Saturday, April 07, 2007

சார் பேப்பர் - Question பேப்பர்

சமீபத்தில் தமிழகத்தில் தேனியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த SSLC சமூக அறிவியல் தேர்வு வினைத்தாள்களை ஒரு ப்ளஸ் 1 மாணவன் திருடி தன் ஹீரோயிசத்தைக் காட்டியிருக்கிறான்.
பிடிபட்ட அவன் சக மாணவர்களிடம் தன்னை ஒரு ஹீரோவாகக்காட்டவே இச்செயலைச்செய்ததாக போலீசிடம் கூறியுள்ளான்.
இதில் அபத்தம் என்னவென்றால் இத்திருட்டு பட்டப்பகலில் நடந்திருக்கிறது. கேள்வித்தாள்கள் வைத்திருக்கும் அறையின் பின்புறம் இருக்கும் ஜன்னலின் கம்பிகளை அறுத்து, உள்ளே சென்று, பீரோவின் பூட்டையும் அறுத்து கேள்வித்தாள்களை திருடிச்சென்றுள்ளான். பகலில் போலீசார் பாதுகாப்பு அறையில் இருப்பதில்லையாம். இரவில் தான் டூட்டியாம்.

இந்த அபத்தத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட அபத்தம் இது தான் - கேள்வித்தாள்களைக்காப்பாற்ற முடியாத போலீசார், திருடிய மாணவனிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் போலீஸ் வேலை வாங்கித்தருவதாகப்பேசி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்துள்ளனர்.

இது போல் அவலங்கள் பல முறை இந்தியாவில் பல இடங்களில் நடந்திருக்கின்றன - மேலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இதனால் தேர்வுகளை ஒத்திப்போட்டு கஷ்டப்பட்டு, வினைத்தாள்களை திருத்தி எழுதி படித்து தேர்வுக்கு தயாராக இருந்த பல மாணவ மாணவிகளின் டென்ஷனை அதிகமாவது தான் அவலம்.

ஒரு பேப்பரை காப்பாற்ற முடியாத அளவுக்கு இருக்கும் இந்த நிலமை அவலத்திலும் அவலம். இந்த வினைத்தாள் திருட்டைத்தடுக்க அரசாங்கம் ஏதாவது புது யுக்தியைக்கண்டுபிடிக்க வேண்டும். இதில் என்ன கஷ்டமென்றால் வினைத்தாள் மாஸ்டர் காப்பியையோ அல்லது அச்சடித்த வினைத்தாள்களையோ எங்கு வைத்தாலும் திருடு போய்விடுகிறது. சில சமயம் அச்சகத்திலிருந்தே திருடு போய்விடுகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட பரதேசியின் சில யோசனைகள்:

1. அச்சடித்த வினைத்தாள்களையெல்லாம் ராக்கெட்டில் ஏற்றி வானத்தில் விட்டு Satellite ல் பறக்கவிடலாம். பிறகு தேர்வு தினத்தன்று பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களின் வாசலில் இறக்கி உள்ளே கொண்டு சென்று தேர்வுக்கு வினியோகம் செய்யலாம். Satellite ஐ யாரும் ஹை-ஜாக் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. அதிகாரமில்லாதவர்கள் திறந்தால் வெடித்துச்சிதறும் வகையில் safe கள் உருவாக்கலாம்

3. கேள்வித்தாள் மாஸ்டர் காப்பியை நானோசிப்பில் (Nanochip) பதிவு செய்து உயர் அதிகாரியின் கையிலோ, காலிலோ, உடம்பிலோ இம்ப்ளாண்ட் செய்து விடலாம். பிறகு தேர்வு நாளன்று தேர்வு மையத்திலேயே வெளியெடுத்து ப்ரிண்ட் அடிக்கலாம். ஆனால் அதிகாரியை யாராவது கடத்தாமலிருக்க பாதுகாப்பு தேவை.

4. Special ink ல் கேள்வித்தாள்களை அச்சடித்து தேர்வு மையத்தில் ப்ரத்யேக இயந்திரத்தில் expose செய்து அச்சடித்து வினியோகம் செய்யலாம். இந்த இயந்திரம் Wal-mart ல் விற்கக்கூடாது என்ற ரூல் போட வேண்டும்.

5. இதெல்லாம் முடிகிற காரியங்களாகத்தோன்றாவிட்டால் தேர்வே இல்லாமல் எல்லோரும் 'பாஸ்' என்று சொல்லிவிடலாம். மாணவர்களுக்குக்கொண்டாட்டம். கல்லூரிகளுக்கு கூட்டம்.

4 comments:

 1. பரதேசி,

  கருத்துகளை சற்று நகைச்சுவையுடன் தந்திருப்பதிலிருந்தே, உங்கள் கோபம் தெரிகிறது. ஒரு சிறு திருத்தம், திருடப்பட்டது வினைத்தாள் அல்ல, வினாத்தாள்.

  முரளி.

  ReplyDelete
 2. முரளி,
  என் எழுத்தில் குற்றமா?
  எனக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால்.....
  திருத்தியதற்கு நன்றி. சாதாரணமாக எனக்கு பேசும்பொழுது தான் எழுத்துப்பிழை வரும். இதில் எழுதும் பொழுது பிழை வந்துவிட்டது. மன்னிக்கவும்.
  இததகைய செயல்கள் இந்தியாவில் அடிக்கடி நடக்கின்றன. யாரும் எந்த ஒரு பாதுகாப்பையும் செய்யலாம் என்று யோசிக்க மாட்டார்கள் போலும்.

  ReplyDelete
 3. ஒரு பொருளை பாதுகாப்பதில் எவ்வளவு கவனக்குறை நேரிடலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

  சென்ற முறை இந்தியாவில் ஒரு வங்கிக்கு சென்றிருந்தபோது கணக்கர் பூத்தில் மேஜைமேல் கணணி வைத்திருந்தார்கள். நான் வலைத்தடுப்பில் ஒரு விரலை விட்டு அந்த கணணியை அணைக்க வசதியாக கணணியின் ஆன்/ஆஃப் பட்டன் அமைந்திருந்தது. பக்கத்தில் ஒரு ஓமக்குச்சி நரசிம்மன் ஸைசில் ஒரு காவலாளி இருந்ததால் பயந்து வந்துவிட்டேன்.

  எனக்கு கடைசி ஐடியா பிடித்திருக்கிறது. அந்த மாதிரி பாஸ் பண்ணின மாணவர்களை சட்ட மன்றத்தில் மட்டும் அனுமதிக்கவேண்டும். குறிப்பாக அவுட்ஸோர்ஸிங் கம்பெனிகளில் அனுமதிக்கக்கூடாது. நம் வங்கிக்கணக்குகளை அவுட் செய்துவிடக்கூடாது பாருங்கள்!

  ReplyDelete
 4. முரளி - வினையாகிப்போன தாட்கள் என்று சொல்லவந்தார் போலிருக்கிறது.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!