாராட்டியமைக்கு நன்றி. எப்படியும் ஒரு மீனாவது புடிக்கனும்னு ரொம்ப தேவுடு காத்தது ஒருத்தர். அவர் சத்தமே காணோம். பதிவ இன்னும் படிக்கலைனு நெனைக்கிறேன். படிச்சிட்டு ஜெ ஜெனு பதில் போடறாரானு பார்ப்போம் ;-)

  //நமக்கு தூண்டில் சிக்கு எடுக்கறதுக்கே நேரம் பத்தலை//

  ஹரிக்கு ஒரு 'ஓ'. இந்த முறை 13.5 அங்குல மீனைப் பிடித்திருக்கிறான். இது முதல் முறையில்லை. எத்தனாவது தடவையோ இது. மீன் பிடிக்க நாகுவுக்கு பையன் இருக்கும்போது, ஆர அமர ஆணி புடுங்க, மன்னிக்கவும், சிக்கு எடுக்க வேண்டியது தான் ;-)

  ReplyDelete
 5. Mapple Chance e illa....enna da indha kalakku kalakkire???

  onnum sepparthukku lethande..!!!

  ReplyDelete
 6. Mapple ennda sema kalakku kalakkire...Summa nammala jump panniye pidikkalame why Thoondil and all??

  but enakku ennavo kalvarayan hills than niyabagaththirkku varrathu ;)

  still its beautiful kavithai!!!

  ReplyDelete
 7. வந்துட்டென்யா.. எனக்கு ஒன்னும் கிடைக்காம பண்ணினது நமதருமை தல. சிக்கு எடுக்க வச்சிட்டு போயிட்டார். சரி தெவுடு காத்ததுக்காக "புடிச்ச/கெடச்ச" ரெண்டு மீனையும் எனக்கு குடுத்ததுக்கு உங்களுக்கு நன்றி! கவிதை அருமை.. பனோரமா படம் எப்படி இருந்தது..

  ReplyDelete
 8. அய்யா மகாஜனங்களே நீங்க பேசிக்கரதுல இருந்து நிஜமாவே மீன் பிடிக்க போயிட்டு வந்த மாதிரி பில்டப் கொடுக்கரீங்க, மெய்யாலுமே மீன்ன்ன்ன்ன்ன் பிடிக்கத்தான் போனீங்களா அல்லாங்காட்டி, பட்வீசர், நம்மூர் பருந்து மார்க், நெப்போலியன் எல்லாம் எப்படி இருக்காங்கன்னு விசாரிக்கப்போனீங்களா?

  அன்புடன்,

  முரளி

  ReplyDelete
 9. முரளி,

  உங்களுக்கு தனியா மின்னஞ்சல்ல படம் அனுப்பினேனே பாக்கலயா?

  மெய்யாலுமே மீன் புடிக்கப் போனோம். மீனுக்குதான் எங்கள புடிக்காமப் போயிட்டுது. நீங்க சொன்ன இவங்களையாவது கொஞ்சம் கண்டுகினு இருந்திருக்கலாம். இன்னா பண்றது. ஏற்கனவே அங்கே ரோடு வளஞ்சு நெளிஞ்சு ஓடுது. இவங்களையும் ஏத்திகினா அவ்ளதான் - ரோடு நேரா தெரியும்!

  ReplyDelete
 10. வா மாப்ள சுரேஷு, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  மாப்ள, அப்படியே கல்வராயன் மலை தான் நாங்க போன இடம். அதை நினைவு படுத்தி என்னை time machine-ல ஒரு பதினஞ்சி வருசம் பின்நோக்கி இழுத்துட்டுப் போய்ட ... அட போடா ... உங்க அப்பாவோட advice "பசங்களா ஜாக்கிரதயா போய்ட்டு வாங்கப்பா" ... அப்புறம்,


  ஓடையில நீரோட
  வாடையில நாமாட
  உள்ளம் அலைபாய
  துள்ளி நடைபோட


  மலை எல்லாம் சுத்தி, கால் வலிக்க கீழ இறங்கி, அப்புறம் கோவிலுக்கு (பெயர் நினைவில் இல்லை) போய், நவக்கிரகங்கள சுத்தி முடிச்சு, கால் வலி எல்லாம் பறந்து போய் ... இன்னும் பசுமையான நினைவுகளே.

  அடிக்கடி இங்க வந்து கண்டுக்க ராசா :)

  ReplyDelete
 11. ஜெய்,

  //தெவுடு காத்ததுக்காக "புடிச்ச/கெடச்ச" ரெண்டு மீனையும் எனக்கு குடுத்ததுக்கு உங்களுக்கு நன்றி! //

  என்னங்க நன்றி எல்லாம் சொல்லிகிட்டு. "உங்களுக்கு கிடைக்கனும் இருந்திருக்கு", அப்படினு சொல்லுவோம்னு பாக்காதீங்க !

  உங்க ரூம்மேட் புகழ்ந்து தள்ளனுமே உங்கள. அதான் எங்களோட நோக்கம் ;-)

  சரி மீன் வருவலா, குழம்பா. எதுவானாலும் எப்படி இருந்தது ருசியில ?

  //கவிதை அருமை.. //

  நன்றி ஜெய்.

  //பனோரமா படம் எப்படி இருந்தது..//

  தல ஒரு மின்னஞ்சல் பண்ணியிருந்தாரு, அதில பனோரமா படம் இல்லியே !!!!

  ReplyDelete
 12. முரளி,

  //அல்லாங்காட்டி, பட்வீசர், நம்மூர் பருந்து மார்க், நெப்போலியன//

  இதெல்லாம் என்னாது ? கேள்விப் பட்டதே இல்லியே !!!

  ReplyDelete
 13. நாகு,

  //இவங்களையாவது கொஞ்சம் கண்டுகினு இருந்திருக்கலாம். இன்னா பண்றது. //

  நம்ம ப்ளான்ல இதெல்லாம் சொல்லவே இல்ல !!! நான் உங்களுக்கும், இவங்களுக்கும் ரொம்ப தூரம்னு நெனைச்சேன்.

  //ஏற்கனவே அங்கே ரோடு வளஞ்சு நெளிஞ்சு ஓடுது. இவங்களையும் ஏத்திகினா அவ்ளதான் - ரோடு நேரா தெரியும்!//

  ஓ, அதானா ரோடு வளஞ்சி நெளிஞ்சி இருந்துச்சு. முரளி யோசனை நல்லா இருக்கே. அடுத்த trip அவரயும் include பண்ணுங்க ;-)

  ReplyDelete
 14. //மாப்ள, அப்படியே கல்வராயன் மலை தான் நாங்க போன இடம்.//

  ரெண்டு மாப்ளயும் ஒரே சென்ட்டி போட்றீங்களே. கல்வராயன் மலைல ஏது இவ்ள பசுமை? அங்கே ஒரு கல்லுதானே இருக்கு. கழுத கட்டிப்பாறை பாத்திருக்கீங்களா ரெண்டு பேரும்?

  //நான் உங்களுக்கும், இவங்களுக்கும் ரொம்ப தூரம்னு நெனைச்சேன்.//

  இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருக்கு.

  ReplyDelete
 15. நாகு,

  ஒரு பேச்சுக்கு நண்பருக்கு கல்வராயன் மலையைப் போல மான்டெபெலோ இருந்தது சொல்லி, நினைவுகள் தான் பசுமை என்றேன். உடனே லிங்க் எல்லாம் அனுப்பி மானத்த வாங்கறீங்களே ;-)

  //கழுத கட்டிப்பாறை பாத்திருக்கீங்களா ரெண்டு பேரும்?//

  இன்னும் இருக்கா ? நாங்களெல்லாம் இங்க வந்திட்டோமே ;-)

  //இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருக்கு. //

  கேக்கவே எவ்வளவு இனிமையா இருக்கு. அடாஅடா.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!