Thursday, July 02, 2009

மைலாப்பூரில் திருமணம்.


ரிச்மண்டில் வளர்ந்த தீபக், ஜனனிக்கு நேற்று சென்னை மயிலாப்பூரில் திருமணம் நடந்தது. ரிச்மண்டில் இருந்து ஓரிரு குடும்பங்கள் தவிர மற்ற அனைவரும் இந்தத் திருமணத்திற்கு போயிருக்கிறார்கள். ரிச்மண்ட் தமிழர்கள் தவிர வேறு ஒரு சில உள்ளூர் பிரபலங்களும் இந்தத் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தார்களாம். :-)

மணமக்கள் தீபக் - ஜனனி, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

தினமலர் தளத்தில் இருந்து...

சென்னை : சென்னையில் நேற்று நடந்த "தினமலர்' இல்லத் திருமண நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் கருணாநிதி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்."தினமலர்' வெளியீட்டாளர் இரா.லட்சுமிபதியின் மகள் வழி பேரன் தீபக்கின் திருமணம், மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மல்லிகா-நடராஜமூர்த்தி தம்பதியினரின் மகன் தீபக் என்ற சுப்ரமணியனுக்கும், சுபா-சுந்தர் தம்பதியினரின் மகள் ஜனனிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இவர்கள் அமெரிக்கா, வெர்ஜினியாவில் வசித்து வருகின்றனர். அமெரிக்க ராணுவத்தில் தீபக் நான்காண்டுகள் பணிபுரிந்துள்ளார். அமெரிக்க கப்பல் படை புலனாய்வுப் பிரிவில் இருந்தபோது, இரண்டாண்டுகள் ஈராக் போரின் போது, அங்கு பணியாற்றியுள்ளார். தீபக், அமெரிக்க குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மணமகன் தீபக் அமெரிக்க "பாஸ்டான் பல்கலைக் கழகத்தில் மாஸ்டர்ஸ் படித்து வருகிறார். அதே பல்கலைக் கழகத்தில் மணமகள் ஜனனி சட்டம் பயின்று வருகிறார்.ஜூலை 1ம் தேதி மாலை 6.30 மணியளவில் தீபக்-ஜனனி திருமண நிச்சயதார்த்தம் மயிலாப்பூர் ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது. கலைமாமணி லால்குடி கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது. தீபக்-ஜனனியின் திருமணம் நேற்று காலை 9.15ல் இருந்து 11 மணிக்குள் பெரியவர்கள் வாழ்த்துக்களோடு இனிதாக நடந்தது. மாலை 6.30 மணி முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கலைமாமணி அருணா சாய்ராம் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது.முதல்வர் வாழ்த்து: தமிழக முதல்வர் கருணாநிதி நேற்றிரவு 8 மணிக்கு நேரில் வந்து, மணமக்களை வாழ்த்தினார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், "மாத்ருபூமி' வீரேந்திரகுமார், "தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன், நாடக நடிகர்கள் கிரேசி மோகன், மாது பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி, லால்குடி ஜெயராமன், கிருஷ்ணா சுவீட்ஸ் கிருஷ்ணன் மற்றும் முரளி, டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.வரவேற்பில் கலந்து கொண்டவர்கள்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலர் சுலோச்சனா சம்பத், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். தீயணைப்புத்துறை இயக்குனர் நட்ராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஏ.வி.எம்.சரவணன், சிவாஜி புரொடக்ஷன் ராம்குமார், நடிகர்கள் டி.ராஜேந்தர், சரத்குமார், சிவகுமார், சூர்யா, பிரசாந்த், நடிகைகள் மனோரமா, சச்சு, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.தே.மு.தி.க., இளைஞரணி அமைப்பாளர் சுதீஷ், தமிழக காங்., தலைவர் தங்கபாலு, அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், காங்., சட்டசபைத் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தொழிலதிபர் கிருஷ்ணராஜ வானவராயர், வி.எச்.பி., தலைவர் வேதாந்தம், இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், பா.ஜ., தலைவர் இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.பத்திரிகை அதிபர்கள் மற்றும் ஐ.என்.எஸ்., நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திலக்குமார், ரவீந்திரகுமார், அதுல் மகேஸ்வரி, விலாஸ் மாரத்தே, நரேஷ் மோகன், மகேஷ்லர்பேரி, சோமேஷ் சர்மா, கிரண் தாக்கூர், பிஜி வர்கீஸ், விவேக் குப்தா, சங்கர், மன்மோகன், எச்.என்.காமா, பரிஷ்நாத், வெங்கட்ராம ரெட்டி, பிரதாப் பவார், வீரேந்திரகுமார், ஆதித்தன், கிரஷ் அகர்வால், சம்ஹித் பால், சந்திரன், தேவேந்திர தர்தா, ஜெஸ் தர்தி, ரவீந்திர தாரிலால், பிரதீப் குப்தா, சஞ்சய் அஜாரி, மொகித் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மணமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. "தினமலர்' பங்குதாரர் டாக்டர் இரா.வெங்கடபதி, ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதி மற்றும் பங்குதாரர்கள் இரா.ராகவன், இரா. சத்தியமூர்த்தி மற்றும் எல்.ராமசுப்பு, கி.ராமசுப்பு, எல்.ஆதிமூலம், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட தினமலர் குடும்பத்தினர், அனைவரையும் வரவேற்றனர்.
4 comments:

 1. இரு வீட்டாருக்கும், மணமக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். (ஜனனி மருத்துவம் படிக்கிறார் என்று கேள்விபட்டிருக்கிறேன். தினமலரில் சட்டம் படித்தவர் என்று போட்டிருக்கிறார்கள்.)

  ReplyDelete
 2. நம்மூர் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. ஜெயகாந்தன் - ஜனனி சட்டப்படிப்புதான் படித்துக் கொண்டிருக்கிறாள். தீபக்கும் வேலை பார்த்துக் கொண்டு நிர்வாகவியல் படித்துக் கொண்டிருக்கிறான்.

  இதுவரை படித்துக் கொண்டிருந்தார்கள். இனிமேல் படிப்பு என்ன ஆகிறது என்று பார்ப்போம் :-)

  ReplyDelete
 4. தீபக் - ஜனனி - இருவருக்கும் ரிச்மாண்ட் தமிழ் மக்களின் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  -வேதாந்தி

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!