Wednesday, April 25, 2007

திருவாசகம்

"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்". இது நம்மில் பலருக்கும் தெரிந்த வாசகம்.

அதை சிம்பொனி இசையோடு மிக அற்புதமாய் வெளியிட்டார் இளையராஜா என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான்கு வருட உழைப்பு. 250 இசைக் கலைஞர்களைக் கொண்டு 2 வாரங்களில் முடித்த இசைப் பதிவு.

எல்லோருக்கும் தெரிஞ்சதையே சொல்லிகிட்டிருந்தா எப்படி-னு கேக்கறீங்களா ? சரி விசயத்துக்கு வரேன் ...

சமீபத்தில இசைத் திருவாசகத்தைப் பற்றி பணியிடத்தில், சக அமெரிக்கர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேச ஆரம்பிச்சது, அந்த CD-ல English Translation-ம் இருக்கு-னு. அவருக்கு கொஞ்சம் இசை பற்றி தெரியும். Bass-u, Treble-u னு நம்மல ட்ரபிள் பன்ன ஆரம்பிச்சிட்டாரு. நாம தான் ஞானசூனியமாச்சே. இந்தா புடிங்க-னு ராஜாவோட CD-ய கொடுத்து அப்போதைக்குத் தப்பிச்சிக்கிட்டேன்.

அவர் அதை கொஞ்ச நாட்கள் வரை கேக்கவே இல்லை. கேக்கலைனாலும் பரவாயில்லை, CD-ய திருப்பிக் கொடுங்க-னு சொல்ற நெலைமை. திடீர்னு ஒரு நாள் headphone மாட்டி கேக்க ஆரம்பிச்சார். சற்று நேரத்தில், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை என்றார். அவருக்கு எங்கே தெரியும் நம்ம ராஜாவைப் பத்தி. அத பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அமெரிக்கர், எங்கே உங்க headphone கொடுங்க-னு வாங்கிக் கேக்க ஆரம்பிச்சார்.

கொஞ்ச நேரத்தில, கண்மூடி, விரல் சொடுக்கி, தோள்களை அசைத்து ... நாம சொல்றோமே 'மெய்மறந்து', அந்த நிலைக்கு ரெண்டே நொடியில போய்ட்டாரு.

அவர் கேட்கின்ற முதல் இந்திய இசை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லத் தேவையில்லை தமிழும் தெரியாது.

"Awesome, நான் இத இன்னிக்கு வீட்டுக்கு எடுத்திட்டு போறேன். நாளைக்குத் திருப்பித் தர்ரேனே" என்றார் கெஞ்சலாக.

"ஏன்னா என் கணவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியர். கண்டிப்பா இந்த இசை அவருக்கு புடிக்கும் அதான்" என்றார். சரி என்றேன்.

மறுநாள் வழக்கம் போல வேலைக்கு வந்த போது, CD எனது தட்டச்சுப் பலகையின் அருகில் இருந்தது. என்னைக் கண்டவுடன் அருகில் வந்தார் அந்த அம்மையார். "நான் சொன்ன மாதிரியே என் கணவர் மிகவும் ரசிச்சார். சில கேள்விகள் கேக்கலாமா" என்றார்.

மீண்டும், இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன் அப்பாவியாக. இல்லை பொதுவான கேள்விகள் தான் என்று ஆரம்பித்தார்.

"பல நாடுகளின் ஏராளமான இசைகளை என் கணவர் கேட்டிருக்கார். முக்கியமானவற்றை சேகரித்தும் வைக்கிறார். அப்படி ஐநூறுக்கும் மேல் CD-க்கள் சேகரித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு இசையை இது வரை அவர் கேட்டதேயில்லை. அவரு கேட்ட கேள்விகளைத் தான் நான் உங்கிட்ட கேக்கறேன்" என்றார். அவரின் கேள்விகள் "இந்த CDயின் composer யாரு, notes-லாம் எழுதினது யாரு, notes கெடைக்குமா ?". இசை பற்றி கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இசை பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

இளையராஜாவைப் பற்றி ஒரு intro கொடுத்தும், அவர் அசந்து போன அழகைச் சொல்ல வார்த்தையில்லை. இதைத் தவிர "no kidding, he was a street musician ?!!!!"

என்ன தான் பல முறை (மெய்மறந்து) கேட்டிருந்தாலும் இவரு சொன்னதுக்கப்புறம், 'பொல்லா வினையேன் நின் பெருஞ்சீர்' என்ற இரண்டாவது track-ல, மடை திறந்த வெள்ளமென கசியற வயலின்களோட இசை, அப்பப்பா ... தேகமெல்லாம் அப்படி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது உண்மை.

கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றொருவர் வந்து, "if you don't mind, I borrow the CD" என்று, சுழன்று கொண்டிருந்த CD-யை எடுத்துச் சென்றுவிட்டார்.

ராஜா சார் நீங்க அமெரிக்காவுலயும் திருவாசகம் CD வெளியிடறதா ரொம்ப நாள் முன்னாடி செய்தி படிச்சேன். அப்படிப் பன்னலையா ?

என்னோட CD சுத்திக்கிட்டே இருக்கு. எப்போ என் கைக்கு வருமோ ? இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தை இங்கே நினைத்தால் பயமாக இருக்கிறது. அதுவும் இசை கலந்த திருவாசகம்.

-----

பிழை இருப்பின் வழக்கம் போலத் தெரியப்படுத்தவும். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டம் இடுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா.

10 comments:

 1. என்னங்க, இப்படி ஒரு பதிவு போட்டு அசர வெச்சுட்டீங்க!

  கடந்த 2 ஆண்டு காலமாக இதற்கெனவே, ஒரு இணையதளம் இயங்கிக் கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?

  இளையராஜாவின் இந்த சிடி வருவதில் அமெரிக்கத் தமிழரின் பங்கு மிக அதிகம்.

  இந்தத் தளத்தில் சென்று பாருங்கள்.

  http://www.tis-usa.com./

  எல்லாத் தகவல்களும் கிடைக்கும்.

  வேண்டுமென்ற குறுந்தகடுகளும் நீங்கள் வாங்க முடியும்.

  உங்கள் நண்பர்களுக்கும் காட்டுங்கள்!
  மிக்க நன்றி!

  ReplyDelete
 2. நல்ல பதிவு, சதங்கா. இளையராஜாவின் இசை தமிழ் சினிமா இசையை அடியோடு மாற்றியது. அதற்கு முன்னால் ஹிந்திப்பாடல்களை மட்டும் கேட்டுக்கொண்டிருந்த (சென்னை) மக்களை தமிழ்ப்பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா.

  இளையராஜா தெருப்பாடகர் மட்டுமல்ல. மேற்கத்திய இசையை முறையாகக் கற்றுத்தேர்ந்தவர். லண்டன் ட்ரினிடி கல்லூரியில் மேற்கத்திய கிளாஸிக்கல் கிதார் இசையில் தங்க மெடல் வாங்கியவர்.
  http://en.wikipedia.org/wiki/Ilayaraja

  அவருக்கு முன்னே வந்த தமிழ் சினிமா இசையில் பெரும்பாலும் கவிதை மற்றும் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை ஏதோ கொஞ்சம் போட்டிருக்கும். அதை முழுவதும் மாற்றியவர். சுஜாதா சொல்வதுபோல 'இளையராஜாவின் முப்பது வயலின்கள்'. அந்த உத்தி எல்லாம் மேற்கத்திய இசையின் தாக்கம்தான்.

  ReplyDelete
 3. vsk

  நான் இந்த ப்ளாக் area-வுக்கே புதுசு. மன்னித்துக் கொள்ளுங்கள் அறியாமைக்கு.

  இதைத் தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்த இனைய தள முகவரியை எனது நண்பர்களிடம் தெரிவிக்கிறேன்.

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 4. iPod வைத்திருப்பவர்களுக்கு - இளையராஜாவின் திருவாசகம் ஆப்பிளின் iTunes Store-லும் கிடைக்கிறது. $9.99க்கு முழு ஆல்பம். சில பாடல்கள் தனியாக $0.99க்கு.

  ReplyDelete
 5. நாகு,

  இளையராஜாவின் பல achievements சொல்லிய பிறகு, அவரின் ஆரம்ப காலத்தை சொல்லிய போது தான் அம்மையார் அசந்தே விட்டார்.

  மேலும் தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல.

  என்றும் அன்புடன்
  சதங்கா.

  ReplyDelete
 6. வணக்கம் சதங்கா

  அருமையான பதிவு ;) ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க

  ராஜா....ராஜா தான் ;)

  ReplyDelete
 7. வந்த முதல் வாரத்திலேயே "விகடன்" மூலம் வாங்கினேன். ITunes'ல் வாங்கினால் வேறு இடத்தில் (CD) கேட்பது சிரமம் (அதற்கும் வழி உண்டு!).

  "பூவார் சென்னி மன்னன் எம்
  புயங்கப் பெருமான் சிறியோமை.."
  எனக்கு மிக விருப்பமானது!!

  ReplyDelete
 8. here in Chennai, the fortunate few are dieing daily, just to be born again... . Becos you dont have much else to do after listening to Thiruvasagam by Ilayaraja. Born again you are, becos, you dont have much else to do there either.

  Of all the tracks in the albums, each one of them tops based on the moods. the current top for me is, Umbagarkarase... The Macro level beauty is the singer singing in free viruththam style of South Indian Music , the orchestration in pure western. The Blend is the output which starts with M and ends with C, You may call it as Music or Magic.

  Regards

  Giri

  ReplyDelete
 9. கோபிநாத், ஜெயகாந்தன், கிரிதரன் ...

  பதிவை வாசித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

  ஒரோருத்தருக்கு ஒரோர் பாட்டு பிடிச்சிருக்கு. ம்ம்ம்ம்ம் ... Well said Giri - "each one of them tops based on the moods".

  என்றும் அன்புடன்
  சதங்கா

  ReplyDelete
 10. சதங்கா,நல்ல பதிவு. இளையராஜாவின் படைப்புகள் அனைத்துமே அலாதி தான் (கார்த்திக், யுவன், பவதாரிணி உட்பட). திருவாசகம் அவர் படைப்புகளிலேயே உன்னதமானது. ஜாதிமத பேதமின்றி பல கலைஞர்களைக்கொண்டு இப்படியொரு "சிம்பொனி" அமைக்க அவரால் தான் முடியும். திருவாசகம் CD வெளிவந்த சில நாட்களிலேயே எனது தந்தையார் இந்தியாவிலிருந்து எனக்கு அனுப்பிவிட்டார். 6 பாடல்க்ள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பல ராகங்களில் இசையமைத்து வெளுத்துக்கட்டியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாடல் "முத்து நற்றாமம்". இளையராஜாவின் குரலை குறை சொல்ல எனக்கு அருகதையில்லை-நன்றாகத்தான் பாடியிருக்கிறார். 6 பாடல்களில் 5 பாடல்களை அவரே பாடியிருக்கிறார். வேறு சில பாடகர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!