Saturday, July 04, 2009

பரதேசிக்கு பட்டாம்பூச்சியா?

பெரியோர்களே! தாய்மார்களே! ப்ளாகிகளே! எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி கௌரவித்த ஜெயகாந்தன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னடா விருது் வாங்கியவுடன் மேடைப்பேச்சு பேசி பெனாத்தறேன்னு கேட்கறீங்களா? விருது/பட்டத்தின் மகிமை அது!! யார் விருது் வாங்கினாலும் உடனே இது மாதிரி ஆரம்பிப்பது தான் வழக்கம்.
நான் ஏதோ முடிந்தவரை கடித்துக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு விருதைக்கொடுத்து என்னை மேலும் ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி. ஜெயகாந்தன் பற்றி சொல்லத்தேவையில்லை. அவர் படம் எடுப்பதிலும் வல்லவர். பாடம் கற்பிப்பதிலும் வல்லவர்.

நான் வழங்கும் முதல் விருது மீனா சங்கரன் அவர்களுக்கு. சமீபத்தில் தமிழ்சங்க வலையில் ப்ளாக ஆரம்பித்த மீனா, தனது அலாதியான எழுத்தின் மூலம் பலரைக்கவர்ந்தவர். தேங்காய் மட்டையில் ஆரம்பித்து, மிக்சரை கலக்கி, கட்டி (காது) யை ஆராய்ந்து, வடை வரை சென்ற மீனா சங்கரன் அவர்களின் எழுத்தாற்றல் அபாரம்.

எனது அடுத்த விருது ஸ்ரீலதா அவர்களுக்கு. கவிதை புனைவதில் இவர் வல்லவர். இவர் பட்டாம்பூச்சியைப்பற்றி இயற்றிய கவிதையைப்படியுங்கள் இங்கே. ப்ரெஞ்சு மொழியிலும் வல்லவர். ஆரம்பத்தில் அவ்வப்போது தமிழ்சங்க வலைதளத்தில் ப்ளாகிய இவரக்காணாவில்லை. இந்த விருதைக்கொடுத்து அவரை மீண்டும் ப்ளாக அழைக்கிறேன்.

எனது அடுத்த விருது பித்தன் பெருமானுக்கு. இவரின் அரசியல் அலசல்களும், திரைப்பட விமர்சனங்களும் அபாரம். முதலில் தமிழ்சங்க வலைத்தளத்தில் ப்ளாகிய இவர் தனிக்கட்சி ஆரம்பித்து ப்ளாகிக்கொண்டிருக்கிறார். உதாரணம் இங்கே. அவ்வப்போது சுவாசியமான பின்னூட்டங்களும் எழுதுவார். மேலும் ப்ளாக வாழ்த்துக்கள்.

சரி, மூன்று பேருக்கு விருது கொடுத்தாகிவிட்டது. மூவருக்கும் வாழ்த்துக்கள்!



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

2 comments:

  1. "பெரியோர்களே! தாய்மார்களே! ப்ளாகிகளே! எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி கௌரவித்த ஜெயகாந்தன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்."

    சபாஷ்! ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சி மீடிங்க்ல போய் உட்கார்ந்த மாதிரி இருக்குங்க பரதேசி. உங்க ஸ்டைல்லயே நானும் இதோ முயற்சி பண்ணறேன்.

    ------
    சக ப்ளாக் உலக சகோதர சகோதரிகளே! பட்டாம்பூச்சி பூச்சி விருதை இரண்டாவது முறையாக எனக்கு வழங்கி கௌரவித்த மாண்புமிகு பரதேசி அவர்களே! உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றியை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். என் அம்மா அன்றே ஒன்று சொன்னாள். அதுவும் நன்று சொன்னாள். "சோம்பேறித்தனம் ஆகாதடி மீனா உனக்கு" என்று. அம்மாவின் பேச்சு வெறும் காச்சு மூச்சு என்றெண்ணி சோம்பியிருந்த எனக்கு இது ஒரு நல்ல ஒரு படிப்பினை.

    சதங்கா எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. நடுவில் ஒரு கல்யாணத்தில் இரண்டு நாட்கள் மூன்று வேளை மொக்கி விட்டு இரையெடுத்த பாம்பு போல் மயக்கத்தில் இருந்து விட்டு நிதானமாக தமிழ் சங்க ப்ளாக் பக்கம் வந்து எட்டி பார்த்தால் ஒரு பட்டாம்பூச்சி குடும்பமே இங்கு பறக்கிறது. எனக்கு ப்ளாக் உலகில் பலரைத்தேரியாது. எனக்கு தெரிந்த நாலு பேருக்கு அடித்து பிடுத்து கொண்டு நீங்களெல்லாம் விருது கொடுத்து விட்டீர்களே, இது நியாயமா? இனி எந்தக்கடலில் நான் வலையை வீச? புலமையில் சிறந்த பெரியோர்களே, இச்சபையில் நியாயம் கூறுவோர் யாருமே இல்லையா? ஈசா, நான் என் செய்வேன்?
    ----

    விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. I was really touched by your thoughtfulness Mr.Parudesi. Thanks a million for the wonderful recognition and the butterfly award.

    This also brings back golden memories :
    My Professor Dr.K. M. Shantha used to call me "BUTTERFLY" She is the first person who named me so. Secondly, my sister and brother-in-law calls me Butterfly. Now you have given me the Butterfly award! I have written many poems about Butterflies both in English and tamil. And thanks for mentioning about it. I feel really honored since it has come from you!

    I take this opportunity to pass on the Butterfly award to all the people who write poetry no matter in what language but to all the poets in the world!

    Thanks again! Keep writing!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!