Friday, May 18, 2007

Evergreen S.P.B - இளைய நிலா பொழிகிறதே

இந்த இனிய மாலைப் பொழுதில் உங்களுக்கு ஒரு இனிய கானம்.

எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு திரைப்படங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு இசை அமைப்பாளர்கள், எவ்வளவு பாடகர்கள். இன்றும் இப்பாடல் நமக்கு இனிக்கிறதென்றால், thats is S.P.B and Raja. என்ன ஒரு finish !!!

Please click the below link to enjoy the video. கடைசியில், கண்டிப்பா நீங்களும் S.P.B. கூட சேர்ந்து ஆடுவிங்க.

href="http://www.youtube.com/watch?v=W8l_ezoU8Lc&mode=related&search=

என்றும் அன்புடன்
சதங்கா

4 comments:

  1. எங்கேயோ கொண்டு போகும் பாடல் அது. இப்படி வைரமுத்துவை அநியாயமாக விட்டு விட்டீர்களே. அவருடைய முத்திரை பதித்த பாட்டல்லவா அது.

    அந்த பாட்டைக் கேட்டு உருகியபின் இதை படியுங்கள்: வைரமுத்துவும் object oriented programming-ம். கடைசியில் இளையநிலாவையும் கொஞ்சம் கிழித்திருக்கிறார் :-)

    ReplyDelete
  2. நாகு,

    எனக்கும் வைரமுத்து அவர்களைப் பற்றி அவ்வளவு impression இல்லை (எதனால் என்று தெரியவில்லை !). அதனால் உங்கள் சுட்டி எனக்கு மகிழ்ச்சியையே தந்தது எனலாம். But, என்னதான் கவிஞர் எழுதினாலும், திரைப்பாடல் வெற்றி பெருவது என்பது, இசை அமைப்பாளரிடமும், பாடகரின் குரலிலும் தான் உள்ளது என்பது இச் சிறியோனின் எண்ணம்.

    என்றும் அன்புடன்
    சதங்கா

    ReplyDelete
  3. //என்னதான் கவிஞர் எழுதினாலும், திரைப்பாடல் வெற்றி பெருவது என்பது, இசை அமைப்பாளரிடமும், பாடகரின் குரலிலும் தான் உள்ளது என்பது இச் சிறியோனின் எண்ணம்.//

    நீங்கள் சொல்வது இளையராஜா வந்தபிறகுதான் மிகவும் பொருந்தும். கவியரசர்(உண்மையான) காலத்தில் கவிஞரால்தான் பெரும்பாலும் பாடல் நிலைத்தது என்பது எனது எண்ணம். 80, 70களுக்கு முன்பு வந்த நம் நினைவில் நிலைத்த பாடல்களில் பெரும்பான்மையானவை கவிஞரால்தான். பல புகழ்பெற்ற பாடல்களில் இசை ஏனோ தானோ என்று போடப்பட்டிருக்கும். ஏதோ எங்களுர் அம்மன் கோவிலில் வாசிக்கும் ஆர்க்கெஸ்ட்ரா இசை அமைத்த மாதிரி.

    அது கிடக்கட்டும். எனக்கும் வைரமுத்துவைப் அவ்வளவாகப் பிடிக்காது. வார்த்தை ஜாலம் மட்டும் செய்பவர் என்பது எனது எண்ணம். எளிமையான வார்த்தைகளில் மனதைத் தொட்ட கவியரசரின் பட்டத்தை வேறு எவருக்கும் கொடுக்கக்கூடாது. அதாவது பரவாயில்லை. இப்போது ஒலி ஜாலம் செய்கிறார்கள். சிவாஜியின் சில பாடல்கள் என்ன பாஷை என்றே புரியவில்லை.

    ReplyDelete
  4. //நீங்கள் சொல்வது இளையராஜா வந்தபிறகுதான் மிகவும் பொருந்தும். கவியரசர்(உண்மையான) காலத்தில் கவிஞரால்தான் பெரும்பாலும் பாடல் நிலைத்தது என்பது எனது எண்ணம். 80, 70களுக்கு முன்பு வந்த நம் நினைவில் நிலைத்த பாடல்களில் பெரும்பான்மையானவை கவிஞரால்தான். பல புகழ்பெற்ற பாடல்களில் இசை ஏனோ தானோ என்று போடப்பட்டிருக்கும். ஏதோ எங்களுர் அம்மன் கோவிலில் வாசிக்கும் ஆர்க்கெஸ்ட்ரா இசை அமைத்த மாதிரி.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    அக்காலத்தில் பாடல்களால் கவிஞர்களை அறிய முடிந்தது உண்மை.

    //இப்போது ஒலி ஜாலம் செய்கிறார்கள். சிவாஜியின் சில பாடல்கள் என்ன பாஷை என்றே புரியவில்லை.
    //

    மிகவும் சரி. என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். எல்லம் பயங்கர hit-ஆம். !!!! அட ஈஸ்வரா .....

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!