Thursday, June 18, 2009

பழமொழி வலைமொழி

நம்ம சதங்கா பழமொழி வலைமொழின்னு ஒரு தொடர் ஆரம்பித்து அழைத்திருந்தார். நாம பல பழமொழி தெரிஞ்சவங்களாச்சே,

சான் ஹோசே போனாலும் சன் டிவி விடாது... மாதிரி நிறைய விடலாம்னு பாத்தேன். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு. இது வலையைச் சார்ந்திருக்கனுமாம். அட தேவுடா.... கொஞ்சம் சுதந்திரமாக விடமாட்டேங்கறாங்கப்பா... சரி கொஞ்சம் எடுத்து விடுவோம்...

புதிய தளத்தில் மீள் பதிவு...
தொடரிருக்கும்போதே தூற்றிக் கொள்.
பதிவு தேய்ந்து டிவிட்டர் ஆன கதை.
பதிவே எழுதாதவன் தமிழ்மண வார நட்சத்திரம் ஆன மாதிரி.
தனிப் பதிவு தொடராகுமா...
வாரமும் ஆச்சு, மாதமும் ஆச்சு, தொடரப் போட்றா சோமாறி (புரியாதவர்களுக்கு - எங்களூரில் மாட்டுப் பொங்கல் அன்று சிறுவர்கள் லாரியில் ஏறி போடும் கோஷங்களில் ஒன்று - போகியும் போச்சு, பொங்கலும் போச்சு. பொண்ண குட்றா பேமானி - ஊருக்கு வெளியே பேமானி கன்னாபின்னா என்று மாறும்)

தமிழ்லயே பதிவு போட வக்கில்லாதவன், காசு கொடுத்து தளம் வைத்து பீட்டர் பதிவு போட்டானாம்.

பதிவு கால்பணம், மக்களைப் படிக்க வைக்க முக்கால் பணம்.

சிறு துரும்பும் பதிவு எழுத உதவும்.

பாஸ்டன் பாலாவ பாத்து டோண்டு சூடு போட்டுக்கிட்டாராம்(பழமொழி சொன்னா கேட்டுக்கனும். சும்மா அர்த்தம்லாம் பாக்கக்கூடாது - ஏதோ தெரிஞ்ச ரெண்டு பேரு - இத வெச்சு காமெடி கீமெடி ஆரம்பிக்க வாணாம்...)

தமிழ் சொல்லிக்குடுக்கறவங்கல்லாம் துளசியல்ல...

செந்தழல் வழி தனி வழி... (தலைவர் சொன்னதெல்லாம் பழமொழிதான்)

அவனே பதிவு எழுதி பின்னூட்டமும் போட்டுக்கிட்ட மாதிரி...

பின்னூட்டம் போட்டு வாங்கி டிராபிக்கில் உய்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் பதிவு ஊசிப்போய் சாவார்.

ஊரான் வீட்டுப் பதிவே, சுட்டியப் போட்டு கலக்கே..

பதிவு எழுத தெரியாதவனுக்கு தமிழில் தட்டச்ச தெரியலன்னு சாக்கு.

ஊரார் பதிவைப் பின்னூட்டம் போட்டு வளர்த்தால், தன் பதிவு தானே வளரும்.

பதிவு செல்லும் பாதை எல்லாம் பின்னூட்டத்துக்கு கால்கள் உண்டு.

தமிழ்மணத்தில் மொக்கைப் பதிவன். (திருப்பதியில்...)

மொக்கைப் பின்னூட்டம் போட்டாலும் அளந்து போடு...

கடைசியாக....

இந்தப் பதிவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா.....!

நன்றி சதங்கா....

9 comments:

 1. நாகு,
  நல்ல 'வலை'மொழிகள். இதையும் உங்க பட்டியலில் சேர்த்துக்குங்க:

  ஒரு நல்ல பதிவுக்கு ஒரு நல்ல பின்னோட்டம் பதம்

  பதிவுக்கு முந்து பின்னோட்டம் எழுத குந்து

  இப்பதிவுக்கு அப்பதிவு மொக்கை

  பதிவின் அழகு பின்னோட்டத்தில் தெரியும்

  பதிவும் பின்னோட்டமும் இடுகைக்கழகு

  ReplyDelete
 2. //ஊரார் பதிவைப் பின்னூட்டம் போட்டு வளர்த்தால், தன் பதிவு தானே வளரும்.//

  சூப்பர்! என்னமா கலக்கறீங்க :)

  ReplyDelete
 3. நாகு,

  அழைப்பை ஏற்று, செவ்வனே செயல்பட்டு, தொடரை அடுத்த கட்டத்துக்கு இழுத்து சென்றதற்கு நன்றி. நடூல குறள் கலந்து கலக்கிட்டீங்க :))

  நாலு பேர இழுத்து விடுங்கன்ற முக்கிய விதிய மறந்துட்டீங்களே :(

  பாருங்க பரதேசி கலக்கியிருக்காரு, அவரையும் இழுத்து, ஒரு தனிப் பதிவா போட சொல்லுங்க.

  ReplyDelete
 4. நன்றி பரதேசி. என்னுடைய வலைமொழியெல்லாம் உங்க வலைமொழி முன்னால எடுபடல. எல்லாமே சூப்பர். எனக்கு மிகவும் பிடித்தது,
  // பதிவின் அழகு பின்னூட்டத்தில் தெரியும்//

  படம் எல்லாம் மாத்தியிருக்கீங்க போல. அது என்ன ரகசியமா ஒரு தென்காசி தட்டையன்ஸ்னு ஒரு கட்சி? என்னதான் அப்படி எழுதறீங்க ரகசியமா... :-) ஏதாவது குடும்ப கும்மியா?


  கவிநயா - பாராட்டுக்கு நன்றி.

  சதங்கா - இப்பதான் ஒரு தொடருக்கு மக்கள கூப்பிட்டு ஒன்னும் நடக்கலை(எப்படி உள்குத்து). அதான் மக்கள சுதந்திரமா விட்டுட்டேன். :-)

  ReplyDelete
 5. //இப்பதான் ஒரு தொடருக்கு மக்கள கூப்பிட்டு ஒன்னும் நடக்கலை(எப்படி உள்குத்து). //

  நான் அழைத்த பதிவுக்கு கூப்பிட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நீங்க விடுத்த அழைப்பிற்கு, யாரை அழைப்பது என்று பெரும் சிக்கல். காரணம் உங்களுக்கே தெரியும். எந்த பதிவுக்கு சென்றாலும், அங்க பட்டாம்பூச்சி படம் சிறகடித்துப் பறக்கிறதே !கொஞ்சம் காலம் ஆகும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 6. இப்பதான் கவனிச்சேன்...
  //அழைப்பை ஏற்று, செவ்வனே செயல்பட்டு,//
  ஏதாவது நிஜமாவே கட்சி கிட்சி ஆரம்பிச்சிட்டீங்களா? :-)

  ReplyDelete
 7. //இப்பதான் கவனிச்சேன்...
  //அழைப்பை ஏற்று, செவ்வனே செயல்பட்டு,//
  ஏதாவது நிஜமாவே கட்சி கிட்சி ஆரம்பிச்சிட்டீங்களா? :-)//

  யார் யாரோ ஆரம்பிக்கிறாங்கனு 'வில்லு' .. இல்லை இல்லை 'விசுலு' பறக்குது. நாமெல்லாம் எம்மாத்திரம் :))

  ReplyDelete
 8. நாகு தூள் கெளபீட்டிங்க நாகு

  இத்தனை வலைமொழியா - நானும் எழுதறேன்னூ வேற சதங்காகிட்டே சொல்லி மாட்டிக்கிட்டேன் - சொ.செ.சூ

  பாப்போம்

  ReplyDelete
 9. படு சூப்பர் நாகு. எனக்கு ரொம்ப பிடிச்சது:

  "சிறு துரும்பும் பதிவு எழுத உதவும்."

  எவ்வளவு பெரிய உண்மையை இப்படி குறள் கணக்குல கச்சிதமா சொல்லிடீங்க!

  ஷேவ் பண்ணி நான் முகத்தை வெட்டிண்டா நீ வருத்தபடாம ஹையா ஒரு பதிவுக்கு ஆச்சுன்னு கும்மி அடிப்ப போல இருக்கேன்னு என் கணவர் பொலம்பல் தான் நியாபகம் வருது.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!