Friday, May 25, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 1

இந்த வீடு வாங்கி, அது ஆச்சு அம்பது வருசம். கல்யாணம் முடிஞ்சு வாங்கின வீடு. எவ்வளவோ இடங்களுக்குப் போனாலும் என் வீடப் போல வராது. என்ன தான் பணம் வச்சிருந்து பங்களாக்கள் இருந்தாலும் நான் இன்னும் இந்த வீட்டில தான் வசிக்கிறேன்.

வீட்டுப்பக்கத்தில கொஞ்ச நிலம் வாங்கி அதை வாடகைக்கு விட்டுட்டேன். அதில கொஞ்ச வருமானம் வர ஆரம்பிச்சது. பங்குச் சந்தையில இறங்கினேன். எனக்கு இந்த கைத்தொலைபேசி, மடிக் கணிணி கச்சடாவெல்லாம் வச்சிக்கனும்னு இஷ்டமே இல்லை. (இந்தக் காலத்து பசங்கள நினைத்து சொன்னாரா என்று தெரியவில்லை !)

வேலைக்குப் போய்ட்டு, கார ஓட்டிகிட்டு நேரா வீட்டுக்கு வந்தன்னா, பாப் கார்ன் வச்சிக்கிட்டு தொலைக்காட்சியில மூழ்கிடுவேன்.

எனக்கு இந்த பர்ட்டிகெல்லாம் போய் சோசியலைஸ் பண்றதுல விருப்பம் இல்லை.



இப்படிச் சொல்பவர் திரு. Warren Buffet அவர்கள் [Greatest Stock Market Investor of the Modern World].


இவரைப் பற்றிய பிரமிப்புகள்:

  • முதல் பங்கு வாங்கிய வயது பதினொன்று. பின்னாளில் அதுவே தாமதம் என்று நினைத்தாராம்.

  • பதின்மூன்று வயதில் வருமான வரி கட்டியது.

  • பதினாலு வயதில் ஒரு சிறு பண்ணையை (செய்தித் தாள் விற்ற காசில்) வாங்கி வாடகைக்கு விட்டது.

  • பதினைந்து வயதில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து pinball game machine வாங்கி புழக்கத்தில் விட்டு, சில மாதங்களில் மேலும் இரண்டு மெசின்கள் வாங்கியது.

  • பல வருடங்கள், நலிந்த / நலிவுறும் பல நிறுவங்களை வாங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியது. உதாரணம் Berkshire Hathaway, GEICO.

  • இவரது Berkshire Hathaway நிறுவனத்தின் கீழ் தற்போது 63 நிறுவங்கள் செயல்படுகின்றன.

  • உலகில் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமை பெற்றது.

  • சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர்களில் 80% (37 பில்லியன் டாலர்கள்) charity க்கு கொடுப்பதாக அறிவித்தது.

  • இவரது ஆஸ்தான சீடர் திரு. Bill Gates அவர்கள்.

  • இன்னும் பல பிரமிப்புக்கள் ...

  • கடைசியா, இவரது ஆண்டு சம்பளம் 100,000 டாலர்கள் மட்டுமே. இவரை ஒத்த மற்றவர்கள் வாங்கும் சம்பளம் 9 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இவரைப் பற்றி மேலும் பிரமிக்க இங்கே க்ளிக்கவும்.


    ------------------------

    அனைவருக்கும் வணக்கம் !

    முதல் முயற்சியா இதப் பண்றேன். இந்த மாதிரி எல்லாரும் பண்றது தான். என்ன, ஒரு சின்ன வித்தியாசம் தலைவர்களின் படங்களை வரைந்து பதியலாம் என்று ஒரு எண்ணம். உங்க கருத்துக்களை வரவேற்கிறேன்.

    சண்முகா.

    7 comments:

    1. வாங்க சண்முகா. அமைதிப் படையிலிருந்து வெளியேறியதற்கு வாழ்த்துக்கள். முதல் பதிவே அமர்க்களமாக இருக்கிறது. அதுவும் பஃபெட் சொல்கிற மாதிரி நடை நன்றாக இருக்கிறது. குறிஞ்சிப்பூ போல பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை மாதிரி இல்லாமல் அடிக்கடி மலர வாழ்த்துக்கள்.

      எதை வைத்து பில் கேட்ஸ் இவரது பிரதம சீடர் என்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரை இருவரும் நல்ல நண்பர்கள். அவ்வளவே.

      இவரைப்பற்றி இன்னொரு பிரமிப்பு. டாட் காம் பங்கு சந்தை ஜோதியில் இவர் கலக்கவேயில்லை. ஏன் என்று கேட்டதற்கு இவர் சொன்ன பதில்: "எனக்கு புரியும் தொழில்களிலேயே என்னால் பணம் பண்ணுவது கஷ்டமாக இருக்கிறது. இந்த டாட் காம் விஷயம் எனக்குப் புரியவே இல்லை. அதனால் நான் அதில் இறங்கவில்லை". அப்போது அவரைப் பார்த்து நக்கலடித்தவர்களுக்கு fruit of the loom கூட மிஞ்சவில்லை.

      ReplyDelete
    2. நாகு, மிக்க நன்றி.

      படத்தைப் பற்றி ஒன்றும் தோன்றவில்லயா உங்களுக்கு ? ஏதோ அவர மாதிரி வரஞ்சிருந்தேன் ;-)

      நண்பர் ஒருவர் 'பஃபெட்' பற்றிய மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தார் 'கேட்ஸ்' பற்றி.

      அதன் சுருக்கம் கீழே:

      >9) Bill Gates, the world's richest man met him for the first time only 5
      >years ago. Bill Gates did not think he had anything in common with Warren
      >Buffet. So he had scheduled his meeting only for half hour. But when Gates
      >met him, the meeting lasted for ten hours and Bill Gates became a devotee
      >of Warren Buffet.


      சண்முகா.

      ReplyDelete
    3. நல்ல பதிவு.. படம் நன்றாக வந்திருக்கு.. டாட்காம் டிஸ்யு நிறைய மிஞ்சி விட்டது.. Fruit of the Loom'ல் 'அது' கூட செய்கிறார்களா?

      ReplyDelete
    4. மன்னிக்கவும். படம் நீங்கள் வரைந்ததை கவனிக்கவில்லை. படம் அந்த புகைப்படம் மாதிரியே இருந்ததால். கொஞ்சம் 'கிராபிக்ஸ்' வேலை செய்யப்பட்ட படம் என்று நினைத்தேன். அவ்வளவு நன்றாக வந்திருக்கிறது.(புல்தரையில் மறுபடியும் விழுந்தேன் :-)

      ReplyDelete
    5. வருகைக்கு நன்றி அனானி.

      நாகு, மறுபரீசிலனை செய்து பாராட்டியமைக்கு நன்றி.

      படம் அப்படியே வந்திருக்கு சொல்லி ரொம்ப உசுப்பு ஏத்திவிடறீங்களே !!!

      ReplyDelete
    6. சண்முகா,

      வருக வருக என் வரவேற்கிறேன்.

      மிக நல்ல பதிவு. படம் மிக அருமை. நிறைய எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

      அன்புடன்,

      முரளி

      ReplyDelete
    7. முரளி,

      //வருக வருக என் வரவேற்கிறேன்.

      மிக நல்ல பதிவு. படம் மிக அருமை.//

      மிக்க நன்றி.

      //நிறைய எழுதுங்கள். //

      எனக்கும் ஆசை தான் நிறைய எழுத வேண்டும் என்று. முடிந்த வரை எழுதுகிறேன்.

      //ஆவலுடன் காத்திருக்கிறோம்.//

      இந்த ஒரு வரி போதும். உங்கள் ஆவலை வீணாக்காமல் உபயோகமான தகவல்கள் திரட்டி / படைத்து பதிவிட முயற்சிக்கிறேன்.

      ReplyDelete

    படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
    தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
    அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!