நமக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கொடுக்கலாமென்றிருந்தார்கள். நான் பெருந்தன்மையாக அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிக் கொண்டால்தான் ஆயிற்று என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்புத்தொல்லை தாங்காமல் நான் வாங்கிக் கொண்ட பட்டம்தான் - ஆயிரம் புரதம் மடித்த் அபூர்வ சிகாமணி!
என்னய்யா மடிக்கிற என்கிறீர்களா? நீங்களும் மடிக்கலாம் இங்கே சென்று... நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள். உங்களையும் மடித்து விடுவார்கள். உங்கள் வீட்டில் கணினி சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால், அதையும் புரதம் மடிக்க வைக்கலாம். இதனால் பல வியாதிகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியம்.
அதென்னய்யா புரதம் மடிப்பது என்று கேட்பவர்கள் http://folding.stanford.edu தளத்தில் சென்று படித்து தெரிந்து கொள்ளலாம். வர வர நான் ஒன்று சொன்னால், மக்கள் வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். அதனால் நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை :-)
இப்படிக்கு.
திரு. ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி