Monday, May 14, 2007

நிதர்சனம் - சிறுகதை

எனது நிதர்சனம் சிறுகதையினை படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post.html
இது 11/25/2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.

அன்புடன்,

முரளி.

7 comments:

  1. முரளி, உங்க கதையுடைய நடை நல்லாருக்கு. கதையும். நிறைய எழுதுங்கள்.

    அன்புடன்,
    கவிநயா.

    ReplyDelete
  2. முரளி,

    உங்கள் கதை பிரமாதம். கடைசியில் பாட்ரிக் ஸ்வேஸி (Patrik Swayze) நடித்த எனக்குப்பிடித்த படமான கோஸ்ட் (Ghost) படத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்.
    தொடரவும்

    ReplyDelete
  3. முரளி,

    நானும் இதேபோல நினைத்ததுண்டு. கதை எழுதுவதற்கல்ல ! மனிதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பிறகு இவ்வுலகையே சுற்றி வருவானோ என்று. அந்த உணர்வை ஏற்படுத்தியது உங்கள் கதை.

    என்றும் அன்புடன்
    சதங்கா.

    ReplyDelete
  4. ப்ரூஸ் வில்லிஸை மனோஜ் ஷ்யாமளன் பூமியில் சுற்ற வைத்தாரே, அது மாதிரியா? :-)

    ReplyDelete
  5. கவிநயா : பாராட்டுக்களுக்கு நன்றி. சும்மா கொம்பு சீவி விட்டுட்டீங்க, நான் என்ன வெச்சு கிட்டா வஞ்சனை பன்றேன்.
    பரதேசி/சதங்கா பாராட்டுக்களுக்கு நன்றி. இது ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீடு வரும் வழியில் நினைவுக்கு வந்த ஒரு ஜென் கதையின் எனது வடிவம். இதே போல் பல வருடங்களுக்கு (சுமார் 20 - 22) முன்பு குமுதத்தில் ஒரு பக்கக் கதையாக வந்த ஒரு கருவும் இதைப் போலவே இருக்கும்.

    முதலில் ஜென் கதை:

    ஒரு ஜென் துறவியும் மற்றும் பலரும் ஒரு படகில் ஒரு பெரிய ஆற்றைக் கடந்து போய் கொண்டிருக்கின்றனர்.
    அப்போது ஒரு பிணம் மிதந்து வருகிறது, அனைவரும் ஆவலுடன் எட்டிப் பார்க்கின்றனர்.
    பிறகு திகிலுடன் அந்தத் துறவியைப் பார்க்கின்றனர்.

    அவர் புரியாமல் எட்டிப் பார்க்க அங்கு பிணமாக இருப்பது அவரே.

    உடன் அவர், ஓ அப்படியா சரி வருகிறேன் என்று சொல்லி விட்டு மறைந்து விடுகிறார்.

    குமுதத்தின் கதை:
    ஒரு கல்லூரி மாணவன் (பெயர் நினைவு இல்லை, ராமு என வைத்துக் கொள்வோம்) காலேஜ் போக மறுக்கிறான். அம்மா, கேட்கிறாள்
    "ஏண்டா"
    "போம்மா இன்னைக்கு லீவு"
    "ஏன் லீவு, என்ன ஆச்சு?"
    "தெரியாது இன்னிக்கு லீவு"
    அவனது அப்பா, அக்கா, அண்ணன், பக்கத்து வீட்டு சிநேகிதன் எல்லோரும் இன்னிக்கு காலேஜ் உண்டு என்று சொல்லி அவனை அனுப்பி
    வைக்கிறார்கள்.

    பஸ் ஸ்டாண்டிற்கு வரும் போது காலேஜ் பஸ் கிளம்பி விடுகிறது, அவன் அவசர அவசரமாக ஓடிப் போய் ஏற முயற்சிக்கும் போது
    கீழே விழுந்து அடிபட்டு அங்கேயே இறந்து விடுகிறான்.

    அன்னிக்கு காலேஜ் லீவு.

    கடைசியாக அமெரிக்காவில் நடந்ததாகச் சொல்லப்படும் கதை:
    அவர் ஒரு மிகப் பெரிய மனிதர். ஒரு நாள் அவருக்கு ஒரு கனவு, அதில் அவர் இருக்கும் மாளிகை முழுவது ஒரே அழுகைக் குரல்.
    பதட்டத்தோடு அவர் ஒவ்வொரு அறையாகப் பார்க்கிறார். அப்போது அங்கு வேலை செய்யும் ஒருவர் இன்னொருவரிடம், உடலை அந்த
    அறையில் வைத்திருக்கிறார்கள் என்கிறார். அந்த அறைக்கு அவர் செல்லும் வழியில் இன்னொருவரிடம் என்ன ஆச்சு என்று கேட்க அவர்,
    நேற்று மாலை இவரை ஒருவன் நாடகக் கொட்டகையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டான் என்கிறார். யார் அது என்று
    இந்த பெரிய மனிதர் போய்ப் பார்க்க அங்கே இறந்து கிடப்பது தானே என்று தெரிகிறது. இதை உணர்ந்தவுடன் தான் தூக்கம் கலைந்து
    எழுந்து விட்டதாக் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்து இருந்தார் அந்தப் பெரியவர். இந்தக் கனவு கண்டு ஓரிரு வாரங்களில் அவரை
    அதேப் போல் ஒருவன் கொன்று விட்டான். அந்தப் பெரியவர் பெயர் ஆப்ரகாம் லிங்கன்.

    நாகு: இதே விமர்சனத்தை இதே கதைக்கு நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு தந்து விட்டீர்கள். சற்று மாற்றக் கூடாதா?

    பி.கு. பின்னூட்டத்தையே ஒரு சிறு கதை போல இழு இழுழுழுழுழுழுன்னு இழுத்துட்டேன், மன்னிக்கவும்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  6. சதங்கா,

    நீங்கள் கேட்டதைத்தான் 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என் சொல்லி இருக்கிறார்கள் முன்னோர்.

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  7. நான் என்ன வருஷத்துக்கு வருஷம் பேச்சு மாத்தற ஆளா? ஹி ஹி....

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!