Thursday, May 10, 2007

வலைவலம்

முதலில் வலப்பக்கத்தில் இருக்கும் வலைக்குலையும் காலண்டரும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். லேபிள் கிளவ்ட் என்று ஒரு தளத்தில் பார்த்தது. இங்கு சேர்க்க நான் கொஞ்சம் ததிங்கினத்தோம் போட்டேன். கடைசியில் பொன்ஸுக்கு் அவுட்ஸோர்ஸ் செய்ய, அவர்கள் ஆணி பிடுங்கி வேலை செய்ய வைத்தார்கள். லேபிள் கிளவுட்டை நான் வகைக்குலை என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

இது கொஞ்சம் பழைய செய்திதான். இருந்தாலும் தமாஷ் - அதாவது உங்கள் தலையெழுத்து, என் கண்ணில் இன்றுதான் பட்டது. குஜராத்தில் பத்தொன்பது வயதான ஒரு பெண்ணும், பையனும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளப் பார்த்தார்கள். ஆனால் ஒரு பிரச்னை. குஜராத்தில் பையனுக்கு கல்யாணம் செய்ய இருவத்தோரு வயதாயிருக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்த செய்தியை ஒரு குரங்கு(மனம்) படித்துவிட்டு இப்படி கற்பனை செய்தது. குரங்கு(மனம்) நிறைய தமிழ் சினிமா பார்க்கிறது என நினைக்கிறேன். நம்ம ஊர் சத்தியாவிடம் சொல்லி நண்பருக்கு கொஞ்சம் ஆட்றா ராமா ஆட்டம் காண்பிக்கவேண்டும்.

அந்த சினிமா கதை இருக்கட்டும். இந்த செய்தியைப் பாருங்கள். பாலச்சந்தர் பிச்சை வாங்கவேண்டும். மாண்ட்ரியல் நகரைச் சேர்ந்த மெலனி போய்வின் என்பவர் தனது 7 வயது மகளுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார். டெய்லர் சின்ட்ரோம் என்ற வியாதி கொண்ட மகளுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை. அந்த குறையைத் தீர்க்க தாயார் மெலனியின் உத்தி என்ன தெரியுமா? தன் முட்டைகளை உறைநிலையில் வைத்து மகள் பெரியவளானவுடன் கர்ப்பம் தரிக்க பயன்படுத்துவாராம். ஆக ஒரே நேரத்தில் அவர் பாட்டியாகவும், தாயாராகவும் ஆவாராம். யாரோடு விந்தை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. பெண்ணிற்கு விந்துதானம் செய்பவர் தந்தையா, துணையா??? கேள்வியின் நாயகனைத்தான் கேட்க வேண்டும். குரங்க்கைக் கேட்டால் என்ன சொல்லும் என்று தெரியவில்லை.


ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் பெரியார் சிலைக்கு குண்டு வைக்கப் பார்த்த அம்புஜம் மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டீர்களா? இந்த கண்மணிப் பக்கத்தில் அதைப் பற்றி படிக்கலாம். இன்னோரு மாமியிடம் ஒரு திருடன் பட்ட அவதி இந்தக் கதையில்.

ஆப்பிள் கம்ப்யூட்டரின் ஸ்டீவ் ஜாப் பற்றி தெரியாதவர்கள் கிடையாது. அவரது 10 பாடங்கள் இந்த தளத்தில். இது அவரே சொன்னதா, இங்கே ஜல்லியடிக்கிறார்களா என்று தெரியவில்லை. கன்ஃபூசியஸ் சொன்ன ஒரு மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது.

கன்ஃபூசியஸ் சொன்னதாக சொல்லும் பல மேற்கோள்கள் உண்மை கிடையாது - கன்ஃபூசியஸ்!


பாடம் எல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைக்கு உதவும் இந்த சர்ச்சையைப் பார்ப்போம். தாளிப்பதற்கு எதைப் போடலாம் - எள்ளா, உளுந்தா? கடலை போடலாம் என்று குரல் கொடுப்பவர்கள் கடைசி பெஞ்சுக்கு போகவும். எள்ளா, உளுந்தா எந்த சமயத்தில் எதை பயன்படுத்தலாம் என்று கம்பராமாயணம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா இங்கே?

இந்த விஷயத்தை நமது உள்ளுர் கம்ப ராமாயண வல்லுனரைக் கேட்டிருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

5 comments:

  1. தலை,

    மாண்ட்ரியல் விஷயம் கொஞ்சம் உவ்வே ரகம், கம்ப ராமாயணம் சூப்பர் விளக்கம். மனம் ஒரு குரங்கு தூள்.

    - பித்தன்.

    ReplyDelete
  2. நாகு,

    வகைக்குலை - வாயில வராத மாதிரி ஒரு பெயர். இதை வேகமாக சொல்லிப் பார்தீர்களா?

    குஜராத் விவகாரம், சற்று வேடிக்கையாக இருந்தாலும், நமது காலாச்சாரம் எவ்வளவு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    அம்புஜம் மாமி கதையும் திருட்டு பற்றிய கதையும் நன்றாக இருந்தது. ரொம்ப வாய்விட்டு சிரிக்கும்படி இல்லையென்றாலும், அலுக்கவில்லை.

    கம்பராமாயண விளக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

    சதங்காவின் பதிவின் பின்னூட்டத்தில சொன்ன மாதிரி தாக்காம பின்னூட்டமிட்டுட்டேன். ஞாபகம் இருக்கட்டும்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  3. நாகு,

    //இது கொஞ்சம் பழைய செய்திதான்.//

    வலைக்கு வந்து சில மாதங்களே ஆன ... இதெப்படி இருக்கு ?

    வலைக்குலை or வகைக்குலை ? ததிகினத்தோம் இதுக்கும் சேர்த்தா ? ;-)

    உண்மையைக் கேட்டால், label cloud அவ்வளவு impressive ஆக இல்லை. இது முழுக்க என் கருத்து. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்றபடி புது முயற்சிக்குப் பாராட்டுக்கள். :-)

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  4. நாகு,

    வலைகுலையும் காலண்டரும் மிகவும் சவுகரியம். வலைக்குலை வாயில் வரவில்லை என்று முரளி வருத்தப்பட்டு இருக்கிறார். வாயில் வருகிற மாதிரி வேண்டுமென்று "வாந்தி" அல்லது "ஜொள்ளு" என்று தயவு செய்து மாற்றி விட வேண்டாம். "வலைச்சரம்" - இது எப்படி இருக்கு?

    குஜராத் விவகாரத்தை விட கேவலமான பல விவகாரங்கள் இந்த நாட்டிலேயே நடக்கின்றன.

    கம்பராமாயணம் "எள்(ல்), உளு(ழு)ந்து பற்றிய பதிவு அபாரம். பின்னூட்டங்கள் அதை விட அபாரம்.
    வலைவலம் நன்கு வலம் வருகிறது. தொடரவும்.

    ReplyDelete
  5. சதங்கா - சரியாகப் பிடித்தீர்கள். வகைக்குலை/வலைக்குலை :-) சீக்கிரம் வேறுபெயர் பார்க்கவேண்டும். நான் பனங்குலை, தென்னங்குலை மாதிரி இருக்கும் என்று பார்த்தேன். குலை நன்றாகத்தான் இருக்கிறது. வகைக்குதான் வேறு பார்க்க வேண்டும்.

    வலைக்கு வந்து சில ஆண்டுகளே... என்று சொல்லவேண்டும். அவ்வளவு பழசு அந்த மேட்டர்.

    முரளி - அம்புஜம் மாமி கதை சிரிப்பு வரலயா? நான் மாமி பெரியார் சிலையில் ஏறுவதையும், இறங்குவதையும் கற்பனை செய்து அந்த சிரி சிரித்தேன்....

    பித்தன், முரளி, சதங்கா, பரதேசி - பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!