பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு முன்பு, இந்த பட்டமளிப்பு தத்துவம் பதிவிட சோம்பி இருப்பவர்களை பதிவிட செய்ய ஒரு மிகச்சரியான உத்தி. பட்டம் கொடுத்தாச்சுன்னா வேற வழியே இல்லை எழுதித்தான் ஆக வேண்டும். இதை கொண்டு வந்ததற்கு அனைவருக்கும் நன்றி.
முதலில் நான் பட்டாம்பூச்சி விருதினைத் தருவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கும் வேதாந்தி. இவர் அடுத்தவர் கதையிலும் கதை பண்ணுவதில் கெட்டிக்காரர். ஒரு புறம் அப்பாக்களை சிலாகித்து எழுதுவார் மறுபுறம் அரசியல்வாதி அப்பாக்களைத் தாக்கியும் எழுதுவார். இவரால் பல விஷங்களை பல கோணங்களில் பார்க்கவும் முடியும் அதை எழுதவும் முடியும். வாங்க விருதைப் பிடிங்க.
இரண்டாவதாக அஜாதசத்ரு. கல்கியின் எழுத்து சாயல் இவரிடத்தில் உண்டு. நிறைய யோசிப்பவர் என்பதும், அதை எழுத்தில் கொண்டுவர முயல்பவர் என்பதும் இவரது ஆரம்பகால எழுத்தில் தெரிந்தது. இரண்டு பதிவிற்குப் பிறகு இவரைக் காணவில்லை. தனிக் கட்சி ஏதும் துவங்கி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. இந்த விருதின் மூலம் இவரை மீண்டும் நமது வளைப்பூவில் எழுதத்தூண்டலாம் என்று இவருக்கு இந்த விருது.
மூன்றாவதாக விருதினைப் பெற அழைப்பது நாராயணன். இவரது சங்கீத பற்றும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நமக்கெல்லாம் தெரியும். சமீபத்தில் நமது வளைப்பூவில் எழுதி கலக்கும் இவரது பின்னூட்டமும் மிகப் ப்ரபலம். ஒவ்வொரு முறை நாம் இந்தியா செல்லும் போதும் நாம் படும் பாட்டை நறுக்கென சொல்லி நம்மை கவர்ந்தவர். ஐயா வாங்க பிடிங்க உங்க விருதை.
எனக்கு இந்த விருதை வழங்கிய ஜெயகாந்தனுக்கு மிக்க நன்றி. விருது பெரும் வேதாந்தி, அஜாதசத்ரு, நாராயணன் மூவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளுக்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
முரளி இராமச்சந்திரன்
விருது பெற்றவர்களுக்கும் , முரளிக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete//விருது பெற்றவர்களுக்கும் , முரளிக்கும் வாழ்த்துக்கள்!//
ReplyDeleteஅதே ! அதே !!
பட்டாம்பூச்சி பிடிச்சவருக்கும் பிடிக்க போறவங்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteதல - எல்லாம் சரி... நீங்க ஒன்னும் பட்டாம்பூச்சி படம் எடுத்து போடலியா? :-)
ReplyDeleteநான் இந்த பூச்சி விளையாட்டுக்கு எல்லாம் வரலேப்பா
ReplyDeleteஆமா இந்த பட்டாம்பூச்சி எல்லாம் ஆண்களுக்கு மட்டும் தானா ?
மீனா, கவிநயா எல்லாம் போட்டு கலக்கிட்டு இருக்காங்க.
அவங்களை எல்லாம் தவிர்த்து இந்த புதிய கத்துக் குட்டிக்கு (வேதாந்தி) என்ன விருது?
இதற்கு எல்லாம் ஒரு ஞானம் வேண்டும். அது நம்ம கிட்ட இல்லப்பா.
-வேதாந்தி.
முரளி,
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும் வேதாந்தி, அஜாதசத்ரு மற்றும் நாராயணனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்களும், நீங்கள் விருது கொடுத்த அனைவரும் நம்ம தமிழ் சங்கத்துக்கு மேலும் நிறைய எழுத இதோ என் கோரிக்கையை பட்டாம்பூச்சி விருதோடு சேர்த்து பிடியுங்கள்.