Sunday, June 17, 2007

சிவாஜி எனும் அக்கப்போர்

"அமெரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பும் இளைஞர் (!) வில்லனை சமாளித்து, லஞ்சம் கொடுத்து ஊருக்கு நல்லது செய்கிறார் !"

இந்த ஒரு வரி (பழைய) கதைக்கு,


படமாக்க செய்த செலவு 80 கோடிக்கும் மேல்.

பில்ட்அப்-களுக்கு பஞ்சமே இல்லை.

நின்றால் ஒரு செய்தி, நடந்தால் ஒரு செய்தி.

சென்னையில் பால் குடம், பீர் குடம் அபிஷேகம் (எங்கே போய் முடியுமோ ?!)

10 ரூபா டிக்கட் ப்ளாகில் (நம்ம blog இல்லிங்கோ !) 500 ரூபாய்க்கு சென்னையில் விற்றிருக்கிறார்கள்.

திருச்சியில் 500 ரூபா நோட்டில் காந்தி இருக்குமிடத்தில் இவர்.

முன்னாள், இன்னாள் முதல் அமைச்சர்களுக்கு பிரத்தியேக காட்சி (அதிக கமிட்மென்ட் இல்லாத நமக்கே ஆயிரம் வேலை இருக்கும்போது, இவர்களால் எப்படி இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது என்று நினைக்கிறபோது வியப்பாகத் தான் இருக்கிறது !)

இதெல்லாம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், இணையச் செய்திகளிலும் வெளியானவை.


வலைப் பதிவர்கள் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல,

முதல் விமர்சனம் போட்டாச்சில்ல என்கிறார் ஒருவர்.

ஒருவர் சொல்கிறார் பாபா படம் போல் ஆகவேண்டும் என்று.

இன்னொருவர் சொல்கிறார் 100 நாள் என்ன 1000 நாள் ஓடும் என்று.

படத்தை பார்ப்பதைப் புறக்கணியுங்கள் என்கிறார் கோபத்துடன் ஒருவர்.

logic விசயத்தில் நம்ம ஊர் என்றில்லை வெளிநாடுகளில் அடிக்காத கூத்தா என்கிறார் இன்னொருவர்.

அவர் கர்நாடகத்துக்காரர், தமிழனுக்கு உதவி செய்வதில்லை என்கிறார் மற்றவர்.

கர்நாடகம், காவிரி, தமிழன், ஒரு கோடி, இப்படி பல விசயங்களையும் அலசி அதிரவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


சரி, விசயத்துக்கு வருவோம்.

பால் குடம் எடுப்பவருக்கும், பீர் பாட்டில் உடைப்பவருக்கும் நோக்கங்கள் இருக்கலாம். அவர்களைப் பொருத்தவரை என்றாவது ஒருநாள் 'தலைவர்' அரசியலுக்கு வருவார். நாமலும் நாலு காசு பார்க்கலாம் என்று.

படித்த, பண்புள்ள, பல நாடுகளில் வாழும் நாமும் 'சிவாஜி' பில்ட்அப்புக்கு சத்தமில்லாமல் உதவுகிறோம். ஒரு படம் நல்லா இருந்தா பாருங்கள். தாராளமா விமர்சனம் செய்யுங்கள். ஆனால் இன்றைக்கு தமிழ்மணத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நாம் காண்பது 'சிவாஜி' பற்றிய செய்தியே. இது சற்று வேதனை தரும் விசயம்.

நாம் பார்க்க, படிக்க, அனுபவிக்க, பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது, ஒரு பொழுதுபோக்குப் படத்திற்கு இத்தனை நேரம் செலவழிப்பது நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்தக் கால சூழலுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமான ஒன்று என்று மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தப் பொழுதுபோக்கு கொஞ்சம் ஓவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

உங்களுடைய பதிவுகள் வெறும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும், site traffic-க்கும் ஆக இருக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை நீங்கள் நிராகரிக்கலாம். உங்களுக்கும் பீர் பாட்டில் உடைப்போருக்கும் வித்தியாசமில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்.

இந்தா அந்தா என்று படமும் ரிலீஸாகிவிட்டது. இத்துடனாவது 'சிவாஜி' எனும் அக்கப்போர் ஓயவேண்டும் என்றும் மனம் குமுறும் வாலிபர் (!)

9 comments:

 1. well you are doing the samthing buddy...

  ReplyDelete
 2. avangalai niruththa sollu..naangalum niruththurom.....aaaaaaaa

  ReplyDelete
 3. I fully agree with you.

  ReplyDelete
 4. அடுத்ததா பீமா அடுத்த மாசம் ரிலீஸ் அகுதுங்க, அதை ஆரம்பிக்கலாமா? இல்லே தசாஅதவாரம் ஆரம்பிக்கலாமா?

  ReplyDelete
 5. என்ன தான் இருந்தாலும் இந்த பட்த்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் நம்ப ஒவர்தான்

  ReplyDelete
 6. சதங்கா.

  நல்ல கருத்து. நீங்களும் படத்தை பார்த்தீர்கள் என்று நினைக்கிறேன் ($12? இல்ல 15?). வியாபாரம் என்று வந்த பிறகு எந்த நாடாக இருந்தாலும் இந்த விசயத்தில் (விளம்பரம்) ஒரே பாதையில் தான் செல்கின்றன. இங்கும் படத்தை மில்லியன் கணக்கில் கொட்டி படம் எடுத்த பின் மில்லியன் கணக்கில் விளம்பரம் செய்வதும், அது தவிர அந்த ஹீரோ/கேரக்டர் பொம்மை, சட்டை, தொப்பி என பல வகையும் ரிலீஸ் ஆவதும், டி.வி. மற்றும் காலை/மாலை/இரவு நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்தவர்களிடம் பேட்டி என அந்த வாரம் முழுதும் திருவிழா தான். ஆனால், ஒரே வித்தியாசம், அடுத்த வாரம் அதை மறந்துவிட்டு மற்றோரு படத்திற்கு இந்த சடங்கு தொடரும். நம்மூரில் இன்னமும் சந்திரமுகி'யை (சிவாஜியின்) சாந்தி தியேட்டரில் வருடக்கணக்காக ஓட்டிக்கொண்டுள்ளனர். சராசரி ரசிகன் இந்த சினிமா பரபரப்பை தான் அதிகம் விரும்பி படிக்கிறான். பத்திரிக்கைகளும் இதில் லாபம் பார்க்கின்றன. படத்தில் எதாவது ஒரு இடத்தில் வசனம் நம் அரசியல்வாதிகளை உறுத்தினால், மரம் வெட்டிகள் முதல் பஸ் எரிக்க காத்திருப்பவன் வரை வேலைக்கு தயாராவார்கள். அதுவும் படத்திற்கு விளம்பரமே! நல்ல வேளை பன்ச் டயலாக விவேக்கை விட்டு சொல்ல வெச்சிட்டாங்க. அடுத்த படம் யாருக்கு பண்ண போறாருன்னு ஜோசியம் இப்பவெ ஆரம்பிச்சாச்சு!

  (யாராவது வர்ஜீனியாவில் விவேக் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளனரா?)

  ReplyDelete
 7. அனானி அண்ணே #1 : நீங்க சொன்னது போல நானும் விளம்பரப் படுத்துவதாக இருந்தால் எனது பதிவு(கள்) எப்போதோ வந்திருக்கும். ;-)

  எண்ணியதைப் பதிவோம், படிப்பவர் படிக்கட்டும், ஓரிருவராவது இதைப் புரிந்து கொண்டால் அதுவே பலரையும் சிந்திக்க வைக்கும் என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு இது.

  அனானி அண்ணே #2 : அவங்கள நிறுத்தச் சொல்லு, இவங்கள நிறுத்தச் சொல்லு என்பதை தவிர்த்து நாம நிறுத்துவோம் என்கிற நிலை வரவேண்டும். இல்லை என்றால் யாராவது 'வலைப் பதிவர் விழிப்புணர்வு இயக்கம்'னு ஆரம்பிச்சிடப் போறாங்க ! நமக்கே counseling தேவை என்றால் மண்சோறு உண்பவருக்கு ?

  எல்லாம் திரு. ஜெயகாந்தன் (இவரும் எழுத்தாளர் தான் ஆனால் எங்க சங்கத்துல) சொல்வது போல business. இந்த பால் குடம், பீர் பாட்டில், மண்சோறு stunt எல்லாம் நடிகரோ, தயாரிப்பாளரோ ஏற்பாடு பண்ணித் தான் நடக்க முடியும். தனி மனிதனால் கண்டிப்பாகச் செய்ய முடியாது.

  இளா அவர்களே, உங்க சங்கத்துச் செய்தி தினமணியில வந்திருக்குனு பார்த்து, பொறாமையா இருக்குனு பின்னூட்டமிட்டேன். அத வாபஸ் வாங்க வைக்கிற மாதிரி இருக்கு உங்க இந்த பின்னூட்டம். கீழே உள்ள பத்தி உங்களுக்கான என் பதில்.

  கையைக் கட்டிக் கொண்டே 60 கோடி லாபம் பார்க்கிறார் தயாரிப்பாளர். 500 நாட்கள் கழித்து அல்ல. ஒரே நாள் ! அவர் 80 கோடி போட்டிருக்கிறார் என்றால் மேலே கண்ட அனைத்து stunt களும் அவர் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும். அதற்கு ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள். நாம ஏன் என்பதே என் கேள்வி !

  நாம பதிய எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கிறது. காந்தியடிகளின் பிறந்த தினத்தை உலக அஹிம்சை தினமாகக் கொண்டாட ஐ.நா சபை முடிவு குறித்து சிலரின் பதிவுகள் இருக்கிறது. எத்தனை பேருக்குத் தெரியும் ? இதல்லவா தமிழ்மணத்தின் முகப்பிலே வரவேண்டும்.

  மற்ற அனானிக்கள் (பின்னூட்டங்களின்) ஆதரவு குறித்து மகிழ்ச்சி. இந்த நிலை உயர வேண்டும்.

  ReplyDelete
 8. இங்கே உங்களின் கருத்தை நினைத்து சிரிப்பதா அல்லது உங்களின் அறியாமையை நினைத்து வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

  ரஜனி எங்களிற்கு ஈழத்தமிழர்க்கு உதவ வேண்டும் என்று யாரும் அழவேண்டாம். அது முட்டாள் தனம் என்றே நான் கூறுவேன். அப்படி இருக்கும் போழுது ரஜனியின் திரைப்படங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதற்கு பல காரணங்களை முன்வைக்கலாம்.

  தமிழினத்திற்கு ஒரு கேடுதல் ஏற்படும் போது நான் ஒரு தனிமனிதனாக அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தால் அது எடுபடுவது கடினம். அதையே நான் ஒரு (ரஜனி போல்) பெரிய நிலையில் இருந்து செய்தேன் என்றால் அதற்கு 1000மடங்கு அதிகமான பலன் கிடைக்கும். இதை தான் சில ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். தனிப்பட்டமுறையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கூறியது போல் ரஜனி ஈழத்தமிழர்களிற்கு பணம் கொடுக்கவேண்டும் என்பது முட்டாள்தனம். அதை எந்த ஈழத்தமிழனும் முன்வைக்கவில்லை. அது வெறுமனே உங்கள் கருத்து.
  பின்னர் எதற்காக இந்த ரஜனி எதிர்ப்பு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சில காரணங்களை நான் உங்களிற்கு அறியத்தருகின்றேன்.

  1. ரஜனி எமக்காக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எதற்காக எமது விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக கருத்து கூறவேண்டும். ஜெயலலிதாவின் ஒரு கூட்டத்தில் பேசுகையில் ரஜனி கூறுகிறார் „அம்மா உங்களிற்கு விடுதலைப்புலிகளால் மட்டும் ஆபத்தில்லை இங்கும் (தமிழகத்திலும்) சிலரால் ஆபத்து உள்ளது“ இது அவருக்கு தேவையா? கருத்து சுதந்திரம் என்று வராதீர்கள்! கருத்து சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தனது கருத்தை மற்றவர்களிற்கு பாதிக்காத வகையில் வெளியிடுவதே கருத்து சுதந்திரம்!

  2. தற்பொழுது மலேசியாவில் தமிழர்களின் பிரச்சனை கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு ஒரு கலைநிகழ்ச்சியில் ரஜனி கூறுகிறார் „எனக்கு தமிழகத்தமிழர், மலேசியத்தமிழர்கள் அனைவரும் ஒன்று தான் என்று. இதை கேட்டால் சிரிப்பாக இல்லையா? மலேசியாவில் தமிழர்களின் பிரச்சனையில் இவர் என்ன செய்தார்? ஒரு வார்த்தையும் செலவு செய்யாமல் இருந்த இவர் இப்படி சொல்வது சரியா? அப்படி என்றால் நாளை தமிழ்நாட்டுத்தமிழர்களிற்கும் இப்படி ஒரு நிலை வரும் போது இவர் இப்படி தான் மௌனம் சாதிப்பாரா??

  3. „என் உடல் பொருள், ஆவியை தமிழுக்கு தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா“!! இது அவரின் படத்தில் வந்த பாடல் வசனம். பல மேடைகளில் என் உயிரினும் மேலான தமிழ் ரசிகர்களே என்று முழக்கமிட்டிருக்கிறார். ஆனால் தமிழர்களின் உயிரான தமிழ் மொழியை காப்பதற்கு இவர் தனது படத்திற்கு தமிழில் பெயர் வைக்க மறுத்தது ஏன்? சிவாஜி தமிழ் பெயரா இல்லையா என்பதை நான் சொல்ல வில்லை. அது என்ன தே போஸ்? இது தான் இவரை வளர்த்த தமிழ்நாட்டிற்கும் அதன் அரசாங்கத்திற்கும் இவர் செய்யும் நன்றிக்கடனா?

  4. „அப்போ நான் பச்சைத்தமிழன்;, இப்போ நான் வெள்ளைத்தமிழன்“ இந்த பாடல் வரிகளை ஏன் இவர்கள் கன்னாடகத்தில் திரையிடப்படும்போது எடுத்துவிட்டார்கள்??

  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!!

  இது பற்றி என்னுடன் விவாதிக்க விரும்புபவர்கள் என்னுடன் தமிழில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!