Monday, May 07, 2007

தடயம் - அத்தியாயம் - 4

தடயம் மர்மத்தொடரின் நான்காவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்:
http://kalaichcholai.blogspot.com/2007/05/4.html
- முரளி.

4 comments:

 1. முரளி,

  கதை விருவிருப்பாகச் செல்கிறது. தொடரைத் தொடரவும்.

  கீழே குறிப்பிடுவன எல்லாம் suggestions or my mistakes. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

  உங்கள் தடயத்து link-குக்ச் சென்றால், தற்போதைய அத்தியாயதைப் படிக்க முடிகிறது. புதிதாக வருபவர்களுக்கு எல்லா அத்தியாயங்களையும் படிக்க விரும்பினால், அதற்கான link-குகளை உங்கள் கலைச்சோலையில் அளித்தால் நன்றாக இருக்கும்.

  முதல் அத்தியாயத்தில், மாணிக்கம் என்பவர், இரண்டாவது அத்தியாயத்தில் பாண்டியானாகி விட்டாரே.

  சில இடங்களில் நாடக நெடி தெரிகிறது.

  அத்தியாயம் 3-ல்
  //உடனே உள்ளே அனுப்புங்க" கான்ஸ்டபிள் வேகமாக வாசல்புறம் நோக்கி ஓடுகிறார்.//

  என்னடா இவன் ! (அதான் நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களே) இப்ப தான் எல்லாத்தையும் படிக்கறானனு திட்டறது தெரியுது.

  நமக்கு RTS blog இப்ப ரெண்டு மாசம் தான் பரிச்சயம். 'தடயம்' - மர்ம தொடர் தலைப்புப் பார்த்திருக்கிறேன். நிறைய பேரு TV, சினிமா பத்தி பதிவு போடுற மாதிரி-னு நெனச்சி விட்டுட்டேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன், TV-ல சில வருடங்கள் முன்னால் 'தடயம்'-னு ஒரு serial வந்தது. தலைப்புக்கே வேட்டு வைக்கிறேன் என்று எண்ணாதீர்கள். கொஞ்சம் differentiate பண்ணியிருந்தால் என்போன்ற சிறியோரின் confusion தவிர்த்திருக்கும்.

  என்றும் அன்புடன்,
  சதங்கா

  ReplyDelete
 2. முரளி,

  வாழ்த்தாம வருத்துட்டானே-னு வருந்தாதீர்கள்.

  பின்னூட்டம் ரொம்ப strong-ஆ எழுதிட்டனோனு தோனுது. மன்னித்துக் கொள்ளுங்கள்.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 3. சதங்கா,

  கருத்துக்களுக்கு மிக்க நன்றி. 'சுகி சிவம்' ஒரு முறை சொன்னது, அவர் சொற்பொழிவில் யாராவது கேள்வி கேட்டால் அவர் ரொம்ப சந்தோஷப் படுவாராம், காரணம் கேள்வி கேட்ட ஒருவராவது தூங்காமல் இருக்கிறாரே என்று, அது sarcastical என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதுதான் நிஜமென்றும் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரையில் என் எழுத்தை விமர்சிக்கும் அனைவருடைய கருத்துக்களும் என்னை பட்டை தீட்ட பல வகையில் உதவுகின்றன. நேற்று இந்த அத்தியாயத்தை வெளியிடும் போது பழைய அத்தியாயங்களில் இருந்த பல எழுத்துப் பிழைகளை சரி செய்தேன். அதில் முக்கியமான ஒன்று ஒரு கதா பாத்திரத்தின் பெயர் நான்கு வரி தாண்டியவுடன் மாறியிருந்ததைக் கண்டு பிடித்தேன்.

  தடயம் பெயரைத் தெரிவு செய்தது சன் டிவியில் சமீபத்தில் வந்த தொடரை நினைவில் வைத்தேதான்.

  இந்தக் கதையை ஒரு சிறு கதையாக நமது தமிழ் சங்கத்தின் 2006 இலக்கியப் போட்டிக்காக எழுத ஆரம்பித்தேன், பிறகு சில காரணங்களுக்கா அதை அவர்களுக்கு அனுப்பாமல், என் வளைப்பதிவில் வெளியிட்டேன். 8 அத்தியாயங்கள் எழுதியாகிவிட்டது இன்னமும் எனக்கு அதில் திருப்தி இல்லாததால், அதை வெட்டி ஒட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிரது. அத்தியாயம் 4 -ல் வரும் பல நிகழ்ச்சிகள் முதலில் அத்தியாயம் 6-ல் தான் வந்தது. பல கசடுகளை வெட்டியதால் சற்று நீளம் குறைந்திருக்கிறது.

  //முதல் அத்தியாயத்தில், மாணிக்கம் என்பவர், இரண்டாவது அத்தியாயத்தில் பாண்டியானாகி விட்டாரே.//

  இன்றிரவு இதை மாற்றி விடுகிறேன்.

  //சில இடங்களில் நாடக நெடி தெரிகிறது.

  அத்தியாயம் 3-ல்
  உடனே உள்ளே அனுப்புங்க" கான்ஸ்டபிள் வேகமாக வாசல்புறம் நோக்கி ஓடுகிறார்.//

  இது என் எழுத்தின் குறைபாடு, மாற்ற முயற்சிக்கிறேன்.


  //உங்கள் தடயத்து link-குக்ச் சென்றால், தற்போதைய அத்தியாயதைப் படிக்க முடிகிறது. புதிதாக வருபவர்களுக்கு எல்லா அத்தியாயங்களையும் படிக்க விரும்பினால், அதற்கான link-குகளை உங்கள் கலைச்சோலையில் அளித்தால் நன்றாக இருக்கும்.//

  நாகு/ஜெயகாந்தன்: இதை சரி செய்ய தங்கள் தொழில்நுட்ப உதவி கிடைக்குமா?

  அன்புடன்,

  முரளி.

  ReplyDelete
 4. சதங்கா,

  தாங்கள் குறிப்பிட்ட குறைகளில் நாடக நெடியைத் தவிர மற்ற இரு குறைகளையும் சரி செய்து விட்டேன்.
  இதில் லிங்க் விஷயத்தில் நாகு உதவி செய்து என் மானத்தைக் காப்பாற்றி விட்டார்.

  நன்றி நாகு, இந்த உதவிக்காக உங்களின் அடுத்த பதிவில் குறை சொல்லாமல் பின்னூட்டமிடுகிறேன்.

  அன்புடன்,

  முரளி.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!