Showing posts with label காலண்டர். Show all posts
Showing posts with label காலண்டர். Show all posts

Saturday, October 03, 2026

கொலு காலண்டர்

 இந்த விஷயம் கேள்விப்பட்டீங்களா?

என்ன விஷயம்னு சொன்னாதானே?


சொல்றதுக்கு முன்னாடி அவசரப்பட்டா எப்படி? பொறுமையே இல்ல. போன வருஷம் கொலு வைக்கறவங்க எல்லாம் இந்த இந்த நாள் வரனும்னு அழைப்பு வச்சாங்கள்ல - அதுக்கு ஒரே கம்ப்ளைண்ட்டு. ஒரே தெருவுல இருக்கற மூணு நாலு வீடுங்க வேற வேற நாள்ல கூப்பிட்டா வசதியாவே இல்லை. அவங்க எல்லாம் ஒரே நாள்ல கூப்பிடக்கூடாதான்னு மக்கள் ஒரே புலம்பல்ஸ். 


சரி, அதுக்கென்ன இப்போ?


சொல்றத கேளுங்க, குறுக்க குறுக்க பேசாம…


ஓ இன்னும் முடிக்கலயா. சரி சொல்லு.


இந்த வாட்டி என்ன ஆச்சு, எல்லாரும் அவங்க அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, இந்த ஏரியா இந்த நாள், அந்த தெரு அந்த நாள்னு முடிவு பண்ணிக்கிட்டாங்க. 


நல்லதுதானே. இதுல என்ன பிரச்சினை?


ட்வின் ஹிக்கரி  ட்யூஸ் டே, விந்தம் வெனஸ் டே, ஸேட்லர் சண் டே அப்படின்னு ஒரு மாதிரி பிரிச்சிக்கப் பாத்தாங்க. அதுல ஆரம்பிச்சது சண்டே… 


சண் டே ஸேட்லர்னு இப்பதானே சொன்ன?


ஆரம்பிச்சது சண்டைங்க. ஒரு ஃப்ளோல சண்டேன்னுட்டேன்.


இதுல ஃப்ளோ வேறயா. ஏன் சண்டை ஆரம்பிச்சது?


ஏன் வெலஸ்லி வெனஸ் டே வைக்கக்கூடாது? வீக் எண்ட்தான் எல்லாருக்கும் வசதியா இருக்கும். அதை ஸேட்லர் மக்கள் எடுத்துக்கிட்டா எப்படின்னு ட்வின் ஹிக்கரி மக்களுக்கு கோபம். எங்களுக்கு ரைமிங்கா எல்லாம் வேணாம், இங்கதான் நிறைய கொலு இருக்கு, எங்களுக்கு சண் டேதான் வேணும்னு. 


அதனால என்ன. ஸேட்லரும், ட்வின் ஹிக்கரியும் பக்கம் பக்கம்தானே, ஒரே நாள்ல வச்சா போகுது.


நீங்க முன்ன பின்ன கொலு பாக்க வந்தாதானே உங்களுக்கு தெரியும். இத்தனைக்கும் என்னை பாதி பேரு கூப்பிடறதில்ல. அப்படி இருக்கற எனக்கே ட்வின் ஹிக்கரிக்கு ஒரு நாள் போதாது. மிக்சர் மீனா நிலைமைய யோசிச்சி பாருங்க. இதுல ஸேட்லரும் சேர்த்தா…


ஸேட்லருக்கு சாடர் டே, ட்வின் ஹிக்கரிக்கு சண் டேன்னு சொல்லிட்டா?


ஹோல்மன் காரிடார் சண்டைக்கு வராங்க. எங்களுக்கும் சாடர் டேவோ, சண் டேவோதான் வேணும்கறாங்க. 


ஹோல்மன்லயா?


ஆமாம். ஹோல்மன் டிரைவ், ஹோல்மன் ரிட்ஜ்னு அந்த காரிடார்ல நிறைய வீட்ல கொலு வைக்கறாங்க. இந்தப் பக்கம் ஒய் எம் சி ஏ கிட்ட ஆரம்பிச்சு அந்தப் பக்கம் கடைசிவரை நிறைய பேரு…


அப்படியா? 


நீங்க ஹோல்மன் பக்கம் போய் பாருங்க, தெரியும். இதெல்லாம் பத்தாதுன்னா, அந்தப் பக்கம் டோமினியன் ஹில்ஸ், கேம்ப்ரிட்ஜ், க்ரே ஓக்ஸ், கேடன்(Gayton) ரோடு மக்கள் வேலைநாள்ல வெச்சா எங்களுக்கு வசதிப்பட்டு வராதுன்றாங்க. 


அப்பறம் சௌத்சைட் மக்களும் மெக்கானிக்ஸ்வில் மக்களும் வெஸ்ட் என்ட்தான் ஒசத்தியா. நீங்க எல்லாம் வீக் எண்ட்ல வச்சாலே இந்தப் பக்கம் வரமாட்டீங்க. இந்த அழகுல வீக் டேஸ்ல வெச்சா யாரும் வரமாட்டீங்கன்னு ஆரம்பிச்சிட்டாங்க.


இதையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள கூச்லண்ட்(Goochland) பக்கம் இருந்து ஒரு சத்தம்.


கூச்லண்ட்ல யாரு? 


கூச்லண்ட்ல யாரா? அங்க நிறைய பேரு போயாச்சு.


சமாளிக்கறதுன்றியே. நாமதான் கொலுவெல்லாம் வைக்கறதில்லையே. இந்த பஞ்சாயத்துல எல்லாம் நீ எப்படி இருக்கற? 


நான் பொதுஜனம். இல்லாட்டி ஒபினியன் போல் எல்லாம் யாரு கிட்ட எடுப்பாங்க?


இதுல அது வேற வருதா!


பின்ன? அவங்க என்னைக்கு வரச்சொல்லனும்னு சொல்றதுல எனக்கும் ஒரு பங்கு இருக்குல்லயா? போகறது நாங்கதானே??


அது சரி. கொலுவுக்கெல்லாம் போயிட்டு ஒரே மாதிரி சுண்டலா கொண்டு வந்து என்னை தின்ன வைக்கறியே. இந்த பஞ்சாயத்துல ஒரே நாள்ல அழைக்கற வீடுங்களுக்கு வேற வேற சுண்டல் செய்ய சொல்லேன்.


அதுவும் ஒரு சைட்ல போயிட்டு இருக்கு. நான் அதுக்குள்ள போகல. ஏன்னா அது உங்க பிரச்சினை.


 ஒவ்வொரு வாட்டியும் எல்லா அழைப்பையும் காலண்டர்ல போட்டு, தினமும் எங்க ஆரம்பிச்சு எப்படி முடிக்கறதுன்னு டிரிப் ப்ளான் போட்டே மாளல. இந்த தடவை எல்லாத்தையும் சேட் ஜிபிடில போட்டு ஒரு நல்ல ட்ரிப் ப்ளான் கேக்கனும். கொலு முடியறதுக்குள்ள ப்ளான் சொல்லிடுமான்னு பார்ப்போம். நீங்கதான் இதுக்கு ஒரு ஆப் எழுதுங்களேன்.


சங்கரா!