Saturday, May 30, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (தொடர் - முதல் பாகம்)

ஒவ்வொரு முறையும் இந்தியா போகலாம்னு ஒரு யோசனை வந்த ஒடனே மட மடன்னு சில எண்ணங்கள் விரைந்தோடி வருகிறது. சென்ற முறை இங்கு வந்திறங்கியதும் எடுத்த சில சபதங்கள் நினைவிற்கு வருகின்றது. நம்முள் சிலர்/பலர் எங்களின் இதே ஆதங்கங்களை அனுபவத்திருக்க கூடும். மறுமொழிகளின் மூலம் பகிர்ந்து கொள்ளவும்.

1. அடுத்த முறையாவது குறைந்த பட்ச எண்ணிக்கை(அவசிய பட்ட அளவு) பெட்டிகளை எடுத்து செல்ல வேண்டும். ஏன் தான் இப்படி முக்கி மொணகி எடுத்து செல்கின்றோமோ?

2. அடுத்த முறை இந்தியாவிலேயே கிடைக்கின்ற சாமான்களை அள்ளி செல்வதை தவிர்த்தால் இதை நம்மால் சாதிக்க முடியுமே.

3. இரோப்பாவில் நாம் சற்று நேரத்திற்காக (transit) வந்திறங்கும் விமான தளங்களில் ஒரு மூலயிலிரிந்து இன்னொரு மூலைக்கு நாம் கையில் எடுத்து செல்லும் பெட்டிகளை (hand luggage) மூச்சு திணற திணற இழுத்து செல்லும் அவலம் எண்ணியாதும் இனிமேலாவது இந்த எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று எடுத்த சபதம்.

4. அடுத்த முறையாவது எடுத்து செல்லும் பேட்டிகள் அனைத்தும் சற்று சிறியதாக இருக்கட்டும். சென்ற முறை பயணத்தில் அடிபட்ட/இடிபட்ட சில பெட்டிகளுக்கு  ஒய்வு குடுத்து வாகும் பெட்டிகளை சற்றே சிறியதாக வாங்க வேண்டும் என்ற கனவு/நினவு.




5. இம்முறையாவது நிறைய சுற்றுலா இடங்களை பார்க்கவேண்டும்.

6. முடிந்த வரை எல்லா விதமான மாம்பழங்களும் ஆசை தீருமளவிர்ற்கு தின்று மகிழவேண்டும்.


7. எல்லா உறவினர்களையும் கண்டு அவர்களுடன் சிறிது நேரமாவது பொழுது கழிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு அந்த உறவுகளையெல்லாம் உணர்வு படுத்தவேண்டும்.

8. சிறு வயதில் நம்முடன் விளையாடிய, பள்ளிக்கு சென்ற நண்பர்களை எல்லாம் சந்திக்க வேண்டும்.

9. நிறைய இசை நிகழ்ச்சிகளுக்கும், சினிமா படங்களுக்கும் சென்று மகிழ வேண்டும்.

10. இதுபோல் பல பல

இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம்  குறிப்பிடத்தக்கது என்னவென்றால் , எமது பயணங்களின் நடுவே யாரெல்லாம் இந்திய செல்வதாக அறிவித்திருக்கிரார்களோ அவர்களுக்கெல்லாம் எங்களுடைய மேல் குறித்திருக்கும் ஞான திருஷ்டியை போதனை வடிவில் குடுத்திருக்கிறோம் (அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும்).

இந்த எண்ணங்களையெல்லாம் நினவு கூர்ந்து இம்முறை முடியுமா என்ற கேள்விக்கு இனி வரும் பாகங்களில் பதில் சொல்கிறேன். ஒரு யூகம் வந்திருக்கும் உங்களுக்கு. இருந்தாலும் பொறுத்திருங்கள், பதில் அறிய.

இனிவரும் பாகங்கள்:

இரண்டாம் பாகம்: டிக்கெட் வாங்கும் படலம்/அவலம்
மூன்றாம் பாகம்: பயண நாள் நெருங்குகின்றது (ஒரு மாசமே உள்ளது)
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார். (இரண்டே நாட்கள் உள்ளன)

பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

நாராயணன்

5 comments:

  1. வருக வருக நாராயணன்.

    பின்னூட்டப் பாவலரிலிருந்து பதிப்பாளராக பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    குறைந்த சுமை நிறைந்த சந்தோஷம் என்பதை உடல் நிலையில் கூட கடை பிடிக்காத ஒரு சிலரில் நானும் ஒருவன் (கஷ்டப் பட்டு பெரிசா தொப்பைய வளர்த்தா, அதை காசு கொடுத்து ஓடி ஓடி கரைக்கனும்னு சொன்னா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்).

    கைப் பையிலேயே (Hand luggage) 43 பவுண்ட் ஜாமான் செட் எடுத்துட்டு போறவங்க நாங்க. அதனால யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசரீங்க.

    (ஹூம் நமக்கும் நீங்க சொன்னா மாதிரி கை வீசிட்டு இந்தியா போக ஆசைதான், ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனா அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மட்டும் மேய்க்கங்கரதுதான் நம்ம வாழ்க்கை. )

    உங்க அறிவுரை RSS Feed என்ன என்று நாகு சொல்லித்தந்து விட்டார். இருவருக்கும் ரொம்ப நன்றி.

    பித்தன்.

    ReplyDelete
  2. வருக நாராயணன்! தமிழ் சங்க ப்ளாகிகள் கூட்டத்தில் சேர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும் போதும் இம்மாதிரி பட்டியல் போட்டும் ஒன்றிரண்டு தான் சாத்தியமாகிறது.
    <1. அடுத்த முறையாவது குறைந்த பட்ச எண்ணிக்கை(அவசிய பட்ட அளவு) பெட்டிகளை எடுத்து செல்ல வேண்டும்.> - ஒவ்வொரு பெட்டியையும் 16 முறை தூக்கி எடை மெஷினில் நின்று எடை பார்த்து பெண்டு நிமிறாமலாவது இருக்கும்

    <2. அடுத்த முறை இந்தியாவிலேயே கிடைக்கின்ற சாமான்களை அள்ளி செல்வதை தவிர்த்தால் இதை நம்மால் சாதிக்க முடியுமே.>
    - இதுவும் சரி. இப்போதெல்லாம் எதை வாங்கிக்கொண்டு போனாலும் "ஓ இது அவ்வளவு விலையா? நம்ம சிடி செண்டரிலேயே மலிவா கிடைக்குமே இது! ஓ அதுவா? பர்மா பஜாரிலேயே சீப்பா கிடைக்குமே அது" என்ற கமெண்ட்ஸ்களையும் தவிற்கலாமே
    <7. எல்லா உறவினர்களையும் கண்டு அவர்களுடன் சிறிது நேரமாவது பொழுது கழிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு அந்த உறவுகளையெல்லாம் உணர்வு படுத்தவேண்டும்.> - இது ஒரு விதத்தில் நடந்து விடுகிறது. சில முறை நாம் செல்லும் போது மற்ற குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை இருப்பதில்லை. பெற்றோரும் மிக 'பிஸி' யாக இருந்து விடுகின்றனர்.

    <8. சிறு வயதில் நம்முடன் விளையாடிய, பள்ளிக்கு சென்ற நண்பர்களை எல்லாம் சந்திக்க வேண்டும்.> - சிறிது மெனக்கட்டு பள்ளி, கல்லூரி நண்பர்களை முன் கூட்டியே தொடர்பு கொண்டு ஓறிருவரை சந்திக்க முடிகிறது.

    என்ன சொன்னாலும் இந்தியாவுக்கு போவதென்றாலே அது ஒரு தனி சுகம்.

    ReplyDelete
  3. வரவேற்கிறேன் நாராயணன்.

    தமிழ்சங்கப் பதிவுகள் இப்போது மீண்டும் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.
    ஆரம்பமே சுவையான தலைப்பில். ஜமாயுங்கள்.

    அருமையான பட்டியல்.

    //இம்முறையாவது நிறைய சுற்றுலா இடங்களை பார்க்கவேண்டும்.//
    நான் பார்க்கவேண்டும் என்று வைத்திருக்கிற இந்தப் பட்டியலில் நிறைய கோவில்கள் உண்டு. போனமுறை குருவாயூர் போயிருந்தோம். இவ்வளவு தூரம் வந்தது கோவிலுக்காகவா என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் புத்திர சிகாமணிகள். என்ன செய்வது...

    ReplyDelete
  4. நாரீ,

    சூப்பர் பதிவு. பட்டியலில் நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து சபதங்களும் நாங்களும் எடுத்திருக்கோம். வரலாற்றுப்படி பார்த்தால் (historically speaking), இந்த சபதங்கள் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறு எங்களுக்கு மிகவும் குறைவு. பார்ப்போம்.

    ReplyDelete
  5. I cant believe the purchasing/packing days during my first trip. Later trips have been smoother due to my learnings earlier! Good start analyzing!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!