Wednesday, September 03, 2008
கூகுள் குரோம்!
கூகுள் யாரும் எதிர்பார்க்காதபோது ஒரு உலாவியை வெளியிட்டு உள்ளது. கூகுள் குரோம்! ஏன் இன்னொரு உலாவி என்று சிலர் கேட்கலாம். அதற்கான காரணங்களை இங்கே விளக்குகிறார்கள் அவர்களே.
நான் அதை நிறுவிப் பார்த்ததில் தெரிந்தவை:
1. வலைப் பக்கங்கள் வேகமாக லோட் ஆகின்றன
2. முகவரிகள் அடிக்கும்போது - கூகுள் சஜஸ்ட் பாணியில் சாய்ஸ்கள் வருகின்றன.
3. எகலப்பை மூலமாக தமிழில் தட்டச்ச முடியவில்லை. இந்த பதிவை வெட்டி ஒட்டுகிறேன் :-( ஏதாவது வழி இருந்தால் சொல்லவும்.
4. ஒவ்வொரு tab-ம் தனித்தனி processகள். ஒரு tab தொங்கினால் உலாவியே தொங்காது.
குரோமின் மற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.
கூகுள் குரோமை சேர்த்து என் கணினியில் நான்கு உலாவிகள். ஐஈ, நெருப்பு நரி(எனக்குப் பிடித்தது), ஆபரா மற்றவை. என் சக ஊழியன் குரோம் தெரியுமா என்று கேட்டால் போகோ தான் உலகின் தலைசிறந்த உலாவி என்கிறான்! போச்சுடா. இன்னொன்னா?
2 comments:
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
நல்லதோர் வலைப்பதிவு விக்கிபீடியாவிலும் கட்டுரை சேர்த்துள்ளேன். நிச்சயமாக தமிழ் மூல உள்ளீட்டுப் பிரச்சினை சீர் செய்யப்படவேண்டும். நேரம் கிடைக்கும் போது பார்க்க http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
ReplyDeleteNHM Writer மூலம் தமிழில் குரோமில் எழுத முடிகிறது. வாழ்க நியு மீடியா!
ReplyDelete