Monday, April 30, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 12

அடையாளத் திருட்டு:

நமது வங்கி கணக்கின் பெயர், மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி அதன்மூலமாக நம் வங்கிகணக்கிலிருந்து பணத்தைத் திருடுதல்.

இன்னும் சிலர் ஒருவருடைய அடையாளங்களைத் தெரிந்துக் கொண்டு வங்கிக் கடன் அட்டைக்கு முயல்வர் . சில காலம் நல்ல முறையாக பரிவர்த்தனைகள் செய்து கடன் எல்லையை அதிகரித்து காலம் ஒத்துழைக்கையில் பெரும் தொகையை கணக்கில் ஏற்றி விட்டு காணாமல் போய்விடுவர் .

இந்தியாவில் இவை அதிகம் பிரபலம் இல்லை. ஏனென்றால் நாம் கணிணி மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகம் செய்வதில்லை.

பாதுகாப்பு வழிமுறைகள்:(வெளிநாடுகளில் உள்ளவரையும் கணக்கில் எடுக்கப்பட்டது.)


நமது ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் விபரம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் சோசியல் செக்யூரிட்டி எண்(இருப்பின்) பாதுகாப்பாக வைக்கவும். இவற்றில் சிலவற்றைக் கொண்டு நம்மைப் போல் இன்னொருவர் கணக்கு துவங்க இயலும் .

இவற்றினை உரிய நபர்களிடம் மட்டும் தேவைப்படும் பொழுதுக் காட்டவும் .

இந்த விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் மற்றும் பைல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அழிக்கும் பொழுது இலவச ஸ்ரெட்டர் புரோகிராம் ஏதேனும் கொண்டு அழிக்கவும் .

கூடுமானவரை ஒன்று அல்லது இரண்டு கடன் அட்டைகளை வைத்திருத்தல் நலம் . அப்பொழுதுதான் அவ்வப் பொழுது அவற்றினைச் சரிபார்க்க இயலும்.

மின்னஞ்சல் மூலமாக கடன் அட்டை விபரங்களை யாருக்கும் தெரிவிக்காதீர்கள் .

இது பற்றி மேலும் விபரங்களுக்கு. http://www.idtheftcenter.org

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

2 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. Ravi's comment has been edited to remove personal references... Perai sonnalum Oorai sollakoodathu..

  செந்தழல் ரவி said...
  ///இன்னும் சிலர் ஒருவருடைய அடையாளங்களைத் தெரிந்துக் கொண்டு வங்கிக் கடன் அட்டைக்கு முயல்வர் . சில காலம் நல்ல முறையாக பரிவர்த்தனைகள் செய்து கடன் எல்லையை அதிகரித்து காலம் ஒத்துழைக்கையில் பெரும் தொகையை கணக்கில் ஏற்றி விட்டு காணாமல் போய்விடுவர் .

  இந்தியாவில் இவை அதிகம் பிரபலம் இல்லை. ஏனென்றால் நாம் கணிணி மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகம் செய்வதில்லை.///

  நாகு

  xxxx என்பவர், என்னுடைய நன்பருடன் பிடிலிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்தார். என்னுடைய நன்பர் வேறு நிறுவனத்துக்கு மாறிவிட்டபின், என்னுடைய நன்பரின் பெயரில் க்ரெடிக் கார்டுகளை அப்ளை செய்தார் இந்த xxxx. இரண்டு கார்டுகளும் பெற்றுள்ளார்...(இதே போல் 5 முதல் 10 கார்டுகள் மற்றவர் பெயரில் ஏற்கனவே பெற்றுவைத்துள்ளதாக தெரிகிறது...)

  பிறகு நாங்கள் இதை கண்டறிந்து பெங்களூர் காவல்துறையில் பிடித்து கொடுத்து இப்போது பிடிலிட்டி நிறுவனம் xxxxயை நீக்கி உள்ளது...

  xxxx-i பார்க்கவேண்டுமே...இங்கே லிவ்விங் டுகெதராக ஒரு பெண்ணுடன் வாழ்கிறார், அடுத்தவன் காசில் லட்சக்கணக்கில் மோசடி செய்தார் என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாத ஒரு அப்பாவி முகம்.

  தந்தையார் ஒரு அக்கவுண்டண்ட். ஆச்சாரமான குடும்பம். இவருடைய காதலி yyyy என்பவர் வீட்டை விட்டு ஓடி வந்து பெங்களூரில் இவருடன் வசிக்கிறார்.

  இது போன்ற வெள்ளைக்காலர் குற்றவாளிகள் இங்கேயும் பெருகிவிட்டார்கள் என்பதை சொல்லத்தான் இந்த பின்னூட்டம்.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!