எந்த ஊனில் எந்தப் புற்றோ?
இந்தப் புற்றுநோயின் கொடுமை பெரிதா?
இத்தீங்கு வந்தவரின் துயரம் பெரிதா?
இந்நோயை வெல்ல முயன்ற பெவினின் உறுதி பெரிதா?
அவனுக்கு துணை நின்ற நண்பர்களின் நட்பு பெரிதா?
பலர் கண்களைத் திறந்த வினய்யின், சமீரின் சாதனை பெரிதா?
எட்டு வயது ஆதித்யாவை இழந்த பெற்றோரின் சோகம் பெரிதா?
எட்டு மாதம்கூட நிரம்பாமல் சென்ற பிரனவின் இழப்பு பெரிதா?
சிகிச்சை பெற்றுவரும் தாயைப் பிரிந்த இரு சிறார்களின் தவிப்பு பெரிதா?
மருத்துவமனையிலேயே குடியிருக்கும் இவர்தம் குடும்பத்தின் பொறுமை பெரிதா?
தந்தை தன்கூட ஏன் விளையாடவில்லை என்ற இரண்டு வயதின் குழப்பம் பெரிதா?
உடல்வலியை மீறி குழந்தையுடன் விளையாடும் தந்தையின் மன உறுதி பெரிதா?
குழந்தைகளுடனும் மருத்துவமனைக்கும் அல்லாடும் மனைவியின் மனதிடம் பெரிதா?
மகன் படும் இன்னலை பார்க்கும் வயதான தந்தையின் சகிப்பு பெரிதா?
இவர்க்கு உதவ முடியாமல் தவிக்கும் உற்றாரின் இயலாமை பெரிதா?
இந்நோயின் தீவிரம் உணரா மக்களின் உதாசீனம் பெரிதா?
இவர்க்கு பொருத்தம் தேட உழைக்கும் நண்பர் உழைப்பு பெரிதா?
பொருத்தம் கிடைத்தவுடன் அனைவரும் அடையும் மகிழ்ச்சி பெரிதா?
பொருள் வழங்கும் அறிமுகமற்ற மக்கள் மனித நேயம் பெரிதா?
இந்நோயை வெல்ல முயலும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் முயற்சி பெரிதா?
எண்ணற்ற மருத்துவர்களின் ஆராய்ச்சி பெரிதா?
இவ்வனைத்தையும்விட பெரிதாக வேண்டும்
எதுவுமே ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லைதான். நல்லா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteநன்றி கவிநயா.
ReplyDeleteஇதுல எது பெரியது என்று சந்தேகமே வேண்டாம். கவிநயாவின் பின்னூட்டத்திற்கு ஒரு ரிப்பீட்.
ReplyDelete(அவர் கேட்டுக்கொண்டபடி பெயர் நீக்கப்பட்ட ஒரு பின்னூட்டம்)
ReplyDeleteநாகு
நீங்கள் சொல்லியிருக்கும் போராளிகள் சிலர் பற்றி sepiamutiny.com மற்றும் jocalling.blogspot.com ல் படித்ததுண்டு.
சமீர் அண்மையில் தனது உயிர் போராட்டத்தில் தோல்வியடைந்தது வருந்தத்தக்கது. ஆயினும் பலர் வெற்றியோ அல்லது
தற்காலிக வெற்றியோ பெற்றுள்ளனர். உலகில் பலருக்கும் தெரிந்தவர்களில் லேன்ஸ் ஆர்ம்ஸ்றாங் ஐ சொல்லலாம். நானும்
கூட லேன்ஸ் போன்றுதான். 15 1/2 வருடங்களாக < அதற்கு முன் 3-4 வருடங்கள் இருந்த லிம்போமா > தற்போது இல்லாமல்
இருக்கிற ஆள். ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டுள்ளன. முன்னேற்றங்களும் வந்து கொண்டுள்ளன. ஆயினும் மனிதர்களாகிய
நாம்தான் முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும். ஏதெனும் உடல்நல மாற்றங்கள் ஏற்பட்டால் அசட்டையாக இல்லாமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். மற்றும், அலோபதி எனப்படும் மேற்கத்திய சிகிட்சையில் மட்டும் நம்பியிராமல் மாற்று சிகிட்சைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். போளூர், தமிழ்நாடு அருகே எரும்பூர் என்ற சிற்றூரில் 'பலராமைய்யா சித்த மருத்துவமனையில்'
கொடுத்த மருந்துகள்தான் எனக்கு மறுவாழ்வு கொடுத்ததாக திடமாக நம்புகிறேன்.
உங்களுடைய விழிப்புணர்ச்சி பதிவுகளுக்கு நன்றிகள்.
ஒரு பதிவர்
நன்றி பதிவரே,
ReplyDeleteஉங்களுக்கு லிம்போமா நீங்கியதில் மிக்க மகிழ்ச்சி. சமீர் மரணமும் வினய்க்கு நோய் திரும்ப வந்திருப்பதும் தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.
நீங்கள் சொல்லியபடி அலோபதியில் அனைத்திற்கும் பதிலில்லை. மாற்று மருத்துவமுறைகளையும் பார்க்க வேண்டும். அந்த சித்த மருத்துவமனை குறித்து மேலும் சொல்லுங்கள். யாருக்காவது உதவலாம். இந்த உயிர்க்கொல்லி நோய் இருப்பவர்களுக்கு மருத்துவமுறையை மாற்றுவதும் கவலையளிப்பதுதான்.
இந்தப் பதிவைப் படித்த உடன் என் மனதில் தோன்றியது, ஏன்? என்ற கேள்விதான். அதற்கு எங்கும் பதில் இல்லை என்பதால், அதை இங்கு கேட்காமல் இருந்து விடுகிறேன்.
ReplyDeleteபதிவு மிக மிக கனமான ஒன்று. படிக்கும் எனக்கே இவ்வளவு மன இறுக்கம் இருக்குமானால், எழுதிய உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. ராஜேஷ் போன்ற எண்ணற்ற நண்பர்கள் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திப்போம்.
பித்தன்.