சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நான் ஒரு சாரண முகாமில் இருக்கிறேன். வர்ஜினியாவின் ப்ளூரிட்ஜ் மலைத் தொடரில் இருக்கும் ஒரு பெரிய சாரண முகாம். புலஸ்கி கவுண்டியில் ஹிவாஸ்ஸி என்ற கிராமத்துக்கு அருகில். மலைகளும் சிறு நதிகளும் நிறைந்த இந்த இடம் இன்னொரு சொர்க்கபுரி.
இணையத்தொடர்பும் அலைபேசி தொடர்பும் வேலை செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சொர்க்கத்தை அனுபவிக்காமல் இங்கே என்னய்யா செய்கிறீர்கள் என்பவர்களுக்கு - எல்லாம் உங்கள் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத்தான். சொர்க்கத்தின் ஒரு உதாரணம்...
இது என்ன என்கிறீர்களா?
எனது ஊஞ்சலில்(ஹம்மாக்) இருந்து எனக்கு தெரிவதெல்லாம் இதுதான்! போய் இன்னும் இன்றைக்கும் இந்த வாரம் மீதமிருக்கும் வேலைகளை எல்லாம் முடியுங்கள் சரியா? நான் கொஞ்சம் தூங்க வேண்டும்.
அடுத்த வாரம் விவரமாக...
விவரமாக அடுத்த வாரம்.
http://picasaweb.google.com/troop735/SummerCamp2009#5350346366821127810
ReplyDeleteஒரு பக்கம் வடை பஜ்ஜி'ன்னு வயித்தெரிச்சல கிளப்பரறாங்க, நீங்க இந்த மாதிரி சுகமா ஹம்மக்'ல படுத்து போஸ் குடுத்து எங்கள கெளப்பி விடுறிங்க.
அட இதுல பார்பேகியு வேற.. இனிமே ப்லோக் பக்கமே கொஞ்ச நாளக்கி தலை வைக்க கூடாது போல இருக்கு http://picasaweb.google.com/troop735/SummerCamp2009#5351261691830296914
ReplyDeleteதினம் பார்பெக்யு, கபாப் - சாப்பாடு ப்ரமாதம். நேற்று அதிகாலை ஒரு சூரிய உதய மலையேற்றம் போயிருந்தேன். அற்புதம்.
ReplyDeleteநாகு,
ReplyDeleteபடங்கள் எல்லாம் படு ஜோர். சென்னை வெய்யில் சும்மா வேர்கடலை வறுக்கற மாதிரி எங்களை வறுக்கறச்சே உங்களோட ஒரு போடோவில் வரும் படகும் அது போகும் நதியும் பார்க்க குளிர்ச்சியா இருக்கு. விவரமா இந்த இடம் பத்தி நேரம் கிடைக்கரச்சே எழுதுங்க.
நல்லாருங்க!!
ReplyDelete//தினம் பார்பெக்யு, கபாப் - சாப்பாடு ப்ரமாதம்//
ReplyDeleteஹிம்ம்... இதெல்லாம் ஒரு சாப்பாடு !!
வய்த்தெரிச்சலை அப்புறம் நாங்க எப்படி கொட்டிக்கறது :))
நாகு,
ReplyDeleteஅந்த கொசுக் கடி பத்தி எதுவும் எழுதலை.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா
இந்த பாட்டு எல்லாம் கேட்டு இருப்பிங்க. அதுனால நீங்க நம்ம ஊருக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வருவது உசிதம்.
அங்க நிறையவே சொர்க்கம் இருக்கு.
போட்டோ மட்டும் நல்லா இருக்கு ( சலங்கை ஒலி மாதிரி )
நீங்க அங்க இருக்கிறது மட்டும் நல்லா இல்லை
சந்தோச.மா இருங்க.
-வேதாந்தி
Hmmm koduthu veccha kattai!
ReplyDeleteநாகு, காதுல புகை வர, உங்கள் படங்களையும் பயண விவரங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனுபவியுங்கள். :-)
ReplyDeleteவேதாந்தி - நம்ம ஊர்லயும் நிறைய சொர்க்கம் இருக்குதான்.. ஆனா நம்ப போற ரெண்டு மூனு வாரத்துல அது எல்லாம் எப்படி கவர் பண்றது...
ReplyDeleteஷான் - கட்டையா? கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க :-)
செல்வராஜ் - ஊருக்கு போயிட்டு வந்தீங்க போல இருக்கு. நீங்க அப்பா, அம்மாகூட தனியா செலவழிச்சிட்டு வந்ததுக்கு எனக்கும் காதுல புகை! வருகைக்கு நன்றி!