Sunday, June 28, 2009

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே...


சென்ற வாரம் போயிருந்த முகாமில் ஒரு நாள் சூரிய உதயத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஐந்து மணிக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நான் கைக்கடிகாரத்தில் அலாரம் நேரத்தை சரியாக வைத்துவிட்டு அலாரம் ஆன் செய்ய மறந்துவிட்டேன். ஆனால் விப்பூர்வில் பறவைகள் மறக்காமல் எழுப்பிவிட்டன. அலறி அடித்துக்கொண்டு ஓடினால் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்ற பயத்தால் சத்தம் போடாமல் ஓடினேன்.
எல்லோரும் தூக்கத்தில் நடந்து வந்ததுபோல் இருந்தார்கள். ஒரு இருபது நிமிட நடையில் முகாமுக்கு நேர் மேலே ஒரு உச்சியை அடைந்தோம். அங்கிருந்து பார்த்ததில் தெரிந்த காட்சிதான் மேலே இருக்கும் படம்.

மூங்கில் இலை மீது தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே

இனி நான் குறுக்கே பேசவில்லை. சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின்னும் எடுத்த படங்களைப் பாருங்கள்.
மலையேற அஞ்சும் எங்கள் தலைக்காக அவர் நகர்ந்து உட்கார்ந்த நாற்காலியில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்க கடேசியில் ஒரு வீடியோவும் உண்டு...

சூரிய உதயத்துக்கு முன்னால் வீடியோ...








சூரிய உதயம்...


இந்த வீடியோவில் வேகமாற்றம் ஏதும் இல்லை. நிகழ்ந்த மாதிரியேதான். சூரியன் உதிக்கும் முன் மாறும் நிறங்களைப் பாருங்கள். இது என் டிஜிட்டல் கேமராவின் வீடியோ வசதியில் எடுத்தது. நல்ல கனமான வீடியோ யாராவது தூக்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தால் உங்களுக்கு இன்னும் அற்புதமான படம் கிடைத்திருக்கும். உங்களுக்கு வாய்த்தது இவ்வளவுதான்...

6 comments:

  1. நாகு,

    தும்மலுடன் ஆரம்பித்து தூள் கிளப்பி முடித்துவிட்டீர்கள்.சூரிய உதயம் பிரமாதம். விடியோ அதைவிட பிரமாதம். ஆமாம் நீங்கள் என்ன Troop 735 வின் ஆஸ்தான புகைப்பட நிபுணரா? படங்களும் விடியோக்களும் அபாரம்.

    ReplyDelete
  2. நன்றி பரதேசியாரே.

    நான் Troop-இன் ஆஸ்தான புகைப்படக்காரன்/ வலைத்தள-மின்னஞ்சல் நிர்வாகி...
    நிபுணர் இல்லை :-(

    ReplyDelete
  3. அற்புதம்! பகிர்தலுக்கு நன்றி நாகு.

    ReplyDelete
  4. சூரிய உதயப்படங்கள் வெகு ஜோர். எங்களையும் உங்களோடு அந்த மலைக்கு அழைத்து போனதுக்கு நன்றி நாகு.

    ReplyDelete
  5. நன்றி கவிநயா, மீனா....

    ReplyDelete
  6. அருமையான வீடியோ.
    நாங்கள் அதிகாலை நாலு மணிக்கு கிராண்ட் கேன்யானில் சூர்யோதயம் பார்த்து ரசித்தோம். எனக்கு சூர்யஉதயத்தைவிட மாலை அஸ்தமனம் மிகவும் பிடித்தது!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!