அமெரிக்க பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போகிறது. இந்த காலத்தில் நம் வாழ்கையில் சில தேவையில்லாத செலவுகளை குறைத்திடவும், சேமிப்பினை அதிகரிக்கவும் சில வழிகளை இங்கு பார்ப்போமா! இது போல உங்களுக்கு தெரிந்த, முயன்ற வழிகளை பின்னூட்டமிட்டால் படிக்கும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
உபயோகமில்லாத பொருட்களை வெளியேற்றுங்கள்:
"கராஜ் சேல்", கிரைக்ஸ் லிஸ்ட் , ஈ-பே போன்ற பல வழிகளில் நீங்கள் உபயோகிக்காத பொருட்களை விற்று காசாக்கலாம். சிலவற்றை உங்கள் அருகிலிருக்கும் குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம். உதாரணத்திற்கு கணினிகள், மின் கருவிகள் போன்றவை சில வருடங்கள் கழித்து அவற்றின் மதிப்பு குறைந்துவிடும். இவற்றை தேவையில்லாமல் வீட்டில் வைத்து குப்பை சேர்ப்பதை விட விற்று காசாக்கலாம் அல்லது குட்-வில் கடைக்கு வழங்கி வரி விலக்கு பெறலாம்.
பொது வளம்:
பொது நூலகம் ஒரு சிறந்த உபயோகமான "இலவச" வளம்! புத்தகங்கள், ஒளி குறுந்தகடுகள், இலவச வலை உபயோகம், குறைந்த செலவில் அச்சு மற்றும் நகல் எடுக்க வசதி, தனியாக படிக்க அறைகள் மற்றும் பல இலவச சேவைகள் உள்ளன. நீங்கள் கிங்கொஸ் சென்று பிரிண்ட் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு ஐம்பது சென்ட் செலவாகும்! ஆனால் நூலகத்தில் பத்து சென்ட் மட்டுமே!
தொலைகாட்சி மற்றும் டிஷ்:
நாம் தினமும் பார்க்கும் மிக முக்கியமான செய்திகள் மற்றும் நிகழ்சசிகள் (அமெரிக்காவில் மட்டுமே!!) பெசிக் கேபிள் எனப்படும் உள்ளூர் சேனலிலேயே வந்துவிடும். ஆனால் எக்ஸ்-டென்டேட் கேபிள் தேவையில்லாத பல சேனல்கள் கூட்டி விலை மூன்று மடங்காக்கிவிடுவர்கள். தேவையில்லாத டி-வி-ஆர் எனப்படும் கருவிக்கு மாதம் ஐந்து டாலர் வேறு! இப்போது பல சேனல்களின் நிகழ்சசிகள் இணையத்தில் இலவசமாக பார்க்கும் வசதி வந்துவிட்டது. http://www.hulu.com தளத்தில் டிவி நிகழ்சசிகள், சில திரைப்படங்கள் கூட உள்ளன. அதற்கு தேவை ஒரு கணினி (இணைய வசதியுடன்), மற்றும் ஒரு எஸ்-வீடியோ கேபிள். இந்த தளத்தில் கேபிள் டிவி'க்கு மாற்றாக ஆறு வழிகள் தந்துள்ளார்கள், முயன்று பாருங்கள். இதன் மூலம் வருடத்திற்கு முந்நூறு டாலர் வரை சேமிப்பு!
இரண்டாம் கை பொருட்கள்:
கார்கள் மட்டுமின்றி, வீட்டுக்கு தேவையான மேஜை போன்றவை சில சமயம் மிக குறைவான விலையில் craigslist.com போன்ற தளத்தில் பார்த்து வாங்கலாம். பல நல்ல பொருட்களுடன் சில சமயம் தரம் குறைந்தவையும் வருவதால் மிக கவனமாக சோதித்து பார்த்து வாங்குதல் நலம். எங்கள் தமிழ் சங்கத்திற்கு வாங்கிய முநநூறு டாலர் மதிப்புள்ள கம்பியில்லா ஒலி வாங்கி (wireless lapel mic) வெறும் எழுபத்தி ஐந்து டாலர் மட்டுமே!
கர்ணனுக்கு கவச குண்டலம் போல மனிதனுக்கு அலைபேசி மிக அத்யாவசியமானதாகிவிட்டது. நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் சில சமயம் அலைபேசி நிறுவனங்களுடன் தள்ளுபடி விலையில் வழங்க வகை செய்திருக்கலாம். அப்படியில்லையேன்றால், http://www.freelancersunion.org/ என்ற தளத்தில் நிங்கள் ஒரு "சுதந்திரமாக தொழில் செய்பவர்" என பதிவு செய்து T-Mobile அலைபேசி மாத சந்தாவில் பத்து சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். (பிற அலைபேசிகளுக்கு இது போல இருக்கிறதா என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டமிடவும்). இந்த தளத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கள் சேவையை வழங்குகிறது. என்னுடைய அலைபேசி சந்தாவில் இதனால் மாதத்திற்கு ஆறு டாலர் சேமிப்பு!
கிரெடிட் யூனியன்:
உங்கள் அருகில் இருக்கும் credit union வங்கிகளில் பல நல்ல சேவைகள் இலவசமாக கிடைக்கும். இதில் சேர ஒரு அறிமுக உறுப்பினர் அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தார் அந்த வங்கியுடன் இவ்வகை ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நான் https://www.penfed.org/ என்ற வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். அவர்களது கடன் அட்டை மூலம் உங்கள் அலைபேசி மாத சந்தாவை கட்டினால், உங்கள் அலைபேசிக்கு இலவச காப்பீடு தருகிறார்கள். இதன் மூலம் அலைபேசி தொலைந்தாலோ, உடைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ உங்களுக்கு பகுதி பணம் திரும்ப கிடைக்கும்! (மேலும் விபரங்களுக்கு https://www.penfed.org/pdf/accountsforms/CellPhoneProtectDisc.pdf). இதே கடன் அட்டையின் மூலம் வாகன எரிவாயுவிற்கு பணம் கட்டினால், ஐந்து சதவிகிதம் கட்டண தள்ளுபடி அந்த மாத இறுதியில் திருப்பி கொடுக்கிறார்கள்! இந்த கடன் அட்டைக்கு மாத சந்தா எதுவும் இல்லை.
ஆக்டேன் ரேடிங்:
வாகன எரிவாயு நிரப்பும் பொது மூன்று விதமான ஆக்டேன் ரேடிங் இருப்பதை பார்க்கலாம். பொதுவாக விலை அதிகமாக இருப்பதுதான் நல்ல எரிவாயு என சிலர் நம்பி அதிக விலை கொடுத்து நிரப்புவர். உங்கள் வாகனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குறைவான ஆக்டேன் ரேடிங் எரிவாயு நிரப்பினால் போதுமானது! பல வாகனங்களுக்கு ஆக்டேன் ரேடிங் 87 போதுமானது! அது தவிர சக்கரங்களில் சரியான அளவு காற்று நிரப்புதல் எரிவாயு சேமிப்பிற்கு உதவும்!
மாத சந்தாவா அல்லது வருட சந்தாவா!:
சில சமயம் வருட சந்தா கட்டினால் பல நிறுவனங்கள் கட்டணத்தில் தள்ளுபடி செய்வார்கள்! உதாரணத்திற்கு, வாகன காப்பீடு ஆறு மாதம் ஒரு முறை கட்டினால் மாதத்திற்கு பத்து டாலர் வரை சேமிக்கலாம்! அது தவிர வருடத்திற்கு ஒரு முறை உங்கள் வாகன காப்பீடிற்கு மற்ற நிறுவனங்கள் குறைவாக கொடுகின்றர்களா என பார்த்து கொண்டிருக்கவும். பல சமயம் புது வாடிக்கையாளர்களை கவர பல தள்ளுபடிகள் கொடுக்கலாம். கய்கோ நிறுவனத்தின் காப்பீடில் நான் penfed.org credit union உறுப்பினராக இருப்பதால் மாதம் பத்து டாலர் வரை தள்ளுபடி கொடுத்தார்கள்! அது தவிர நீங்கள் வருடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்வீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சந்தா அமையும். அதனால், ஆரம்பத்தில் நீங்கள் சற்று குறைவான தூரம் கொடுப்பதனால் கட்டணத்தில் சேமிக்கலாம்.
தண்ணீர் தண்ணீர்:
அமெரிக்காவில் ஒரு காலத்தில் தண்ணீரும் எரிவாயுவும் ஒரே விலை இருந்தது! இப்போதும் தண்ணீரை பலர் காசு கொடுத்து பாட்டில்களில் வாங்குகின்றனர். அந்த பாட்டில்களில் நீர் எங்கு பிடிக்கப்பட்டது என எழுதியிருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். பல நிறுவனங்கள் நகரின் குடிநீரை மேலும் சுத்தப்படுத்தி பாட்டில் அடைத்து விற்கின்றனர்! இதற்கு நம் வீட்டு குழாயில் வரும் நீரை பில்டர் செய்து குடிக்கலாம். அல்லது அருகாமையில் இருக்கும் கடைகளில் குறைவான விலையில் உடனடி பில்டர் செய்த நீரை விலைக்கு வாங்கலாம். அது தவிர உணவகங்களில் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் வாங்காமல் நீரை பருகினால் உடலுக்கும் நல்லது, நம் பர்சுக்கும் நல்லது!
அமெரிக்காவில் ஒரு காலத்தில் தண்ணீரும் எரிவாயுவும் ஒரே விலை இருந்தது! இப்போதும் தண்ணீரை பலர் காசு கொடுத்து பாட்டில்களில் வாங்குகின்றனர். அந்த பாட்டில்களில் நீர் எங்கு பிடிக்கப்பட்டது என எழுதியிருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். பல நிறுவனங்கள் நகரின் குடிநீரை மேலும் சுத்தப்படுத்தி பாட்டில் அடைத்து விற்கின்றனர்! இதற்கு நம் வீட்டு குழாயில் வரும் நீரை பில்டர் செய்து குடிக்கலாம். அல்லது அருகாமையில் இருக்கும் கடைகளில் குறைவான விலையில் உடனடி பில்டர் செய்த நீரை விலைக்கு வாங்கலாம். அது தவிர உணவகங்களில் கோக், பெப்சி போன்ற குளிர் பானங்கள் வாங்காமல் நீரை பருகினால் உடலுக்கும் நல்லது, நம் பர்சுக்கும் நல்லது!
முயன்று பாருங்கள்!
உபயோகமான தகவல்கள். நன்றி.
ReplyDeleteதண்ணீர் - நகரின் குடிநீரில் என்ன குறை என்று எல்லோரும் ஃபில்டர், புட்டித் தண்ணீர் என்று போகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அதுவும் எல்லோர் வீட்டு ப்ரிட்ஜிலும் தண்ணீர் ஃபில்டர் வேறு. புட்டித் தண்ணீர் பெட்ரோலைவிட விலை அதிகம் தெரியுமா? :-)
ஆயுள் காப்பீடு, வீட்டு/வாகன காப்பீடு எல்லாம் IEEE போன்ற இயக்கங்களின் அங்கத்தினர்களுக்கு மலிவாகக் கிடைக்கும்.
//அது தவிர சக்கரங்களில் சரியான அளவு காற்று நிரப்புதல் எரிவாயு சேமிப்பிற்கு உதவும்! //
ரிப்பீட்டே...
நன்றி நாகு!! IEEE தளத்தில் உறுப்பினர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் சலுகை விலையில் கொடுக்கிறார்கள். அதற்கு நாம் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தால் போதுமானது.
ReplyDeleteகூகிள் நிறுவனத்தின் சார்பில் ஒரு தளம் : http://moderator.appspot.com/#16/e=3cfc
ReplyDeleteஇதில் பல உபயோகமுள்ள டிப்ஸ் காணலாம்!