இந்த வாரம் ஒரு இணைய வானொலி தளத்தை பற்றி நண்பர் ஒருவர் மிகவும் மேலாக சொன்னதால், வேலை பார்க்கும் நேரத்தில் நான் தினமும் (விருப்பமில்லாமல்) கேட்கும் சூரியன், ரேடியோ என்.ஆர்.ஐ. , ஆஹா எப்.எம் போன்றவற்றிலிருந்து மாபெரும் விடுதலை கிடைத்துவிட்டது!!.
கால நேரத்திற்கு ஏற்ற பாடல்கள், இடையில் நல்ல கருத்துகள் (விகடனில் வந்த மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ், இன்று ஒரு தகவல், சுகீசிவம், பட்டிமன்ற பேச்சு, மற்றும் பல), காமெடி (அ.போ.யா, சினிமா காமெடி..), இணைய துணுக்குகள், இன்னும் பல சிறப்பான விடயங்கள் இந்த இரு நாட்களில் நான் கேட்டதில் கவனித்தவை. சில பாடல்களின் முன்னே வரும் (பட) டயலாக், அசட்டு காம்பியர்களின் தேவையே இல்லாமல் செய்கிறது!
கடைசியாக, அலட்டல் இல்லாத, நல்ல தெளிவான தமிழ் பேசும் வானோலி.
இணைய முகவரி: கலசம் வானொலி (http://www.kalasam.com )
நேரடியாக Windows Media Player வழியாக கேட்க http://www.kalasam.com/live
அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteஜெயகாந்தன்,
ReplyDeleteஅப்ப ஆபீஸ்ல வேலை செய்யர சாக்குல பாட்டு கேட்டுட்டு இருக்கீங்களா? பேஷ் பேஷ், அப்படியே பக்கத்து சீட் காலியா இருந்தா சொல்லுங்க, me available for that......
பித்தன்..
நண்பர்களுக்கு
ReplyDeleteவளர்ந்துவரும் கணணி உலகில் RFID - Radio-frequency identification மிகவும் வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம் .அதனி பற்றி ஒரு நிகழ்ச்சி தயாரித்து உங்களுக்கும் அனுபிவைகிறான் . இது பிரயோசினமனதாக இருக்கும் என நம்புகிறேன் .
http://www.jiffry.com/rfid
அன்புடன்
ஜிப்ர்ரி
http://www.Jiffry.com
தகவலுக்கு நன்றி!
ReplyDeleteதகவலுக்கு நன்றி :)))
ReplyDeleteசென்சிபிள் ரேடியோ கேட்டு ரொம்ப நாள் ஆகிறது.